”ஜீரோ பன்னீர்செல்வம்”
ஸ்டாலினின் அதிரடி திட்டம்
பன்னீரை ஹீரோவாக்கிய ஸ்டாலின் இப்போது ஜீரோவாக்கும் திட்ட
ஹீரோவாக்கிய பன்னீரை ஜீரோவாக்கும் ஸ்டாலினின் திட்டம்.
பன்னீர் அதிக அளவில் எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுப்பார்.
ஆட்சியை கவிழ்ப்பார். தேர்தல் வரும். திமுக வெற்றி பெறும் என்பது தான் ஸ்டாலினின் திட்டம்.
ஆனால் பன்னீரால் போதுமான அளவு எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.
ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் பன்னீருக்கு அதிக அளவில் ஆதரவு அளிப்பது ஸ்டாலினை கோபத்தில் ஆழ்த்தியது.
தேவையில்லாமல் பன்னீரை பெரிய ஹீரோவாக்கி விட்டோமோ என்ற கவலையில் அவர் இருக்கிறார்.
ஹீரோவாக்கிய பன்னீரை ஜீரோ ஆக்குவதில் ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
பன்னீரை கிழி கிழி என்று கிழித்து எடுங்கள் என்று திமுக ஐடி விங்கிடம் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அவர்களும் கடந்த சில நாட்களில் பன்னீருக்கு எதிரான மீம்ஸ்களையும், கருத்துகளையும் பரப்பி கொண்டிருக்கிறார்கள்.
அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
1)”எனக்கு முதலைமச்சர் பதவி மட்டும் குடுங்க எஜமான். அதிமுகவை உங்களிடம் வித்துவிடுகிறேன்
எஜமான்” என்று பன்னீர் மோடியிடமும் அமித் ஷாவிடமும் கூறுவதை போல் இந்த மீம்ஸை செஞ்சிருக்காங்க.
2) இந்த மீம்ஸை பாருங்கள். “மத்திய துரோகியும் - தமிழ்நாட்டு துரோகியும்”
3) ஊழல் கோஷ்டிகள் ஒழிந்தன. சசி கோஷ்டியும் டீக்கடை பன்னீர் கோஷ்டியும் தமிழகத்தின் சாபக்கேடு.
இனி விடியலை நோக்கி.
4) திமுக உண்மையை புரிந்துக் கொள்ள வேண்டும். சசியை பொறுத்தவரை இனி மக்களிடம்
எடுபடப் போவதில்லை. அவரை அதி பயங்கர வெறுப்புடன் பார்க்கிறார்கள். அந்த அணி ஒரு செத்த பாம்பு.
அவர்கள் மீது மீண்டும் விமர்சனம் வைப்பதில் எனக்கு தெரிந்து உபயோகம் இருப்பதாக தெரியவில்லை.
தீபா தன்னை தானே அழிவை நோக்கி நகர செய்வார்.
ஆனால் ஒபிஎஸ் காவிகள் பின்னால், காவிகளின் துணையோடு சுற்றிக் கொண்டு நல்லவர் வேசம்
போடும் நச்சு பாம்பு. நம்மை வெகு விரைவில் நடக்கும். படமெடுத்து ஆடுவதற்கு முன்னரே தலையில்
தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் தலை தூக்காது.புரியாதார்கள் புரிந்து கொள்ள
முயற்சி செய்யுங்கள்.
5) சந்திர லேக மீது ஆசிட் அடித்து சசிக்கு விபூதி அடித்த நல்லவர் மது சூதனன் மக்களுக்கு நாமம் அடிக்க தயாராகிறார் ஆர்.கே நகரில்!
6) நத்தம் விஸ்வனாதன் - 13 ஆயிரம் கோடி
பன்னீர்செல்வம் - 7 ஆயிரம் கோடி
இன்னொருவர் - 4000 கோடி
3 பேரு கொள்ளை அடித்த பணத்தை நினைச்சாலே என் தலையே சுற்றுதே. மற்ற அமைச்சர்கள்
எவ்வளவு கொள்ளை அடித்தார்களோ தெரியவில்லையே? என்று ஜெயலலிதா நினைப்பது போல்
இந்த மீம்ஸை செய்திருக்கிறார்கள்.
7) திமுக பன்னீரின் உத்தம வேசத்தை அம்பலப்படுத்துவதே இன்றைய காலத்தின் அவசிய தேவை.
திமுக ஒபிஎஸ் அணியின் பித்தலாட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றே ஆகனும்.
இதில் அலட்சியம் காட்டினால் அது திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
சசி அணியின் வண்டவாளம் மக்களுக்கு தெரியும்.
பன்னீரின் உத்தம் வேசம் மக்களுக்கு தெரியாது.
பன்னீரின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டிய நேரம் இதுவே.
8) ஒபிஎஸ் உத்தமரா? மின்சார கொள்முதலில் நத்தத்துடனும், சேகர் ரெட்டியுடனும் கூட்டு சேர்ந்து
பல்லாயிரம் கோடிகள் மணல் மற்றும் கிரேனைட் கொள்ளை.
9) இம்சைஅரசன் படத்தின் சாதி சண்டை மைதானத்தின் போட்டோவை எடுத்து,
நாகபதனி vs நாகப்பதனி என்று ஓபிஎஸ் அணியையும், தினகரன் அணியையும் குறிப்பிடுகிறார்கள்.
10) பன்னீர் அணிக்கு பன்னீரும் நத்தமும் செய்த மின்வாரிய ஊழலை நினைவுபடுத்தும் வகையில் மின்கம்பம்
சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுத்தது.
மொத்தமா தமிழ்நாட்டையே சுருட்டிய தினகரனுக்கு தொப்பியை குடுத்து விட்டது.
நம்மளை விட தேர்தல் ஆணையம் வச்சு செய்யும் போல.
11) மாவா பாண்டியராஜனின் மோசடிகள் அம்பலம்.
பாஜக மூத்த தலைவராக விளங்கிய பிரமோத் மகாஜனின் சொத்துக்களை சுருட்டிக் கொண்டவர்
பாண்டியராஜன். கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் பிரமோத் மகாஜன் அவரது
தம்பியால் சுட்டுக் கொல்லப்படார். கொல்லப்பட்ட பிரமோத் மகாஜனின் தமிழ்நாட்டு பினாமியாக
இருந்த பாண்டியராஜன் அவரது சொத்துக்களையும் ரகசியமாக கொடுத்திருந்த பணத்தையும்
சுருட்டிக் கொண்டார். தமிழ்நாட்டில் விஜய்காந்த முத்லவராவார் என்ற கனவோடு பாஜகவில்
இருந்த அவர் தேமுதிகவில் சேர்ந்தார். தேமுதிக ஆட்சியை படிக்காது என தெரிந்ததும்
அதிமுகவுக்கு தாவினார். அரசின் பல்வேறு துறைகளுக்கு தனது நிறுவனம் மூலம் ஒப்பந்த
அடிப்படியையில் பணியாட்களை நியமித்து பல கோடி சம்பாதித்துள்ளார்.
இது தான் இப்போது இருக்கும் அவல நிலைமை.
மீம்ஸ் போடுவர்கள் வில்லனையும் ஹீரோவாக்குவார்கள்.
மீண்டும் அவரை வில்லனாக மாற்றுவார்கள்.
மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
அலசி ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.
திமுக அதிமுக இருவருமே நச்சு பாம்புகள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்
Tuesday, March 28, 2017
”ஜீரோ பன்னீர்செல்வம்” - ஸ்டாலினின் அதிரடி திட்டம்
Tags
Politics#
அரசியல்#
Share This
About Nambikkai Kannan
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment