Monday, March 27, 2017

தமிழகத்தின் மீது போர் தொடுக்கும் மோடி அரசு

நெடுவாசல் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான  ஒப்பந்தம்
டெல்லியில் நேற்று கையெழுத்தானது.

மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திரா பிரதான்,
”தமிழக அரசு மற்றும் நெடுவாசல் கிராம மக்களின் முழு ஒப்புதலுடன்
தான் ஹட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும். அவர்கள்
ஒத்துழைக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

22 நாள் மக்கள் ஹட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்னு சொல்லியிருக்காங்க.
இப்ப யாரை கேட்டு இவங்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாங்க.
மக்கள் ஒத்துழைக்க வேண்டும்னு என்ன உரிமையில் கேக்கறாங்க.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
போராட்டம் குழு கேட்டார்கள் என்பதற்காக அரசாங்கம் முடிவு எடுக்க முடியாது.
மாநில நிர்வாகம் சொல்வதை தான் மத்திய அரசு கேட்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

போராட்டத்தை முடிச்சு வைக்கும் போது இந்த நபர் மாநில நிர்வாகத்திடம் பேசினாரா,
போராட்ட குழுவிடம் பேசினாரா? இப்போது எப்படி அந்தர் பல்டி அடிக்கிறார் பாத்தீங்களா?
பிஜேபி காரங்க இப்படி தான். அவங்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகளை மகிழ்ச்சி படுத்துவது
மட்டும் தான் ஒரே நோக்கம். இவங்க என்னைக்கும் திருந்த மாட்டாங்க.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான வறட்சி நிதி வழங்க
வேண்டும் என்று மண்டை ஓடுகளை எந்தியும், எலி கறியை உண்டும்
விவசாயிகள் டில்லியில் 15 நாட்களாய் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு எந்த தீர்வையும் மத்திய அரசு வழங்கவில்லை.

மக்கள் அனுமதியின்று ஹட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது
என்று பொய் வாக்குறுதி கூறி, போராட்டத்தை முடித்து வைத்து,
இப்போது ஒப்பந்தத்தில் கையேழுத்து போட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு மக்களை பற்றி துளியிம் கவலையில்லை.
டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு உதவ மனம் இல்லாத
மத்திய அரசு நெடுவாசல் விவசாயிகளையும் காலி செய்ய வேண்டும்
என்று களத்தில் இறங்கி இருப்பது மோடி அரசு தமிழர்களுக்கு எதிராக
தொடுத்திருக்கும் போராகவே நான் பார்க்கிறேன்.

மோடி அரசுக்கு இப்போது லோக் சபாவில் பெரும்பான்மை இருக்கிறது. ராஜ்ய சபாவில் பெரும்பான்மை இல்லை.
இப்பவே மோடி அரசு இந்த ஆட்டம் ஆடுது. மக்கள் விரோத செயல்களை செய்கிறது.
மக்களை ஏமாற்றுகிறது. உத்திர பிரதேசத்தில் பெற்ற வெற்றியால் அடுத்த வருடம் ராஜ்ய சபாவிலும்
மோடி அரசு பெரும்பான்மை பெறுவார்கள். இவங்க கொண்டு வரும் சட்டத்தைய் யாராலும் தடுக்க முடியாது.
இவர்கள் கையில் எல்லையில்லாத அதிகாரம் இருக்கும். அப்ப பாருங்க இவங்க ஆட்டத்தை. பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த போது,
கொண்டு வந்து பின்னர் கைவிடப்பட்ட நில அபகரிப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வருவார்கள். கடவுள் தான் மக்களை காப்பாத்தனும்.

ஆதாரை கட்டாயப்படுத்த கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்கிறது.
ஆனால் அதை மதிக்காமல் அனைத்திலும் ஆதாரை கட்டாயப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
பள்ளி குழந்தைகளிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், மதிய இலவச உணவை தர மாட்டோம்
என்று மனிதாபிமானமற்ற செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள்.
மக்களையும் மதிக்க மாட்டார்கள்.
குரங்கு கையில் சிக்கி கொண்ட பூமாலை போல தான், அரசாங்கம் இவர்கள் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
என்ன ஆகுமா நம் நாடு.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot