Thursday, March 2, 2017

ஜெயலலிதா மரணத்தின் மர்மம் பற்றி பன்னீர் அணி அதிர்ச்சி தகவல்

ஜெயலலிதா மரணத்தின் மர்மம் பற்றி பன்னீர் கோஷ்டி அதிர்ச்சி தகவல்

நேற்று பத்திரிக்கையாளரை சந்தித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் முன்ன்னள் சபாநாயகருமான
பி.எச்.பாண்டியன் சில கருத்துகளை சொல்லியுள்ளார். அது என்னவென்று பார்போம்.

ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் தள்ளி விட பட்டார் என்று அப்பல்லோ டிஸ்சார்ஜ் ரிப்பார்ட்டில் சொல்லப்பட்டு இருக்கிறது.
போயஸ் கார்டனின் சிசிடிவி பதிவுகள், அப்பல்லோ மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகள் வெளியிட வேண்டும் என்று சொன்னாரு.

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு ஏன் அழைத்து செல்லவில்லை.
செப்டம்பர் 22 அன்று எத்தனை மணிக்கு ஆம்புலன்ஸ் போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டது, எத்தனை மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தது.
யார் ஜெயலலிதாவுடன் வந்தது என்பதை எல்லாம் வெளியிட வேண்டும் என்று பி.எச். பாண்டியன் சொல்றார்.

வீட்டிலை சண்டை நடந்தது. நான் ஜெயலலிதாவை கீழே தள்ளி விட்டுட்டேன் அப்படின்னு
சசிகலா அப்பல்லோ ஆஸ்பத்திரியிலை சொன்னாங்களாம். அதை அப்படியே டிஸ்சார்ஜ் ரிப்போர்ட்டில் அப்பல்லோ
எழுதியிருங்களாம்.

சசிகலா என்ன உண்மையை பேசும் உத்தமரா?
டிஸ்சார்ஜ் ரிப்போர்ட்டில் அப்படி எழுத அப்பல்லோவிற்கு தைரியம் இருக்கிறதா?
மக்களை இவங்க எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க பாருங்களேன்.
ஜெயலலிதாவை கொன்ற சசிகலாவிற்கு தண்டனை கிடைக்கனும் என்பது தான் மக்களின் விருப்பம்.
அந்த உணர்வை இந்த ஏமாற்று அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி, இவர்கள் ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் தான்
செய்வார்கள். நீதி வாங்கி தர மாட்டார்கள்.
----
ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது
என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

ஐயா, ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் காரணம் என்று தமிழ்நாட்டில் எல்லாருக்குமே தெரியும்.
நீங்க இப்ப தான் குற்றவாளிகளை நெருங்குறீங்களா?

----
அடுத்த வாரம் பன்னீர் தலைமையில் அ.தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா மரணத்துக்கு நீதிவிசாரணை கேட்டு
உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போறதா சொல்லியிருக்கிறார்.

டிசம்பர் 5 இல் இருந்து பிப்ரவரி 5 வரை இரண்டு மாதங்கள் பன்னீர் தான் முதலமைச்சராய் இருந்தார்.
அதிகாரம் கையில் இருக்கும் போது விசாரனை கமிஷன் அமைச்சி இருக்கலாமே.
ஏன் செய்யலை? காலம் காலமா அரசியல்வாதிகளுக்கு ஒரு பார்முலா இருக்கு.
ஆளும் கட்சியா இருக்கும் போது வாயை மூடிக்கிட்டு இருப்பாங்க.
எதிர்கட்சி ஆயிட்டா உத்தமர்கள் போல பேசுவாங்க.
திரும்ப ஆளும் கட்சியா வந்துட்டா, பேசியதை  எல்லாம் மறந்துட்டு கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிடுவாங்க.

டில்லியில் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன்னர் ஷிலா தீக்சித் செய்த ஊழல்களுக்கு ஆதாரம் இருக்கிறது,
ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுப்போம் என்றார். ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் நடவடிக்கையே எடுக்கலை.
ஏன் நடவடிக்கை எடுக்கலைனு பத்திரிக்கையாளர்கள் கேக்கறாங்க, “உங்க கிட்ட ஆதாரம் இருந்தா
குடுங்களேன், நடவடிக்கை எடுக்கிறோம்னு அந்தர் பல்டி அடிச்சாரு”.
இந்த அரசியல்வாதிகள் மீடியா முன்னாடி ஒன்னு பேசுவாங்க. திரை மறைவில் புரோக்கர் மாதிரி பேரம் பேசி காசு வாங்கிட்டு
அமைதி ஆயுடுவாங்க.

இது தான் இவர்களின் அரசியல்.
இளைஞர்கள் இவர்களின் அரசியலை புரிஞ்சுக்கனும். எந்த எந்த நேரத்தில் இந்த அரசியல்வாதிகள் எப்படி எப்படி பேசுவாங்கனு தெரிஞ்சுக்கனும்.
உணர்ச்சி பொங்க பேசுவாங்க, வீரமா பேசுவாங்க, ஆனா பேசுனதை எதையும் செய்ய மாட்டாங்க.
நம் எதிரியின் ஒவ்வொரு அசைவின் அர்த்தமும் நமக்கு தெரிய வேண்டும்.
அப்போது தான் அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஜெயிக்க முடியும்.

பன்னீர், சசிகலா சண்டை என்பது நல்லதுக்கும் தீயதுக்கும் நடக்கும் போர் அல்ல.
இரண்டு கொள்ளை கும்பலுக்கும் நடக்கும் போர்.
திருட்டுபசங்க சண்டையில் நம்மை பிடிச்சி இழுத்து ஒரு திருடனை ஹீரோனு சொல்ல சொல்றாங்க.
சில லட்சங்கள் செலவு செய்து மீம்ஸ் போடுபவர்களையும், whatsapp message ஐ forward செய்பவர்களையும்
வாடகைக்கு எடுத்தால், யாரை வேண்டுமானாலும் ஹீரோவாக்கலாம் என்பது மீண்டும் நிரூபணம் ஆனது.

பன்னீர் கோஷ்டி உங்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் -  ஜெயலலிதா மரணத்தின் மர்மம் பற்றி உங்களிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும்
வெளியிடுங்க. முடியாதுனா வாயை மூடிட்டு கிளம்புங்க.
நெடுவாசல் பிரச்சனை, தாமிரபரணி தண்ணீர் பிரச்சனை உட்பட பல பிரச்சனைகள் எங்களுக்கு இருக்கு.
இதை எல்லாம் சரி பண்ற அதிகாரம் உங்க கிட்ட இருக்கு. ஆனா நீங்க செய்ய மாட்டீங்க.
உங்க தயவே வேண்டாம்னு நாங்களே தான போராடிக்கிட்டு இருக்கோம். எங்களை எதுக்கு திசை திருப்ப பாக்கறீங்க.

உங்களுக்குள் தான் சண்டை. இரண்டு பேரும் அடிச்சிக்கிக்குட்டு செத்து போங்க.
மூனாவட்து திருடன் திமுகவையும் உங்க சண்டையில் சேர்த்துக்கிட்டு அடிச்சிக்கோங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.
தமிழ்நாடும் உறுபடும். நீங்க 50 வருசமா எங்களுக்கு செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றி.
கிளம்புங்க. காற்று வரட்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot