Friday, March 17, 2017

பிஜேபியின் பயங்கர திட்டம் அம்பலம்

தமிழகத்தில் மத கலவரம் வருமா?
திடுக்கிடும் ஆதாரம்.

பிஜேபியின் தமிழக திட்டம் அம்பலம்
தமிழகத்தில் ஜெயிக்க பிஜேபி தீட்டும் திட்டம் அம்பலம்
பிஜேபியின் பயங்கர திட்டம் அம்பலம்

ஐந்து சம்பவங்களை நாம் பார்க்க போகிறோம்.

1) பிஜேபியின் பொன் ராதாகிருஷ்ணனின் பேட்டி அக்டோபர் 23 அன்று வெளிவந்த நாளிதழில்
இடம் பெற்றது. அப்போது ஜெயலலிதா ஒரு மாதமாய் அப்பல்லோவில் இருக்கிறார்.

read the content.

ஜெயலலிதா அப்பல்லோவில் இருக்கும் போது பொன் ராதாகிருஷ்ணன் இப்படி பேசியிருக்கிறார்.
அவர் சொன்னது போல் மிக பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து விட்டது.
ஜெயலலிதா இறந்தார். தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது.

நடக்க போவதை முன் கூட்டியே சொன்ன பொன்ராதாகிருஷ்ணன் ஒரு தீர்க்கதரசியா. இல்லை.
பொன்ராதகிருஷ்ணன் அவரின் கட்சியின் திட்டங்களை தான் தெளிவாக சொல்கிறார்.

2) ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எப்போதோ எடுக்கப்பட்ட பின்லேடன் போட்டோவை காட்டி தேச விரோதிகள் நுழைந்து விட்டார்கள்
என்று பிஜேபியினர் கூறினார்கள்.

3)நெடுவாசல் போராட்டத்திலும் தேச விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று பிஜேபியினர் கூறினார்கள்.
அப்போது பொன் ராதாகிருஷ்ணன் என்ன சொன்னார் தெரியுமா?
தேச விரோத சக்திகள் போராட்டத்தை திசை திருப்புகிறார்கள்.
அரசியல் கட்சிகள் நெடுவாசல் போராட்டத்தை ஆதரிப்பது தவறான செயல்.
தமிழகம் முழுக்க பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் பயங்கரவாத செயல்களினால், தமிழகம் சுடுகாடாய் ஆகி விடும்.
எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது என்றார்.

4) சமீபத்தில் மீனவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். இலங்கை அரசு தங்களின் கடற்படை சுடவில்லை என்றார்கள்.
பிஜேபியின் எச்.ராஜா என்ன சொன்னார் தெரியுமா?
விடுதலைபுளிகளின் அபிமானிகள் தான் மீனவரை சுட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது என்றார்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது, விசாரனை தொடங்குவதற்கு முன்னரே, அப்போது சட்ட அமைச்சராய்
இருந்த சுப்ரமணியசுவாமி, விடுதலைப்புளிகள் தான் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்று கூறினார் என்பது
நினைவுகூற வேண்டிய சம்பவம்..

5) சமீபத்தில் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சேலம் வந்தார்.
அவர் முத்துகிருஷ்ணன் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி விட்டு நிருபர்களை சந்திக்க வந்தார்.
அப்போது அங்கு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் அவருக்கு
எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு வாலிபர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனை
நோக்கி செருப்பை வீசினார். செருப்பு அவர் மீது படாமல் டி.வி. மைக் மீது பட்டு கீழே விழுந்தது. உடனடியாக பொன்.ராதாகிருஷ்ணனை
போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். செருப்பு வீசிய வாலிபர் சாலமனை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பொன் ராதாகிருஷ்ணம் என்ன சொன்னார் தெரியுமா?
நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறேன். தமிழகத்தில் நடக்கும் எல்லா நிகழ்வுக்குப் பின்னாலும் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள்.
காவல்துறை இதில் மெத்தனமாக உள்ளது. பயங்கரவாதிகள் அனைத்து பிரச்னைகளிலும் ஊடுருவி, குழப்பம் விளைவிக்கிறார்கள்.
இது தொடர்ந்தால், தமிழகம் சுடுகாடாகிவிடும். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் செயல்பட முடியாது. இது தடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகள்
ஊடுறுவலை போலீஸ் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.

கெஜ்ரிவால் மீது பல தடவை ஈங் வீசப்பட்டது.
அதுவும் பயங்கரவாதிகளின் செயலா என்று பொன் ராதாகிருஷணன் விளக்கம் அளிக்க வேண்டும்.
அமைதி பூங்காவாய் இருக்கும் தமிழகம் சுடுகாடாகி விடும் என்று மிரட்டுகிறார்.
ஒன்று மட்டும் தெளிவா தெரியுது. வேண்டுமென்றே ஒரு பதற்றமான சூழலை தமிழகத்தில் கொண்டு வர பிஜேபி முயற்சி செய்கிறார்கள்.

செருப்பு வீசினாலும் பயங்கரவாதிகள்னு சொல்றாங்க.
ஹட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்னு சொன்னாலும் பயங்கவரவாதிகள்னு சொல்றாங்க.
ஜல்லிக்கட்டு நடத்தனும்னு சொன்னாலும் பயங்கரவாதிகள்னு சொல்றாங்க.
கடலில் மீனவன் கொல்லப்பட்டால் விடுதலைப்புளிகள்னு சொல்றாங்க.

இப்படி எல்லாத்துக்கும் தேச விரோதிகள், பயங்கரவாதிகள் தான் காரணம்னு இவங்க ஏன் சொல்றாங்க?
காரணம் இல்லாமலா சொல்வாங்க.

தமிழகத்தில் ஒரு மிக பெரிய மத கலவரத்தை உருவாக்க பிஜேபி முயற்சி செய்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.
அதற்கான விதையை தான் இப்போது அவர்கள் தூவிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்கள் என்ற அடையாளத்தை அடைத்து ஹிந்து முஸ்லீம் என்ற அடையாளத்தை கொண்டு வந்தால்
தான் பிஜேபியால் தமிழகத்தில் வெல்ல முடியும்.

மத கலவரத்தின் மூலம், ஹிந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, முஸ்லீம் மக்கள் ஆபத்தானவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவார்கள்.
முஸ்லீம் மக்களுக்கு ஹிந்து மக்களால் பிரச்சனை வரும் என்ற தோற்றத்தை உருவாக்குவார்கள்.
இப்படி ஒரு நிலை வந்து விட்டால், பிஜேபி சுலபமாக தேர்தலில் ஜெயிப்பார்கள்.
உத்தரபிரதேசத்திலும் வட மாநிலத்திலும் இந்த முறையில் தான் அவர்கள் ஜெயிக்கிறார்கள்.

மக்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.
ஹிந்து முஸ்லிம் மக்கள் தங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்.
ஹிந்து மக்களின் வீட்டு விசேசங்களுக்கு முஸ்லீம் மக்களை அழைக்க வேண்டும்.
அதே போல் முஸ்லீம் மக்களும் ஹிந்து மக்களை அழைக்க வேண்டும்.
சகோதரத்துவத்தை வலிமைப்படுத்த வேண்டும்.

நம்முடைய அடையாளம் ஹிந்துவோ, முஸ்லிமோ அல்ல.
தமிழர்கள் என்பதே நம்முடைய அடையாளம்.
அதை என்றும் நாம் மறந்து விட கூடாது.

நமக்குள் ஒற்றுமை இருந்தால், எந்த தீய சக்தியும் நம்மை பிரித்து ஆள முடியாது.
இதை கேட்ட அனைவருக்கும், நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot