Tuesday, March 28, 2017

”முதலமைச்சர் ரஜினி” - அதிர்ச்சி திட்டம் அம்பலம்

இலங்கையில் தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
அவர்கள் சுதந்திரம் இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு தமிழர்களுக்கு சகஜமான
நிலை தான் இருக்கிறது என்பதை உலகிற்கு காட்ட தான் ரஜினியை அழைத்து 150 வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்று
திருமாவளவன், வைகோ, சீமான் ஆகியோர் கூறினார்கள்.

அவர்களின் கோரிக்கயை ஏற்று இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக ரஜினி கூறினார்.
ரஜினியின் இலங்கை பயணம் ரத்து ஆனதால் கதறி அழுபவர்கள் யார் தெரியுமா?
பிஜேபி, இலங்கை அமைச்சர்கள் மற்றும் ராஜபக்‌ஷேவின் மகன். இதன் மூலமே ஒன்று தெளிவாய் தெரிகிறது.
திருமாவளவன் சொன்னது உண்மை தான் என்று புரிகிறது.

இலங்கையின் அமைச்சர் என்ன என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
ரஜினிகாந்த் இலங்கைக்கு வந்திருந்தால், நாங்கள் பிடித்து வைத்திருக்கும் தமிழர்களின் படகுகளை விடுவித்து
இருப்போம் என்று சொல்கிறார்.

“நான் அரசியல்வாதி அல்ல” என்று ரஜினிகாந்த் தன் அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே.
ஆனால் நடப்பவதை அனைத்தும் இவர் ஒரு அரசியல்வாதி தான் என்று தெளிவாய் காட்டுகிறது.
இரு நாட்டு அதிகாரிகள் பேசினாங்க. இரு நாட்டு அமைச்சர்கள் பேசினாங்க.
அப்ப எல்லாம் படகுகளை விடலை.

ஆனா, ரஜினி இலங்கைக்கு வந்தா மட்டும் போதும். படகுகளை விடுவிப்போம் என்று சொல்றாங்க.
ரஜினி என்ற சினிமா கலைஞனுக்கு கிடைக்கும் மரியாதையா? நிச்சயம் அல்ல.
ரஜினி என்ற அரசியல்வாதிக்கு கிடைக்கும் மரியாதை.
ரஜினி என்ற பிஜேபி அடிமைக்கு கிடைக்கும் மரியாத.

ரஜினி இலங்கைக்கு வந்திருந்தால், இலங்கை அதிபரை சந்தித்து இருக்கலாம்,
மீனவர் பிரச்சனையை தீர்க்க ரஜினி யோசனை தந்திருக்கலாம். அதன் மூலம் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கும்
என்று இலங்கை அமைச்சர் கூறுகிறார்.

இத்தனை ஆண்டுகளாய் இரு நாட்டு அதிகாரிகள் பேசி தீர்வு எட்டப்படலை.
ஆனால் ரஜினி என்னும் சினிமாகாரன் மூலம் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு விடும் என்று அவர் சொல்வது
வேடிக்கையாக இருக்கிறது.

ரஜினியின் இலங்கை பயணத்துக்கு ஏன் இலங்கை அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது.
ரஜினியை அழைத்து இலங்கை தமிழர்களுக்கான வீடுகளை திறப்பது, இலங்கை தமிழர்களை சந்திக்க வைப்பது
போன்ற நிகழ்ச்சிகளை செய்வதன் மூலம் உலகத்தின் பார்வையில் இலங்கை அரசு
தமிழர்களின் நலனுக்காக பாடுபடுகிறது என்ற தோற்றத்தை உருவாக்கி விட முடியும்.
உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் ரஜினி என்ற நடிகரை தெரியும்.
அதனால் அவரை அழைத்து தமிழர்களுக்கு வீடு வழங்கும் போது, உலகத்தின் பார்வையே அந்த நிகழ்ச்சியில்
தான் இருக்கும். இலங்கை அரசின் எண்ணமும் ஈடேறும்.

ரஜினியின் இலங்கை பயணத்துக்கு ஏன் பிஜேபி முக்கியத்துவம் கொடுக்கிறது.
ரஜினி பிஜேபியில் இணைய போகிறார் என்று தகவல் கடந்த சில வாரங்களாக வருகிறது.
ரஜினியின் இலங்கை பயணத்தின் பயனால் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்பட்டது
என்ற வெற்றி கோஷத்துடன் ரஜினி பிஜேபியில் இணைவார் என்பது திட்டமாக இருக்கலாம்.
ஆனால் வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக,
ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்தார்.

அதனால் பிஜேபி கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
பிஜேபி யாரையாவது திட்ட வேண்டும் என்றால் சுப்ரமணியசுவாமியை தான் செய்ய சொல்வார்கள்.
இம்முறையும் அவரே திட்டினார். ரஜினியை பயந்தாங்கொள்ளி என்று திட்டி தீர்த்தார்.

தமிழகத்தை இப்போதைக்கு ரஜினியிடம் இருந்தும், பிஜேபியிடம் இருந்தும் காப்பாற்றிய
கடவுளுக்கு நன்றி.

பிஜேபி ரஜினியை விட மாட்டார்கள். அவரை அரசியலுக்கு வர சொல்லி தொந்திரவு கொடுப்பார்கள்.
தாங்கள் சொவதை கேட்க வில்லை என்றால், ரஜினியின் வண்டவாளத்தை வருமான வரி துறை பரிசோதனை மூலம் உலகிற்கு காட்டுவோம் என்று
மிரட்டுவார்கள்,’

3 comments:

  1. ரஜினிகாந்தின் சுயநலம், ஏமாற்றுகள் பற்றி மாற்று கருத்து கிடையாது.
    அவர் கபாலி என்கின்ற ஒரு படத்தில் நடித்ததிற்காக மலேசிய தமிழர்களின் விடிவுக்காக போராடிய தலைவன் என்று பெரும்பாலோர் தமிழகத்தில் புகழ்ந்தார்களே!!!
    அது மாதிரி இப்போ இலங்கை விஷயத்திலும் தனக்கு புகழ் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் திருமாளவன், வைகோ போன்றவர்கள் தங்களது அரசியல் இருப்பை தங்கவைப்பதற்காகவும், லைக்கா நிறுவனத்திடம் இருந்து பணத்தை எதிர்பார்த்தும் காட்டிய ஸ்டண்ட் தான் ரஜினிகாந் இலங்கை செல்ல கூடாது என்பது.
    திருமாளவன் சொல்கிறர், இலங்கையை உலககம் பார்த்து கொண்டு இருக்கிதாம், லைக்கா நிறுவனம் தமிழர்களுக்கு கட்டி கொடுக்கும் வீடுகளை ரஜினிகாந் அங்கே சென்று திறந்து வைத்தால், இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சனை கிடையாது என்றும், ரஜினிகாந் இலங்கை செல்லாமல் இருந்தால், இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சனைகள் உண்டு என்று உலகம் நம்புமாம். உலக மகா காமடி.

    ReplyDelete
  2. இனி தமிழ் நாட்டில் தமிழ் தமிழன் என்ற பருப்பு வேகாது. நல்லது யார் நேர்மையாக செய்தாலும் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்போம்.
    தமிழன் என்ற ஒரு தகுதியை வைத்துக்கொண்டு லஞ்ச லாவண்ய ஊழல் செய்வதை விட ஒரு நேர்மையான துணிவுள்ள இறைநம்பிக்கை எண்ணம் கொண்ட ஒரு நல்ல தலைவன் தான வேண்டும். அவன் எந்த மொழி பேசுவான் என்றாலும் நல்ல எண்ணம் சிந்தனை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தால் போதுமானது. மக்கள் வரவேற்க தயாராக உள்ளார்கள்

    ReplyDelete
    Replies
    1. //தமிழன் என்ற ஒரு தகுதியை வைத்துக்கொண்டு லஞ்ச லாவண்ய ஊழல் செய்வதை விட ஒரு நேர்மையான துணிவுள்ள ----- ஒரு நல்ல தலைவன் தான வேண்டும். அவன் எந்த மொழி பேசுவான் என்றாலும்
      நல்ல எண்ணம் சிந்தனை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தால் போதுமானது. //
      மாற்று கருத்து கிடையாது.
      மத நம்பிக்கை என்பது தனிமனித உரிமை இறைநம்பிக்கை அதை யாரும் இந்தியளர்களிடம் திணிக்க முடியாது.

      Delete

Post Top Ad

Your Ad Spot