Monday, March 13, 2017

16 வருடம் உண்ணாவிரதம் இருந்தவருக்கு மக்கள் செய்த கொடுமை என்ன?

மணிப்பூரில் வாழும் மனித உரிமை ஆர்வலரின் பெயர் Irom Sharmila Chanu

இந்த உலகத்தில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை இந்த பெண் செய்துள்ளார்.
சாதனை என்று சொல்றதை விட மக்களுக்காக செய்த தியாகம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

நவம்பர் 2, 2000 ஆம் ஆண்டில் அந்த 28 வயது பெண் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் ராணுவத்தினர் அங்கு வந்து அங்கிருந்த இளைஞர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்கள்.
இந்த கொடூர தாக்குதலால் 10 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள்.
அந்த பெண்ணின் கண்கள் மட்டுமல்ல, இதயமும் அழுதது. ஒரு தீவிரவாதியாக
இருந்தாலும் கூட இப்படி ஒரு காட்டுமிராண்டி செயலை ராணுவத்தினர் செய்ய கூடாது என்று அவங்க சொன்னாங்க..
ராணுவத்தினருக்கு எல்லையற்ற அதிகாரத்தை யார் கொடுத்தது?
ஒரு கொடிய சட்டம் தான் கொடுத்தது. அந்த சட்டத்தை பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்.

1959 இல் மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தினார்கள்.
பிரிவினைவாதிகளின் வன்முறையை ஒடுக்க இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில்
ராணுவத்தினர் சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் இன்றி கைது செய்ய முடியும், விசாரணை செய்ய முடியும், சோதனை செய்ய முடியும், அவர்களின்
உடைமைகளை கைப்பற்றவும் முடியும். ஒரு ராணுவ வீரர் பொதுமக்கள் யாரையாவது தவறுதலா சுட்டுக் கொன்றுவிட்டால், இந்தச் சட்டம்
அவரை தண்டிக்காது. அந்த அளவிற்கு அதிகாரத்தை இந்த சட்டம் தருகிறது.

ராணுவத்தினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தால் எவ்வளவு அராஜகம் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்தததே.
இலங்கையில் நடந்த கொடுமையை யாரும் மறந்திருக்க முடியாது.
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர் செய்த அட்டுழியத்தால்
நிறைய அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
பெண்களை கற்பழிப்பதும், பின்னர் அவர்களை பிரிவினைவாதிகள் என்று குற்றம் சாட்டி சுட்டுக் கொல்வதும் அங்கு சர்வ சாதாரணமாய் நடந்தது.
2000 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டத்தை பயன்படுத்தி ராணுவத்தினரால் 1528 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அப்பாவி மக்களை பாதிக்கும் அந்த கொடிய சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று ஷர்மிளா முடிவெடுத்தார்.
பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த கோர சம்பவம் நடந்த அடுத்த நாளே அதாவது, நவம்பர் 4ம் தேதி அவர் தன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொன்னாங்க.
தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரை மணிப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த காரணத்தினால் அவரை தனியார் மருத்துவமனையில் ஒரு அறையில் சிறை வைச்சாங்க.
கடந்த 16 ஆண்டுகளாக குழாய் மூலம் அவருக்கு வலுக்கட்டாயமாக திரவ உணவு செலுத்தப்பட்டது.
அவர் வாயால் உணவு சாப்பிடவில்லை. தண்ணீரும் குடிக்கவில்லை.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷம் என்னவென்றால்,
இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து
இறோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.

16 ஆண்டுகள் போராடிய பிறகும் கூட அரசாங்கம் அவரின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
அதனால் ஆகஸ்ட் 9 2016 இல் அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
அவர் கண்ணீர் மல்க என்ன சொன்னார் தெரியுமா
“நான் உயிரோட இருக்க ஆசைப்படுகிறேன். நான் வாழ ஆசைப்படுகிறேன். நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஆனால் இதை எல்லாம் நான் செய்வதற்கு முன்னர், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரில் ரத்து
செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவேன். போராட்டத்தின் வடிவத்தை நான் மாற்றிக் கொண்டேன்.
ஆனா போராட்டம் தொடரும். 16 வருடத்தை உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன். அரசியலில் குதித்து தொடர்ந்து போராடுவேன்.” என்று கூறினார்.

மொத்தம் 5757 நாட்கள் உண்ணாவிரதத்தில் இருந்தார். உலகத்திலேயே அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் இவர் தான்.
28 வயதில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து தன்னுடைய 44ம் வயதில் உண்னாவிரதத்தை முடித்தார்.


சொல்லியது போல் அரசியல் கட்சி தொடங்கினார்.
கடந்த மாதம் நடந்த தேர்தலில், மணிப்பூரில் இவருடைய கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிட்டார்கள்.
நிதி பற்றாக்குறையாலும், கட்சி தொடங்கி 5 மாதங்களில் தேர்தல் நடப்பதாலும்,
அனைத்து தொகுதியிலும் அவரின் கட்சியால் போட்டியிட முடியவில்லை.
போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் படுதோல்வி தான் கிடைத்தது.

ஷர்மிளாவிற்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தது தெரியுமா?
வெறும் 90 வாக்குகள்.
காங்கிரஸ் வேட்பாளர் 20,781 வாக்குகளும், பிஜேபி வேட்பாளர் 11329 வாக்குகளும் பெற்றார்கள்.
கொடுமைய என்னவென்றால் நோட்டாவிற்கு 133 வாக்குகள் கிடைத்துள்ளது.
16 வருடமாய் மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்த பெண்ணுக்கு நோட்டாவை விட
குறைவான வாக்குகள் கிடைத்திருப்பது எதை காட்டுகிறது?
யார் தமக்காக உண்மையாக போராடுகிறார்கள், யாருக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தால்
மாநிலம் நன்றாக இருக்கும் என்பதை கூட மக்கள் அறியாதவர்களாய் இருக்கிறார்கள் என்பதை தான் காட்டுகிறது.

அந்த சட்டத்தை மாநிலத்தில் இருந்து நீக்கும் வரை தன்னுடைய தாயை பார்க்க மாட்டேன் என்றும்
கூறியிருந்தார். சொன்னதை போல் இன்று வரை தாயை பார்க்கவில்லை.
எப்போது பார்ப்போர் என்றும் தெரியவில்லை.

அவங்க மக்கள் நலனுக்காக தான் இந்த தியாகத்தை செஞ்சாங்க.
ராணுவத்தினர் சந்தேகத்தின் அடிப்படையில் எந்தவித விசாரனையும் இல்லாமல் மக்களை இஷ்டத்திற்கு
கொன்று குவிக்க கூடாது என்று தானே கேட்டார். எந்த ஒரு பெண்ணும் ராணுவத்தினரால்
கற்பழிக்கப்பட கூடாது என்று தானே கேட்டார். இளைஞர்களை கண்மூடித்தனமாக சுட்டு
தள்ள கூடாது என்று தானே கேட்டார். 12 வயது சிறுவனை தீவிரவாதி என்று கூறி, அவனின் தாய்
முன்னரே அவனை சுட்டுக் கொன்ற சம்பவம் இனி நடக்க கூடாது என்று தானே கேட்டார்.

இதில் ஏதாவது சுயநலம் இருக்கிறதா?
தன் மாநிலத்தின் மக்களுக்காக தானே இதை அவர் கேட்டார்.
ஆனால் அந்த மக்களே இவரை தோற்கடித்து இருப்பது வேதனையை தருகிறது.

தன் மனைவியை கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் Amanmani என்பவரை மக்கள் தேர்தலில் ஜெயிக்க வைக்கிறார்கள்.
மாவியா டானும் தற்போது சிறையில் இருக்கும் Mukhtar Ansari என்பவரை மக்கள் தேர்தலில் ஜெயிக்க வைக்கிறார்கள்.
குற்றப்பிண்ணனி உள்ள பல பேரை மக்கள் தேர்தலில் ஜெயிக்க வைக்கிறார்கள்.
ஆனால் 16 வருடம் மக்களுக்காக உணவு அருந்தாமல், தண்ணீர் குடிக்காமல்
போராடிய ஒரு நல்லவரை தேர்தலில் ஜெயிக்க வைக்க மக்கள் விரும்புவதில்லை.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு‘Thanks for 90 votes’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.
90 வாக்குகளுக்கு நன்றி என்று சொல்லியிருக்கிறார்.
இந்த 4 வார்த்தைக்குள் எவ்வளவு சோகம் அடங்கியிருக்கிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

வாய் சவாடல் வீரர்களை தான் மக்கள் நம்புகிறார்கள்.
நேர்மையானவர்களையும், உண்மையானவர்களையும் மக்கள் ஆதரிக்க தயக்கம் காட்டுகிறார்கள்.
அதனால் தான், தமிழ்நாட்டில் சகாயம் போன்றோர் அரசியலில் வராமல் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த நிலை மாற வேண்டும்.
மக்கள் நல்லவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.

இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot