Sunday, April 2, 2017

தீபாவின் ஐந்து உலக சாதனைகள்

தீபா மாதவன் பேட்ரிக்:

யார் இவர்?
இதுவரை மக்களுக்காக எதுவும் செய்ததில்லை. 34 வருடம் அரசியலிலிலும், 15 வருடங்கள் முதலமைச்சராகவும் இருந்தத தன் அத்தையின் வாயில் இருந்து ஒரு முறை கூட இந்த பெயர் பொதுவெளியில் வந்ததில்லை. ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது தான், இந்த பெயரே தமிழக மக்களுக்கு தெரிந்தது.

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக கட்சியும், முதலமைச்சர் பதவியும் தனக்கு தான் சொந்தம் என்று களம் இறங்கி இருக்கும் பேராசை பெண்மணி. ஆர்.கே.நகரில் வெயில் தாங்க முடியாமல் மாலை நேரத்தில் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபடும் சொகுசு பெண்மணி.  ஜெயலலிதா போல் இருக்கும் முகத்தினை வைத்து மக்களை ஏமாற்றி நேரடியாக முதலமைச்சர் ஆகி விடலாம்
என்று நினைத்துக் கொண்டிருக்கும் தீபா செய்த உலக சாதனைகள் பல. அதில் சிலவற்றை நாம் இப்போது காணலாம்.

1) இவருடைய கட்சியின் பெயர் எம்.ஜீ.ஆர் அம்மா தீபா பேரவை. தன் பெயரில் இதுவரை யாராவது கட்சி ஆரம்பிச்சிருக்காங்களா? இவர் செய்தது உலக சாதனை தானே?

2) இவர் எதுவரை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குறிக்கப்பட்ட நேரத்தில் வந்ததில்லை. குறைந்தது 2 மணி நேரமாவாது தாமதமாய் தான் வருவார். அரசியலில் நேரம் ரொம்ப முக்கியம்.  ஆனா, நான் லேட்டா தான் வருவேன். என் அத்தையின் முகம் எனக்கு இருக்கு. அது என்னை முதலமைச்சராக்கும் என்று கனவு காணும் தீபாவின் சாதனையை நிச்சயம் உலக சாதனை பட்டியலில் சேர்த்தே ஆகனும்ல?

3) தீபாவின் கட்சியில் இருந்து விலகி கணவர் மாதவன் புது கட்சி தொடங்கினார்.   கட்சி ஆரம்பித்த பத்தே நாளில், கட்சி உடைந்த கதையை உலகத்தில் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர் தீபா.

4) தீபா வேட்புமனு தாக்கல் செய்த போது, தனக்கு கணவர் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.  பதற்றத்தில் தீபா தன் பெயரை எழுத மறந்து விட்டதாக கணவன் கூறுகிறார். பதற்றத்தில் கணவரையே மறந்து உலக சாதனை செய்த தீபாவை பாராட்ட வார்த்தை இல்லையே.

5) அத்தை மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றார், பின் சந்தேகம் இல்ல்லை என்றார். பிறகு மீண்டும் சந்தேகம் இருக்கிறது என்றார். அரசியலில் மாற்றி மாற்றி பேசுவது சகஜம் தான். ஆனால் மிக குறைந்த கால இடைவெளியில் மாற்றி மாற்றி பேசுவது நிச்சயம் உலக சாதனையே.

பணத்துக்காகவும், புகழுக்காகவும் மட்டும் அரசியலுக்குள் வந்திருக்கும் தீபாவை ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காமல் கடும் தோல்வி அடைய வேண்டும்.

தீபாவிற்கும், சசிகலாவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லையே.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை இருவரையும் அரசியலுக்கு கொண்டு வர வில்லை.

இதை கேட்ட அனைவருக்கு நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot