Thursday, March 16, 2017

காதலுக்காக 8500 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்த இந்தியன்

இப்படி ஒரு காதல் கதையை கேட்டிருக்கீங்களா?
காதலுக்காக 8500 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்த
வாலிபரின் கதை தெரியுமா?

காதலுக்காக 8500 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்த இந்தியர்

காதலுக்காக இவர் எவ்வளவு தூரம் சைக்கிள் பயணம் செய்தார் தெரியுமா?

உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்தியரின் சைக்கிள் காதல் கதை:
உலகையே
திரும்பி பார்க்க
வைத்த
இந்தியரின்
காதல் கதை

எத்தனையோ காதல் கதையை கேட்டிருக்கோம்.
ஆனா இப்ப நாம கேக்கப்போற காதல் கதை ஒரு வித்தியாசமான காதல் கதை.
இது ஒரு உண்மை சம்பவம்.
இந்த காதல் கதைக்கு இனிமையான முடிவா, சோகமான முடிவானு தெரிஞ்சுக்கனுமா. வாங்க கேக்கலாம்.

கதையின் கதாநாயகன் 1951 இல் ஒரிசாவில் பிறந்த P.K. Mahanandia.
இனிமேல் இவரை பிகே என்று அழைக்கலாம். இவர் ஒரு ஒவிய கலைஞர்.
கதாநாயகி 1955 இல் சுவிடன் நாட்டில் பிறந்த Ann-Charlotte Schedvin.
இனிமேல் இவரை சார்லட் என்று அழைக்கலாம்.

பிகேவிற்கு அப்போது 26 வயது.
டில்லி அறவியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது பிரதமராய் இருந்த இந்திர காந்தியை ஓவியமாய் வரைந்தார். அந்த ஒவியத்தின் மூலம் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.
அதன் பிறகு டில்லியில் connaught place என்ற பகுதியில் அமர்ந்து ”பத்து நிமிடத்தில் ஒவியம்
வரையப்படும்” என்று ஒரு விளம்பர பலகையை வைத்து ஒவியம் வரைய தொடங்கினார்.

சார்லட்டிற்கு தன்னுடைய 10 வயதில் இருந்தே இந்தியா வர வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இந்தியாவை பற்றி நிறைய படித்து இருக்கிறார். எழுதி இருக்கிறார். இந்தியா மீது அவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது.

தன்னுடைய 20ஆம் வயதில் , 1975 இல் சார்லட் சுவிடனில் இருந்து 20 நாள் வேன் பயணம் மூலம் சுற்றுலாவிற்காக இந்தியா வந்தார்.
connaught place இல் பிகே வை பார்க்கிறார்.
”வெறும் பத்து நிமிசத்தில் நீங்க ஒவியம் வரைஞ்சிடுவிங்களா” நு சார்லட் கேக்கறாங்க.
”ஆமாம்” என்று பிகே பதில் சொல்றார்.

“சரி. என்னை வரைய முடியுமா” நு சார்லட் கேக்கறாங்க.
“முடியும்” என்று கூறி வரைய தொடங்குகிறார் பிகே.

பிகெ வரைஞ்ச ஒவியத்தை பார்த்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்த சார்லட் காதலில் விழுந்தாரானு யோசிக்கிறிங்களா?

கண்டிப்பா அது நடக்கலை.
பிகே வரைஞ்ச ஒவியம் சார்லட்டுக்கு பிடிக்கவே இல்லை.
மறுநாள் மீண்டும் ஒரு தடவை முயற்சி பண்ணிக் பாக்கலாம் என்று மனதில் சொல்லிக் கொண்டு சார்லட் கிளம்பி விட்டார்.
மறுநாள் சார்லட் கண்டிப்பாக வரனும்னு பிகே மனதில் இறைவனை வேண்டுகிறார்.
ஆனால் சோகம் என்னவென்றால், மறுநாள் பிகே வரைந்த ஒவியமும் சார்லட்டுக்கு பிடிக்க வில்லை.

என்னங்க ரொம்ப பெரிய ஒவியர்னு சொன்னீங்க?
ஆனா இரண்டு முறையுமே அவர் வரைந்த ஒவியங்களை நல்ல இல்லைனு சொல்லிருக்காங்களே?
அது தான உங்கள் கேள்வி?

பதில் தெரிஞ்சுக்க ஒரு பிளாஷ் பேக் போகனும்.
பிகே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். அந்த காரணத்தினால் அவர் பள்ளியில் படித்த காலத்தில் அவர் சந்தித்த கொடுமைகள் அதிகம்.
அவரை சக மாணவர்கள் ஏளனம் செய்தார்கள். கிண்டலடித்தார்கள். பிகே மனதளவில் மிகவும் பாதிக்கபட்டார்.

”பள்ளியில் என்னை வகுப்பறைக்கு வெளியில் தான் உட்கார வைப்பார்கள்.
நாய், மாடுகளுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு கிடைக்காது. கோயில் அருகில் சென்றாலே,
என்னை கல்லால் அடித்து துன்புறுத்துவார்கள்” என்று பிகே சிறுவயதில் வேதனைப்படுவார்.

அவர் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாரோ, அப்பல்லாம் அவருடைய அம்மா
அவரிடம் என்ன சொன்னங்க தெரியுமா “நீ கவலைப்படாத டா. உனக்காக ஒரு பெண் வருவாள்.
உன் வேதனை எல்லாம் அழிந்து போகும். ஜாதி ரீதியாக உன்னை யாரும் கொடுமைப்படுத்த மாட்டார்கள்.
உன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உன்னுடைய ஜாதகத்தின் படி நீ ரிஷப ராசி பெண்ணை திருமணம் செய்து கொள்வாய்.
அந்த பெண் வெகு தொலைவில் வேற்று நாட்டில் இருந்து வருவார். இசையில் நாட்டம் கொண்ட பெண்ணாக இருப்பார்.
அவர் சொந்தமாக ஒரு காடு வைத்திருப்பார்” அப்படினு சொல்லியிருக்காங்க.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடி திருமணம் செய்து வைக்கும் காலத்தில்
அவங்க அப்படி சொல்லியிருப்பது நிச்சயம் ஆச்சரியம் தான்.

சார்லட்டை ஓவியம் வரையும் போது பிகேவின் மனதில் இது தான் ஒடிக் கொண்டிருந்தது.
அம்மா சொன்னதில் ஒன்று மட்டும் தான் இப்போதைக்கு பொருந்துகிறது. அதாவது வேற்று நாட்டில் இருந்து பெண் வருவார் என்பது.
மீதியும் பொருந்துகிறதா என்பதை அந்த பெண்ணிடம் பேசினால் தான் கேட்க முடியும்.
கேட்கலாமா வேண்டாமா என்ற சிந்தனை மனதில் ஓடிக் கொண்ட இருந்த காரணத்தினால் தான்,
ஒவியத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் தான் அவர் வரைந்த ஒவியம் சார்லட் மனம் கவரும் வகையில் வரவில்லை.

இரண்டாவது ஓவியமும் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாத காரணத்தினால் சார்லட்
கவலையுடன் அங்கிருந்து கிளம்ப தயாரானார். தனக்குள் தைரியத்தை வரவழைத்து கொண்டு பிகே தன்னுடைய அம்மா
சொன்ன விசயங்கள் பொருந்துகிறதா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சார்லட்டிடம் கேள்விகளை கேட்டார்.

அதற்கு சார்லட் பதில் சொல்றாங்க.
“ஆமாம் நான் ரிஷப ராசி தான். இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். பியனோ வாசிப்பேன்.
1700 ஆம் ஆண்டுகளில் எங்கள் முன்னோர்கள் சுவிடன் மன்னருக்கு பல உதவிகள் செய்த காரணத்தால்
காட்டில் ஒரு பகுதியை எங்களுக்கு பரிசாக கொடுத்தார். இப்போதும் அது எங்களிடம் தான் இருக்கிறது.” என்று சொல்கிறார்.

“என்னோட ஆழ் மனம் அம்மா சொன்ன பெண் இவள் தான் என்று சொன்னது.
வெவ்வேறு நாடுகளில் இருந்த போதும், எங்கள் இருவரையும் இயற்கை தான் சந்திக்க வைத்திருக்கிறது.
எங்கள் சந்திப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக தான் தெரிகிறது.
முதல் சந்திப்பில் காந்தம் போல் எங்களுக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது. நான் ஏன் அந்த கேள்விகளை அவளிடம்
கேட்டேன் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு தைரியம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
அவள் போலீசிடம் புகார் அளித்து விடுவாங்கனு தான் நான் நினைத்-தேன்” என்று பிகே அந்த சம்பத்தை நினைவு கூறும் போது சொல்கிறார்.


“அவர் நேர்மையானவர் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான் அவருடைய கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன்.
ஏன் அந்த கேள்விகளை கேட்டார் என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் கூறிய பதில்களில் உண்மையை உணர்ந்தேன்.
அவருடன் நடந்த உரையாடல்களில் அவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. இவர் தான் என்னுடைய வாழ்க்கை துணை என்ற
எண்ணம் தோன்றியது. அதன் பிறகு ஒரிசாவில் இருக்கும் அவருடைய ஊருக்கு சென்றோம்.
இது முட்டாள்தனம் என்று உங்களுக்கு தோணலாம். நான் அப்போது என் ஆழ் மனம் சொல்லியதை
100 சதவீதம் அப்படியே நம்பினேன். அது என்னை ஏமாற்றாது என்று எனக்கு தெரியும்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று
முடிவு எடுத்தோம். முதலில் அவருடைய பெற்றோர்களும் உறவினர்களும் வெளிநாட்டு பெண் என்பதால் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை”
என்று அந்த சம்ப்வத்தை நினைவு கூறும் போது சார்லட் சொல்றாங்க.

“சார்லட் என் பெற்றோர்களை முதல் முறையாக சந்திக்கும் போது புடவை அணிந்திருந்தார்.
எப்படி அவர் புடவை கட்டிக் கொண்டார் என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லை.
முதலில் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் ஒத்துக் கொண்டார்கள்.
பெற்றோர், உறவினர் முன்னிலையில் எங்களின் திருமணம் நடந்தது.
திடிர் என்று ஒரு வெளிநாட்டு பெண் வாழ்க்கையில் வராங்க.
உடனே திருமணமும் நடக்குது. ஒன்னு மட்டும் தெளிவா தெரிஞ்சுது. நமக்கு மேல் இருக்கும் சக்தி தான் இதை எல்லாம் நடத்துகிறது
என்பது எனக்கு தோன்றியது.” என்று பிகே சொல்றார்.

சார்லட் இந்தியா சுற்றுலா முடிந்து சுவிடனுக்கு திரும்பும் நாள் வந்தது.
பிகேவையும் தன்னுடன் சுவிடனுக்கு வருமாறு அவர் அழைத்தார்.
“வெளிநாட்டு பெண்ணை பணத்துக்காகவோ, வசதி வாய்ப்புக்காகவோ நான் திருமணம் செய்யவில்லை.
காதலுக்காக திருமணம் செய்து கொண்டேன். நான் உன்னுடைய செலவில் சுவிடன் வருவது சரியாக இருக்காது.
அது மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாய் அமைந்து விடும். நீ செல்.
நான் உழைத்து சம்பாதித்து என்னுடைய சொந்த செலவில் சுவிடனுக்கு வந்து உன்னுடன் இணைகிறேன்”
என்று கண்ணீர் மல்க தன்னுடைய மனைவியை அனுப்பி வைத்தார்.

இரண்டு வருடங்கள் ஓடியது. பிகேவும் சார்லட்டும் கடிதங்கள் மூலமாக தொடர்பில் இருந்தார்கள்.
விமான டிக்கெட் வாங்கும் அளவுக்கு பிகேவிடம் காசு சேரவில்லை.
அதனால் பிகே ஒரு முடிவு எடுத்தார். அவரிடம் இருந்த அனைத்து காசையும் போட்டு,
ஒரு cycle வாங்கினார். cycle இல் பயணம் செய்து உன்னை வந்து சேர்வேன் என்று பிகே
சார்லட்டிற்கு கடிதம் எழுதி விட்டு பயணத்தை தொடங்கினார்.

22 ஜனவரி 1977 இல் பிகே தன் பயணத்தை ஆரம்பிக்கிறார்.
அது ஒரு நீண்ட பயணம். 8500 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்.
பல நாடுகளை கடந்து செல்ல வேண்டும். பல மொழி பேசும் மக்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள்
ஆகியவை அவர் முன் இருந்த பெரிய சவால்கள். எனினும், காதல் மனைவியுடன் இணைய போகிறோம்
என்ற மகிழ்ச்சி மட்டுமே அவர் மனதில் இருந்தது.

பாகிஸ்தான், அப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்கி நாடுகள் வழியாக அவர் ஐரோப்பாவிற்குள் நுழைவார்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 கிலோ மீட்டர் பயணம் செய்தார்.
பயணத்தின் போது அவருடைய ஓவிய திறமை அவருக்கு கை கொடுத்தது.
ஒவியங்கள் வரைந்து கொடுத்ததற்கு சில மக்கள் பணமும், சில மக்கள் உணவும் தங்கும் இடமும் கொடுத்திருக்கிறார்கள்.

”1970இல் இருந்த உலகத்துக்கும் இப்போது இருக்கும் உலகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.
அந்த காலத்தில், பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்ய விசா தேவையில்லை.
அது ஒரு பொற்காலமாய் இருந்தது. வேறு நாடு, வேறு மொழியாய் இருந்தாலும், மக்கள் அன்பாய் இருந்தார்கள்.

ஆப்கானிஸ்தான் மிகவும் அமைதியான அழகான நாடாய் இருந்தது.
அங்கிருந்த மக்கள் ஒவியங்களை விரும்பினார்கள். அங்கு மக்களுக்கு ஹிந்தி மொழி புரிந்தது.
ஆனால் ஈரான் நாட்டில் மக்களுக்கு ஹிந்தி புரியவில்லை.
இருந்தாலும் ஒவிய கலை தான் உதவியது. கலை என்பது பிரபஞ்சத்தின் மொழி என்பதை
நான் ஆந்த பயணத்தில் புரிந்து கொண்டேன். என்னை போன்ற நாடோடிகளிடம் நேரம் செலவழிக்க
அந்த காலத்தில் மக்களுக்கு நிறைய நேரம் இருந்தது. இப்போது அப்படி இல்லை. வீட்டில் இருப்பவர்களிடம்
பேசுவதற்கே இன்றைய மக்களுக்கு நேரம் இல்லை” என்று தன் நினைவுகளை அசை போடுகிறார் பிகே.

முஸ்லீம் மக்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற பிம்பத்தை இன்றைய காலகட்டத்தில் ஆதிக்க
சக்திகள் உருவாக்கி விட்டார்கள். ஆனால் முஸ்லீம் மக்கள் எவ்வளவு அமைதியானவர்கள்,
அன்பானவர்கள் என்று பிகேவின் பயணத்தின் மூலம் நமக்கு தெரிகிறது

cycle இன் பெடல்களை மிதித்து கொண்டே இருந்தார்.
பிகேவிற்கு மிகவும் சோர்வாக இருந்தது. கால்கள் வலித்தது.
எனினும் தன் காதல் மனைவியை சந்திக்கும் எண்ணம் தான் மேல் ஓங்கி இருந்தன.
அந்த எண்ணம் வலியை மறக்கடித்தன.

4 மாத பயணத்திற்கு பிறகு 28 மே 1977 இல் பிகே சுவிடன் வந்து சேர்ந்தார்.
தன் காதல் மனைவியுடன் இணைந்தார்.

சார்லட்டின் பெற்றோர் முதலில் சார்லட் பிகேவை திருமணம் செய்ய கூடாது என்று கூறினார்கள்.
அதன் பின்னர் பிகேவை அவர்களுக்கு பிடித்து போக, சார்லட் பிகே சுவிடனில் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்கள்.

“விடுமுறை காதல் வெகு நாட்கள் நீடிக்காது என்று சொல்வார்கள்.
ஆனால் இந்த விடுமுறை காதல் 40 ஆண்டுகளாய் நீடித்துக் கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்”

சார்லட் இசை சொல்லி கொடுக்கும் ஆசிரியராய் இருக்கிறார்.
பிகே சிறு வயதில் இருந்தே சாதிய கொடுமையால் மிகவும் பாதிக்கப்பட்டார்.
அதனால் தலித் மாணவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று அவரும் அவருடைய மனைவியும் முடிவு செய்தார்கள்.

இந்தியாவில் தலித் மாணவர்களின் முன்னேறத்திற்காக தங்களால் இயன்ற உதவியை செய்கிறார்கள்.
அவர்கள் படிப்பதற்கு ஊக்க தொகையும் வழங்கி வருகிறார்கள்.

சுவிடன் நாட்டிலும் தன் ஓவிய பணியை தொடர்ந்து செய்தார் பிகே.
இவரின் ஓவியங்கள் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்தது.
2005 இல் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரிசாவில் இருக்கும்  Utkal University இவருக்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கியது.

பிரபல பாலிவுட் இயக்குனர்  Sanjay Leela Bhansali இவர்களின் காதல் கதையை படமாக எடுக்க போகிறார்.

இதுவரை பொறுமையாய் கேட்ட அனைவருக்கும் நன்றி.
கடைசியாக ஒரு சில கருத்துகளை சொல்லிவிட்டு முடித்துக் கொள்கிறேன்.

புது இந்தியா பிறந்திறக்கிறது என்று மோடி சொன்னார்.
ஆனால் இன்றும் தலித் மாணவர்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.
ரோகிட் வெமுளா தற்கொலை, மருத்துவர் சரவணின் கொலை, சமீபத்தில் நிகழ்ந்த முத்துக்கிருஷ்ணனின் தற்கொலை.
இது அனைத்துமே தலித் சமுதாயத்திற்கு இந்த சமுதாயம் இழைக்கும் அநீதியால் நிகழ்ந்த கோர சம்பவங்கள்.
இந்த நிலை மாற வேண்டும்.

இது 40 வருடத்திற்கு முன்னர் நடந்த காதல் கதை.
இன்று காதல் மாறி போய் விட்டது.
முதலில் இந்த காலத்து இளைய சமுதாயத்தினருக்கு காதல் என்றால் என்னவென்று ஒரு புரிதல்
இருக்கிறதா என்று தெரியவில்லை. i love you சொல்வது, பின்னர் முத்தம் கொடுப்பது,
கட்டி அணைப்பது, அதன் பின் சண்டை வந்தால் பிரிவது. இதுவா ஆண் பெண் காதல். நிச்சயம் இல்லை.

கணவனும் மனைவியும் முத்தம் கொடுப்பது போல் போட்டோ எடுத்து பேஸ்புக்கில்
போட்டு விட்டால் அது உண்மையான காதல் ஆகி விடுமா? நிச்சயம் இல்லை

எது தான் காதல்? அது ஒரு உள்ளப்பூர்வமான உணர்வு.
அது ஒரு தெய்வீகமான உணர்வு. உண்மையான காதலில் கடவுளையே காணலாம்.
நமக்குள் ஒரு எண்ணம் வரும் போது, ஆழ் மனதில் இருந்து வருகிறதா அல்லது மேல் மனதில்
இருந்து வருகிறதா என்பதை முதலில் அறிந்திருக்க வேண்டும். இதை உணர முடியவில்லை என்றால்
உண்மையான காதலியையோ, காதலனையோ அடையாளம் கண்டு கொள்வது இயலாத ஒன்று.

”எனக்கு சைக்கிள் ஓட்டுவதே பிடிக்காது. ஆனால், நான் காதலுக்காக தான் சைக்கிளில் அவ்வளவு பெரிய பயணம் செய்தேன்.”
என்று சொல்லி பிகே தன் கதையை முடிக்கிறார்.
பிகேவின் வார்தைகளில் இருந்து காதல் என்றால் என்னவென்பதை புரிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot