Saturday, March 25, 2017

”பொருமை வேண்டும்” - மனதை உருக்கும் கதை

”ஒரு இளைஞன் ஆபத்தான நிலையில் இருக்கிறான்.
அவனுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யனும். நீங்க உடனே வர முடியுமா
டாக்டர்” என்று தொலைபேசியில் டாக்டர் கிட்ட நர்ஸ் கேக்கறாங்க.

“வருகிறேன்” என்று டாக்டர் சொல்றார்.

ஆபத்தான நிலையில் இருக்கும் தன் மகனை காப்பாற்ற
டாக்டர் எப்போது வருவார் என்று வருத்தத்துடன் அவனின் தந்தை அங்கும் இங்குமாய் நடந்து கொண்டு இருக்கிறார்.

அவசர அவசரமா மருத்துவமனைக்குள் டாக்டர் நுழைகிறார்.

“ஏன் இவ்வளவு தாமதாய் வறீங்க. என் மகனின் உடல்நிலை மோசமாய்
இருக்குனு உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு கொஞ்சமாவது
பொறுப்பு உணர்ச்சி இருக்கிறாதா” என்று தந்தை டாக்டரிடம் கடும் கோபத்துடன்
கேட்கிறார்.

“என்னை மன்னிச்சுக்கோங்க. நான் மருத்துவமனையில் இல்லை.
எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தவுடன் என்னால் எவ்வளவு வேகமாய்
வர முடியுமோ, அவ்வளவு வேகமாய் வந்தேன். நீங்கள் கொஞ்சம்
பொறுமையாக இருங்கள். என் வேலையை செய்ய அனுமதியுங்கள்”
என்கிறார் டாக்டர்.

“என்னது? பொறுமையா இருக்கனுமா? உங்கள் மகனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால்
நீங்கள் இப்படி தான் பேசுவீர்களா” என்று தந்தை கத்தினார்.

”உங்கள் மகனை காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்தையும்
நான் செய்வேன். நீங்கள் தைரியமாக இருங்கள்.” என்று சொல்லி விட்டு
அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைந்தார்.

”மத்தவங்களுக்கு அறிவுறை சொல்றது மிகவும் சுலபம். தனக்கு வந்தால் தானே
கஷ்டம் தெரியும்” என்று தந்தை புலம்பினார்.

சில மணி நேரங்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு, டாக்டர் மகிழ்ச்சியாய் வெளியில் வந்தார்.

“இறைவனுக்கு நன்றி. அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிந்தது.
உங்கள் மகன் நலமாக இருக்கிறார். உங்களுக்கு ஏதாவது
கேள்விகள் இருந்தால் நர்ஸிடம் கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு
அவசர அவசரமாக மருத்துவமனையின் வாசலை நோக்கி ஓடுகிறார் டாக்டர்.

”ஏன் இந்த டாக்டர் இப்படி திமிர் பிடிச்சவராய் இருக்கிறார்.
அவர் சில நிமிடங்கள் இருந்திருந்தால் என் மகன் உடல்நிலை பற்றி
கேட்டிருப்பனே” என்று தந்தை கவலையுடன் கோபமாய் நர்ஸிடம் கூறினார்.

நர்ஸின் கண்ணில் கண்ணீர் வந்தது.
”டாக்டரின் மகன் கார் விபத்தில் மரணம் அடைந்து விட்டார்.
உங்கள் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு அவரை அழைத்த போது
டாக்டர் தன்னுடைய மகனுக்கு இறுதி சடங்கு செய்து கொண்டிருந்தார்.
பாதியிலேயே கிளம்பி வந்து விட்டார்.
இப்பொது உங்கள் மகனை காப்பாற்றி விட்டார்.
தன் மகனின் இறுதிச்சடங்கை முடிக்கவே அவர் அவசர அவசரமாய் கிளம்பி சென்றார்.” என்று நர்ஸ் சொல்றாங்க.

இந்த கதையின் மூலம் நமக்கு தெரிவது என்ன?
அவசரப்பட்டு யாரை பற்றியும் ஒரு முடிவுக்கு வந்து விட கூடாது.
அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட கூடாது.
ஏனென்றால் அடுத்தவர் வாழ்க்கையை பற்றி நமக்கு தெரியாது.

அம்மாவிடமோ, மனைவியிடமோ
ஏன் இப்படி செஞ்ச என்று கண்ணாபின்னானு கத்துவோம்.
கத்தி முடிச்சிட்ட பிறகு அவங்க காரணத்தை சொல்வாங்க.
ஐயோ தேவை இல்லாம கோபப்பட்டு விட்டோமே என்று கவலைப்படுவோம்.
நம் வீடுகளில் இது அடிக்கடி நடக்கும்.

வாழ்க்கையில் பொறுமை அவசியம்.
அவசரப்பட்டு யாரையும் எடை போட கூடாது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot