Sunday, March 19, 2017

உத்திரபிரதேச தேர்தலில் ஓட்டுக்கு 2000 ரூபாய். அதிர்ச்சி தகவல்

உத்தரபிரதேசம் உட்பட ஐந்த மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிவுகள் வெளியானது. நாட்டின் மிக பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள்
உள்ளது. சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி, பாஜக, பகுஜன் சமாய் கட்சி
ஆகிய முக்கிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
பாஜக 325 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்த தேர்தலுக்கு முன்பும், பின்பும் CMS என்ற நிறுவனம்
வாக்காளர்களிடம் ஆய்வு நடத்தியது.
உத்தரபிரதேச தேர்தலுக்காக எவ்வளவு அரசியல் கட்சிகள் எவ்வளவு
பணம் செலவு செய்துள்ளார்கள் என்று கண்டறிய இந்த ஆய்வை செய்திருக்கிறார்கள்.

பெரிய அரசியல் கட்சிகள் சுமார் 5500 கோடி ரூபாய் தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவு செய்துள்ளார்கள்.
இதில் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயை வாக்களார்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் தங்களுக்கு பணத்தையோ அல்லது மதுபானத்தையோ
கட்சிகள் கொடுத்ததாக கூறியுள்ளார்கள்.

தேர்தலில் ஒரு வேட்பாளர் 25 லட்சம் ரூபாய் வரை தேர்தலுக்காக செலவு செய்யலாம்
என்பது தேர்தல் கமிசனின் சட்டம். ஆனால் பெரிய கட்சிகள் அதை விட பல மடங்கு
அதிகமாய் செலவு செய்கிறார்கள் என்பது ஊறரிந்த உண்மை.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், வீடியோக்கள், வேன்கள், சமூக வலைத்தளங்கள், மாநாடுகள்,
தெருமுனை பிரச்சாரங்கள்  உட்பட பல வழிகளில் அரசியல்
கட்சிகள் பிரச்சாரம் செய்தார்கள்.

செலவு செய்த தொகையை வைத்து பார்க்கும் போது, தேர்தலில் பதிவான ஒவ்வொரு
ஓட்டின் மதிப்பு 750 ரூபாய் என்பது தெரிகிறது.

கடும் போட்டி நிலவிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு 500 முதல் 2 -ஆயிரம் ரூபாய் வரை
கொடுத்துள்ளார்கள். இதற்கு முந்தைய தேர்தலை விட, இந்த தேர்தலில் வேட்பாளர்கள்
அதிக பணம் செலவிட்டதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

தேர்தல் கமிசனால் 200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கவேண்டிய செய்தி.

கட்சிகளுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது.
யாரு நன்கொடையாக கொடுத்தார்கள்.
தொழிலதிபர்கள் தான் கொடுத்திருப்பார்கள்.
அவர்களிடம் பணத்தை வாங்கி ஜெய்க்கும் அரசியல்வாதிகள், யாருக்கு நல்லாட்சி தருவார்கள்
என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின், மக்கள் பணத்தை மாற்ற எவ்வளவு திண்டாடினார்கள்.
அரசியல்வாதிகள் பேங்க் வாசலில் நின்றதை நீங்கள் பார்த்தீர்களா? யாருமே பார்க்க வில்லை.
அப்படி எனில், இந்த அரசியல் கட்சிகளுக்கு இவ்வளவு புது ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து வந்தது.
மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது திட்டம் மக்களை மட்டும் தான் பாதித்திருக்கிறுக்கிறது என்பது தெளிவாய் தெரிகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு விஷயத்தில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.
என்ன தெரியுமா?
அரசியல் கட்சிகளை தகவல் அறியும் சட்டத்தின் உள்ளே கொண்டு வர கூடாது என்பதே அவர்கள் அனைவரின் ஒருமித்த குரல்.
கொண்டு வந்து விட்டால் இவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும்.

இந்த ஆய்வு முடிவை பார்க்கும் போது ஒன்று தெளிவாய் தெரியுது.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் தேர்தல்களில் தங்களின் கறுப்பு பணத்தை வாரி இறைக்கிறார்கள்
என்று பிஜேபியும், காங்கிரஸும் கதறுவார்கள். ஆனால் அவர்கள் யோக்கியார்களா என்ன?
கண்டிப்பாக இல்லை என்பது மீண்டும் நிருபணம் ஆனது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot