Thursday, March 30, 2017

ஊரை ஏமாற்றும் விபச்சார ஊடகங்கள்

மார்ச் 11 ஆம் தேதி  ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வந்தது.
அதை அலசி ஆராய்ந்து பார்த்த போது, நாடு முழுக்க மோடி அலை வீசிகிறது
என்பது திட்டமிட்டு பரப்பும் பொய் என்பது தெரிந்தது.
வாங்க விவரத்தை பார்க்கலாம்.

பஞ்சாபில் கடந்த பத்து வருடங்களாக பிஜேபியின் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது.
அங்கு பாரதீய ஜனதாவிற்கு பெரும் தோல்வி கிடைத்தது.
117 தொகுதிகளில் வெறும் 3 தொகுதிகளில் தான் வென்றார்கள். அவர்களின் வாக்கு சதவீதம் 5.4%.

கோவாவில் கடந்த ஐந்து வருடங்களாக பிஜேபி ஆட்சி தான் நடக்கிறது.
மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 தொகுதிகளில் தான் ஜெயித்தார்கள். பெற்ற வாக்கு சதவீதம் 32.5%
ஆட்சி அமைக்க 21 எம்.எல்.ஏக்கள் தேவை. காங்கிரஸ் 17 தொகுதிகளைப் பெற்றார்கள்.
எனினும் குதிரை பேரத்தில் பிஜேபி முந்திக் கொண்டது. MGP,
Goa Forward Party and 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தார்கள்.

மணிப்பூரில் 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பிஜேபி 21 தொகுதிகளில் வென்றார்கள். வாக்கு சதவீதம் 36.3%
காங்கிரஸ் 28 தொகுதிகளில் வென்று முதல் இடத்தை பிடித்தார்கள். ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏக்கள் தேவை.
எனினும் குதிரை பேரத்தில் NPF, NPP and LJP எம்ல்.ஏக்களை விலைக்கு வாங்கி பிஜேபி ஆட்சி அமைத்தார்கள்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி தான் ஆட்சி செய்தது.
தேர்தலுக்கு முன்னர் அகிலேஷ் யாதவிற்கும் அவருது தந்தைக்கும் மிக பெரிய சண்டை வெடித்தது.
இந்த காரணத்தினால் கட்சியில் இரு குழுக்கள் செயல்பட தொடங்கியது.
உட்கட்சி சண்டையினால் சமாஜ்வாடி கட்சி பெரும் சரிவை சந்தித்தது.
மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பிஜேபி 312 தொகுதிகளை வென்றார்கள்.
பெற்ற வாக்குசதவீதம் 40%
ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி அலையும், இந்துத்வா பிரச்சாரமும், ஓட்டுக்கு பணம் ஆகியவை தான் பிஜேபியை வெற்றி அடைய செய்தது.
பிஜேபி 403 தொகுதிகளில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியால் மக்கள் பிஜேபிக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்தார்கள்.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 57 தொகுதிகளில் வென்றார்கள்.
46.5 % வாக்கு சதவீதம்.

இதில் கண்டறிந்த ஒரு சில கண்டுபிடிப்புகளை பார்ப்போம்
1) மொத்தம் உள்ள 5 மாநிலத்தில் மூன்று மாநிலங்களில் பிஜேபி தோல்வி அடைந்துள்ளது.
  இதை திட்டமிட்டு பிரதான ஊடகங்கள் மறைத்தார்கள். மாறாக பிஜேபி நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது
  என்ற செய்தியை முன்னிலைப்படுத்தினார்கள். ஊடக தர்மத்தை குழி தோண்டி புதைத்தார்கள்.

2) ரூபாய் நோட்டு செல்லாத திட்டத்திற்கு மக்கள் ஆதரவு உண்டு என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது என்று பிஜேபியினர் சொல்கிறார்கள்.
கோவாவில் 68 சதவீத மக்கள் பிஜேபிக்கு எதிராக வாக்களித்துள்ளர்கள்.
பஞ்சாபில் 70 சதவீத மக்கள் பிஜேபிக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
மணிப்பூரில் 64 சதவீத மக்கள் பிஜேபிக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
உத்திரபிரதேசத்தில் 60 சதவீத மக்கள் பிஜேபிக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
உத்திரகண்டில் 64 சதவீத மக்கள் பிஜேபிக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.

ஒரு மாநிலத்தில் கூட 50 சதவீத வாக்குகள் கூட வாங்கவில்லை. 5 மாநிலங்களிலும் பிஜேபியை எதிர்த்து வாக்களித்தவர்கள் தான்
அதிகம். சராசரியாக 65 சதவீத மக்கள் பிஜேபிக்கு எதிராக தான் வாக்களித்துள்ளார்கள்.

இப்ப சொல்லுங்க ரூபாய் நோட்டு செல்லாத திட்டத்திற்கு மக்கள் ஆதரவா கொடுத்திருக்காங்க?

3) அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள கட்சியை தான் கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பார்.
  ஏன் கோவா மற்றும் மணிப்பூர் கவர்னர்கள் இரண்டாவது இடத்தில் உள்ள பிஜேபியை ஆட்சி அமைக்க அழைத்தார்கள்?

4) நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்கிறார்கள். பஞ்சாப், கோவா, மணிப்பூரில் அலையை காணலையே. ஏன் என்று யாராவது
  சொல்லுங்களேன்.

5) கோவாவிலும் மணிப்பூரிலும் சிறு கட்சிகளின் எம்.ஏக்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ பிஜேபிக்கு ஆதரவு அளித்தார்கள்.
பிஜேபியும், காங்கிரசும் வேண்டாம் என்று தான் மக்கள் இவர்களுக்கு வாக்கு அளித்தார்கள்.
அவர்களை ஏமாற்றி பிஜேபிக்கு ஆதரவு கொடுப்பது நியாயமா?
கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்த போது, அவர்கள் தொகுதி பக்கம் சென்று மக்கள் கருத்தை
கேட்ட பிறகு ஒரு வாரம் கழித்து தான் அவர்கள் நம்பிக்கை தீர்மானத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று பிஜேபி காரங்க சொன்னாங்களே.
இப்ப பிஜேபிக்கு ஆதரவு தரும் கோவா மற்றும் மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்டார்களா?

6) கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் குதிரை பேரத்தில் ஈடுபடாதது ஏன்?
  பிஜேபிக்கும் காங்கிரசுக்கும் ஏதோ ஒரு ஒப்பந்தம் இருக்கிறதா?

7)பிஜேபி ஆட்சி அமைக்கும் நான்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் ஒரு மாநிலத்திலும் 50 சதவீதத்திற்கும்
அதிகமான மக்கள் ஆட்சி அமைத்தவர்களுக்கு எதிராக தான் வாக்களித்துள்ளார்கள். இவ்வளவு பேருக்கு பிடிக்காத ஒரு கட்சி
எப்படி ஆட்சி அமைக்கலாம்? தேர்தல் முறையில் எவ்வளவு பெரிய பிழை இருக்கிறது.
குறைந்தது 50 சதவீதமாவது ஒட்டு பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று மாற்றலாம்.
அல்லது விகித்தாசர அடிப்படையில் எம்.எல்.ஏக்களை கட்சிகளுக்கு கொடுக்கலாம்.
தேர்தல் முறையில் மாற்றங்கள் நிச்சயம் தேவை. ஆனால் அரசியல் கட்சிகள் அதை செய்வார்களா?

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot