Wednesday, March 22, 2017

முடங்கியது இரட்டை இலை. முடிந்தது சசிகலா கதை

இரட்டை சிலை சின்னம் பன்னீருக்கும் இல்லை, சசிக்கும் இல்லை
இரட்டை சிலை சின்னம் முடக்கம். அழிவு பாதையில் அதிமுக
முடங்கியது இரட்டை இலை. முடிந்தது சசிகலா கதை.

சசிகலா தரப்பு, பன்னீர்செல்வம் தரப்பு இருவருமே இரட்டை இலை சின்னத்திற்கு தேர்தல் கமிசனிடம் உரிமை கோரினார்கள்.
இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதத்தை நேரில் ஆஜராகி விளக்குங்கள் என்று தேர்தல் கமிசன் கூறினார்கள்.

அதன் படி, நேற்று நாள் முழுக்க இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தேர்தல் கமிசன், இரவு 11 மணிக்கு தங்களின் முடிவை வெளியிட்டார்கள்.
இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்புக்குக்கும் கொடுக்கலை,
பன்னீருக்கும் கொடுக்கலை. இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி விட்டார்கள்.
ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக என்ற வார்த்தையை கூட இரு தரப்பினரும் பயன்படுத்த கூடாது என்றும் தேர்தல்
கமிசன் அதிரடி தீர்ப்பு சொல்லி விட்டார்கள்.

“இந்த ஆண்டு யாருக்கும் ஒதுக்கப்படாத 85 சின்னங்கள் இருக்கிறது.
அதில் இருந்து மூன்று சின்னங்களை இரு தரப்பினரும் தேர்வு செய்து காலை 10 மணிக்கு
தேர்தல் கமிசன் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
அதில் இருந்து ஒரு சின்னத்தை இரு தரப்புக்கும் ஒதுக்குவோம்” என்று தேர்தல் கமிசன் கூறியிருக்கிறார்கள்.

கட்சியின் பொதுச்செயலாளராய் சசிகலாவை நியமித்ததில் சர்ச்சை நீடிப்பதால்,
தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இரட்டை இலை சின்னத்தை மீட்க ஏப்ரல் 17ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அதற்குள் உரிய ஆவணங்களை தேர்தல் கமிசனிடம் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எம்.ஜி. ஆர் மறைவிற்கு பிறகு அதிமுக உடைந்து ஜெ அணி, ஜா அணி என்று இரு அணி உருவானது.
ஒரு வருட ஜனாதிபதி ஆட்சிக்கு பின் 1989 ஜனவரியில் தேர்தலை சந்தித்தார்கள்.
அதிமுக உடைந்த காரணத்தால் ஜெ அணியும், ஜா அணியும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தார்கள்.
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
அதிமுக (ஜா) அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜே) அணிக்கு சேவ
ல் சின்னமும் வழங்கப்பட்டன.
அதிமுகவினால் ஏற்பட்ட பிளவாலும், இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காத
காரணத்தாலும் அதிமுகவின் வாக்குகள் சிதைந்தது. அதனால் திமுக ஆதாயம் அடைஞ்சாங்க.
மொத்தம் இருந்த 232 தொகுதிகளில் திமுக 150 இடங்களை கைப்பற்றியது.
ஜெ அணி 27 இடங்களையும், ஜா அணி 2 இடங்களையும் பெற்றார்கள்.
திமுக 38 சதவீத வாக்குகளை பெற்றார்கள். ஜெயலலிதா அணி 22 சதவீத வாக்குகளையும், ஜானகி அணி 9% வாக்குகளையும் பெற்றார்கள்.

28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருக்கிறது.
புதிதாய் ஒரு சின்னத்தில் தினகரனும், பன்னீர் தரப்பு வேட்பாளர் மதுசூதனும் போட்டியிட போகிறார்கள்.
இரடை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காத காரணத்தால், திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகமாகி இருக்கிறது.
இருந்தாலும் உறுதியாக சொல்ல முடியாது. பணநாயகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot