Monday, March 27, 2017

ஏமாற்றிய பன்னீர், பதறிய ஸ்டாலின்

தோல்வி மேல் தோல்வி.
விரக்தியின் உச்சியில் ஸ்டாலின்

ஆர்.கே.நகர் தேர்தலில் தோல்வி பயத்தில் ஸ்டாலின்:
பன்னீரால் ஏமாந்து போன ஸ்டாலின்
இணைய போகிறதா சசி அணியும், பன்னீர் அணியும்?
ஏமாற்றிய பன்னீர், பதறிய ஸ்டாலின்

பன்னீரின் பின்னால் இருப்பது வெறும் பிஜேபி மட்டும் தான் என்று நினைப்பது தவறு.
திமுகவும் பன்னீரை ஆதரித்தது.

“நீங்கள் இன்னும் நாலரை வருடங்கள் முதல்வராக இருக்கனும்.
உங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் சதி செய்கிறார்கள்.
நீங்கள் கவலைப்படாதீர்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கே” என்று சட்டசபையில் திமுகவின் துரைமுருகன் கூறினார்.
இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பன்னீர் அமைதியாய் இருந்தார்.

திமுகவின் ஆதரவு இங்கு தொடங்கவில்லை.
ஜெயலலிதா இறந்த போது, அஞ்சலி செலுத்த வந்த ஸ்டாலின், பன்னீரின்
கையை பிடித்து ஆறுதல் கூறினார். அங்கு தான் பன்னீருக்கு வலை வீச்சு தொடங்கியது.
டிசம்பர் 5க்கு பிறகு பல முறை தலைமை செயலகத்தில் பன்னீரை ஸ்டாலின் சந்தித்து
இருக்கிறார். ஒரு எதிர்கட்சி தலைவர் முதல்வரை பார்ப்பது தவறா என்று கேட்கறீங்களா.
இல்லை. ஆனால் ஸ்டாலின் இதுவரை அப்படி இருந்தவர் இல்லை.
எடப்பாடி முதல்வர் ஆன போதும் ஸ்டாலின் அப்படி இல்லை.
இடையில் இரண்டு மாதங்கள் பன்னீரை ஏன் அவ்வளவு முறை சந்தித்தார் என்று யோசிக்கனும்.

பிஜேபியின் ஆதரவும் இருக்கு, திமுகவின் ஆதரவும் இருக்கு என்ற மகிழ்ச்சியில் உண்ணாவிரத நாடகத்தை தொடங்கினார் பன்னீர்.
பன்னீரின் உண்ணாவிரதத்திற்கு பிறகு, அவரை ஹீரோ ஆக்கியதில் திமுக ஐடி விங்கும் முக்கிய பங்காற்றியது.
ஆனால் பிஜேபியும் திமுகவும் எதிர்பார்த்தது போல் பன்னீரால் போதுமான எம்.எல்.ஏக்களை தன் தரப்புக்கு இழுக்க முடியவில்லை.
மேலும் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பன்னீர் கோஷ்டி ரகளையில் ஈடுபடாமல் அமைதியாய் இருந்தது
ஸ்டாலினுக்கு எரிச்சல் ஊட்டியது.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களை குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அவர்கள்
தொகுதிக்கு செல்ல விடுங்கள். பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடக்கட்டும் என்ற எந்த
ஆளும் கட்சியும் ஒப்புக் கொள்ளாத கோரிக்கையை ஸ்டாலின் வைத்தார். ஆனால் சபாநாயகர் ஒப்புக் கொள்ளவில்லை.

திட்டம் தோற்றது, பன்னீரால் ஒரு பிரியோஜனமும் இல்லை என்ற விரக்தியில் சட்டசபையை ஸ்டாலின்
கூட்டம் கலவர பூமி ஆக்கியது. ஸ்டாலின் தன் சட்டையையும் சபாநாயகர் சட்டையையும் கிழித்துக் கொண்டார்.
சட்டசபை கலவரத்தின் மூலமாவது ஆட்சியை கவிழ்க்க முடியுமா என்று ஸ்டாலின் ஏங்கினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
மார்ச் 23 ஆம் தேதி வாக்கெடுப்பு நடந்தது.
பன்னீர் கோஷ்டி சபாநாயகருக்கு எதிராக ஓட்டுப் போடுவார்கள் என்று ஸ்டாலின் நினைத்தார்.
ஆனால் அவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவே இல்லை.
அவர்கள் தரப்பில் இருந்த எம்.எல்.ஏ நடராஜ் மட்டும் கலந்து கொண்டு, சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இது ஸ்டாலினை மேலும் கடுப்பாக்கியது.
பன்னீர் தரப்பு சசிகலாவுடன் சேர்ந்து விடுவார்களோ என்ற நடுக்கம் ஸ்டாலினிக்கு ஏற்பட்டது.

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த பயத்தில் தான் எடப்பாடிக்கு ஆதரவாக
வாக்களித்தார்கள். அவர்கள் தொகுதிக்கு சென்றிருந்தால், மக்கள் மனநிலையை புரிந்து எடப்பாடிக்கு எதிராக
வாக்களித்து இருப்பார்கள் என்று அவர் சொல்லியிருந்தார்.

ஆனால் மார்ச் 23 ஆம் தேதி சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு முன்னால்
அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்கும் அடைத்து வைக்கப்படவில்லையே.
40 நாட்களாய் அவர்கள் தங்கள் தொகுதியில் தானே இருக்கிறார்கள். ஆனால் ஏன் அவர்கள் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்கவில்ல
என்று அனைவரும் ஸ்டாலினை கேள்வி கேட்க தொடங்கினார்கள்.

தான் போட்ட எல்லா திட்டங்களும் தோல்வியில் முடிகிறதே என்று தனக்குள் அழுது தீர்த்தார் ஸ்டாலின்.
விரைவில் திமுக ஆட்சி என்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் இருந்தே துரைமுருகன் கூறிவருகிறார்.
ஆனால் இன்னமும் அது நடக்கவில்லை என்பதில் திமுக தொண்டர்கள் சோர்வாய் உள்ளார்கள்.
ஆர்.கே.நகரில் உற்சாகம் இல்லாத திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்த வெகு விரைவில் திமுக ஆட்சி அமைய
வேண்டும் என்றால் ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும், அதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்
என்று துரைமுருகன் தொண்டர்களுக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார்.

பன்னீர்செல்வத்தால் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட ஒரே நன்மை இரட்டை இலை சின்னம் முடங்கி போனது தான்.
அதிமுக மூன்றாய் உடைந்து இருக்கிறது, இரட்டை இலை சின்னமும் இல்லை, திமுகவிற்கு தான்
வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று பெரும்பாலும் அனைவரும் கூறுகிறார்கள்.
ஆனால் களத்தில் ஸ்டாலினை விட பன்னீருக்கே அதிக செல்வாக்கு இருக்கிறது.
பன்னீரை தேவையில்லாமல் பெரிய ஹீரோவாக்கி விட்டாமா என்ற கவலையில் ஸ்டாலின் இருக்கிறார்.
மேலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதினால் தினகரன் பணத்தை வாரி இறைப்பார்,
திமுகவும் அவர்களை விட அதிகமாக பணத்தை கொடுப்பதா, அல்லது என்ன மாதிரி இந்த தேர்தலை அணுகுவது
என்று தெரியாமல் ஸ்டாலின் குழம்பிக் கொண்டிருக்கிறார்.
இன்று வரை திமுக மூத்த தலைவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக மூன்றாய் உடைந்த காலத்திலும் திமுக வெற்றி பெற வில்லை என்றால்
தொண்டர்கள் சோர்வு அடைந்து விடுவார்களே, அதனால் வெற்றி பெற்றே ஆக
வேண்டும் என்பது ஸ்டாலின் கையில் இருக்கும் பெரிய சவால்.
வெற்றி பெறுவாரா. பொறுத்திருந்து பார்ப்போம்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot