Friday, March 31, 2017

சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி | வாங்க சமைக்கலாம்

மீன்னுக்கு தேவையான பொருட்கள்:
சால்மன் மீன்/கலா மீன்- 200 கிராம் உப்பு - 1/2 டீஸ்புன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்புன் மிளகாய் தூள் - 1 டீஸ்புன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்புன் குழம்புக்கு தேவையான பொருட்கள்: சமையல் எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 தோல் உரித்த பூண்டு - 4-6 இஞ்சி - 1 டீஸ்புன் நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்புன் மிளகாய் தூள் - 1 டேபில் ஸ்பூன் எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப தேங்காய் பால்- 150 மிலி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1) மீனை சுத்தம் செய்து 1 இஞ்ச் துண்டுகளாக நறுகக்வும். 2) உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறை சேர்க்கவும். 3) நன்றாக பிசைந்து 15 முதல் 30 நிமிடம் வரை ஊற வைக்கவும். 4) சுடான கடாயில் எண்ணெய்யை ஊற்றி பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து சில நொடிகளுக்கு வதக்கவும். 5) பிறகு வெங்காயத்தை பொன் நிறமாக வதக்கவும். 6) மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின்னர் தக்காளி மற்றும் சிறிது தண்ணீரை சேர்க்கவும். 7) மிதமான தீயில் தக்காளி வதங்கும் வரை சமைக்கவும். 8) அரை கப் நீரை சேர்த்து கொதிக்க விடவும். 9) ஊற வைத்த மீனை சேர்த்து சுமார் 7 நிமிடங்கள் வேக விடவும். 10) சுட சுட மீன் குழம்பு தயார்


1 comment:

  1. உங்க சமையல் கண்டு பிடிப்போ ! நன்றி.
    நான் மீன் சாப்பிடுவதில்லை.இது மாதிரி கிழங்கை பாவித்து செய்துபார்க்கலாம் என்றிருக்கிறேன்.

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot