Thursday, March 16, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயிக்க போவது யார்?

வழக்கமா தமிழ்நாட்டில் தேர்தல் வந்தால் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் கடும் போட்டி இருக்கும்.
ஆனால் இம்முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டியாக இருக்கிறது.

அதிமுக உடைந்து மூன்று அணிகளாக களம் இறங்குகிறது.
பன்னீர் அணி, தினகரன் அணி, தீபா அணி.
பன்னீர் அணியில் மதுசூதணன் போட்டியிடுகிறார்.
மீதி இரண்டு அணிகளில் தலைகளே போட்டியிடறாங்க.

திமுகவில் மருது கணேஷ் என்ற புது முகத்தை வேட்பாளரா களம் இறக்கி இருக்காங்க.
எங்க கட்சியில் உண்மையாக உழைக்கும் அடி மட்ட தொண்டனுக்கும் நிச்சயம் சீட் கிடைக்கும் என்று பெருமையாய் சொல்லிக் கொள்கிறார்
ஸ்டாலின்.

2011 தேர்தலில் இந்த தொகுதியில் 72 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதிமுக 31255 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிமுக 59% வாக்குகள் பெற்றார்கள்.
திமுக 37% வாக்குகளை பெற்றார்கள்.

2015 இல் இன்ங்கு நடந்த இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சிகள் போட்டியிடவில்லை.
ஜெயலலிதா பெரிய வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் இந்த தொகுதியில் 68.38 சதவீதம் வாக்குகள் பதிவானது.
அதிமுக 39545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிமுக 56% வாக்குகளை பெற்றார்கள்.
திமுக 33% வாக்குகளை பெற்றார்கள்.

பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் இருவருமே கட்சிக்கும் இரட்டை சிலை சின்னத்திற்கும் தேர்தல் கமிசனிடம் உரிமை கோரியுள்ளார்கள்.
1989இல் நடந்ததை போல் தான் இப்போதும் அதிமுகவில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.
அப்போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிசன் முடக்கி விட்டது. ஜெ அணிக்கு சேவல் சின்னமும், ஜா அணிக்கு இரட்டை புறா சின்னமும்
வழங்கப்பட்டன. அதே போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடக்க வாய்ப்பு உள்ளது.

அதிமுகவின் 56% வாக்குகள் உடைய போகிறது.
என்னுடைய கணிப்பு தினகரனுக்கு 25% வாக்குகள் கிடைக்கும்.
பன்னீருக்கு 20% வாக்குகள் கிடைக்கும், தீபாவிற்கு 11% வாக்குகள் கிடைக்கும்.

திமுக கடந்த முறை பெற்ற 33% வாக்குகளை தக்க வைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்.
ஆனால் இது இடைத்தேர்தல். திருமங்களம் பார்முலாவை ஆளும் கட்சியினர் களம் இறக்குவார்கள்.
தினகரன் கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு ஒரு கிலோ தங்கமும், இரண்டு கோடி ரூபாயும் கொடுத்தாய் தகவல்கள் வந்தன.
ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு தினகரன் ஒரு கிராம் தங்கம் தரப்போகிறார் என்று செய்திகள் பரவுகின்றன.
கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
தினகரன் அணி எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் கொட்டுவார்கள்.
தங்கள் குடும்பத்தின் மீது இருக்கும் கொலைப்பழியை அழிக்க வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில்
தினகரன் இருக்கிறார். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஜெயலலிதாவே 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஜெயித்தார்.
இவர் என்ன தைரியத்தில் இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒரு கிராம் தங்கம் கொடுக்கும் தைரியமோ?

பன்னீர் கோஷ்டி சும்மா இருக்குமா. பன்னீர் என்ற பொம்மையை வழி நடத்தும் பிஜேபி பணத்தை வாரி இறைக்க
வாய்ப்பு இருக்கிறது. சசிகலா குடும்பத்தை நிர்மூலம் ஆக்கி அதிமுகவை அழித்து விட வேண்டும்
என்று தீர்மானத்துடன் செயல்படும் பிஜேபி பணத்தை வாரி இறைப்பார்கள்.

தீபாவிற்கு துணையாக இருப்பது ஜெயலலிதாவின் தோற்றம் மற்றும் ஜெயலலிதாவின் இரத்த சொந்தம் என்ற அங்கீகாரம் தான்.
இவற்றை மட்டுமே நம்பி களம் இறங்குகிறார்.
என்னுடைய கணிப்புப்படி தீபா படுதோல்வி அடைவார்.
பின்னர் பிஜேபியில் இணைவார்.

அதிமுக மூன்றாக உடைந்து இருக்கும் போதும், திமுக தோற்று போனால் இதை விட பெரிய அசிங்கம்
திமுகவிற்கு எதுவும் இல்லை என்பது ஸ்டாலின் தெரியும்.
வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ஸ்டாலின் இருக்கிறார்.
பணத்தை அள்ளி வீசுவார்.

நாம் தமிழர் கட்சி போட்டியிகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.
இரண்டு இளைஞர் கட்சிகள் களம் இறங்குகிறார்கள். தமிழ்நாடு இளைஞர் கட்சி
மற்றும் நம் தேசம் நம் குரல். ”நம் தேசம் நம் குரல்” கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது
தினத்தந்தியின் முதல் பக்கத்தில் செய்தியாய் வெளியிட்டார்கள்.
அதனால், ஏதோ ஒரு பெரிய சக்தி இளைஞர்களை திசை திருப்ப இந்த கட்சியை ஆரம்பித்தார்களா
என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழ்நாடு இளைஞர்கள் கட்சியில் தலைவர்கள் இல்லை.
ஐந்து ஒருங்கினைப்பாளர்கள் மட்டுமே கட்சியை தொடங்கினார்கள். கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவது
மட்டுமே இவர்களின் வேலை. கீழ் மட்டத்தில் இருந்து படிப்படியாக தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
இறுதியாக ஒரு தலைமை குழு உருவாக்குவது தான் இவர்களின் திட்டம்.
எந்த பதவிகளுக்கும் இந்த ஒருங்கினைப்பாளர்கள்  வரமாட்டார்கள் என்று தான்
சொன்னார்கள்.

ஆனால் அந்த ஐவரில் ஒருவரான காமேஷை வேட்பாளராக
களம் இறக்கியுள்ளார்கள். சொன்னது ஒன்று செய்தது வேறோன்று. ஏன் இப்படி செய்தீர்கள் என்று எங்களுக்கு
பதில் அளிக்கனும் என்று பல முறை பேஸ்புக் வாயிலாக நான் கேள்வி கேட்டேன். இன்னும் பதில் கிடைக்கவில்லை
எனக்கு அந்த கட்சியின் மீது நம்பிக்கை வந்தால் மட்டுமே நான் உங்களிடம் ஆதரவு கேட்பேன்.
அது வரை அந்த கட்சியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பேன்.

2015, 2016,2017 என்று வருசா வருசம் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடக்கிறது.
இம்முறை கவனிப்பு அதிகமாகவே இருக்கும். மொத்தத்தில் ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு பண மழை தான்.

பணத்தை வாங்கிட்டு தினகரனுக்கு ஓட்டு போட்டா உங்களுக்க்கு சுடு சொரனை இல்லைனு அர்த்தம்
என்று பன்னீர் ஆதரவாளர்கள் சொல்றாங்க.

இப்படி கேக்கற்வங்க எந்த அடிப்படையில் பன்னீரை ஆதரிக்கிறாங்கனு கேட்டா அதுக்கு ஒரு காரணம் சொல்வாங்க.
அதே மாதிரி காசு வாங்கிட்டு தினகரனுக்கு ஒட்டு போட போகும் மக்களூம் ஏதாவது ஒரு காரணம் சொல்வாங்க.
எல்லாருமே ஏதாவது காரணதை வச்சிக்கிட்டு தான் சுத்திக்கிட்டு இருக்காங்க.

என்னுடைய விருப்பம் இதுவே.
தமிழ்நாடு இளைஞர் கட்சி உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால்,
அவர்களுக்கு வாக்கு அளியுங்கள். இல்லையெனில் யாராவது நல்லவர்கள் சுயேட்சையா நின்னா ஓட்டு போடுங்க.
இல்லைனா நோட்டாவுக்கு போட்டுட்டுங்க.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot