Tuesday, March 21, 2017

கவலையை போக்கும் அருமையான கதை


ஒரு கல்லூரி ஆசிரியர் தன்னோட கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை தூக்கி வைத்துக் கொண்டு
அதன் எடை எவ்வளவு தெரியுமா என்று மாணவர்களைக் கேட்கிறார்.

500 கிராம் என்று ஒரு குரல் வந்தது.
600 கிராம் என்று ஒரு குரல் வந்தது.

பாட்டிலை எடை போடும் வரை அதன் எடை நமக்கு தெரியாது என்று கூறிய ஆசிரியர்
இந்த பாட்டிலை 30 நிமிடங்கள் நான் கையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும் என்று மாணவர்களை கேட்கிறார்.
ஒன்றும் நடக்காது என்று ஒரு மாணவர் பதில் அளித்தார்.

சரி, இன்னும் நிறைய நேரம் கையில் வச்சிக்கிட்டு இருந்தா, ஒரு 2 மணி நேரம் இந்த பாட்டிலை கையில்
வச்சிக்கிட்டு இருந்தா என்ன ஆகும் என்று மாணவர்களை கேட்கிறார்.
உங்கள் கை வலிக்கும் என்று ஒரு மாண்வர் பதில் அளித்தார்.

24 மணி நேரம் இந்த பாட்டிலை நான் கையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும் என்று கேட்கிறார்.
கடுமையான வலி ஏற்பட்டு கை செயலிழந்து போகும் என்று ஒரு மாணவர் பதில் அளித்தார்.

அதை கேட்ட ஆசிரியர் இவ்வாறு பேசினார்.
நீங்க ஒன்றை கவனிச்சீங்களா
எவ்வளவு நேரம் கையில் வச்சிக்கிட்டு இருந்தாலும், இந்த பாட்டிலின் எடை குறையவில்லை.
ஒன்று தான் மாறியது. எவ்வளவு நேரம் கையில் வைத்திருக்க போகிறேன் என்பது மட்டும் தான் மாறியது.

இதன் மூலம் ஆசிரியர் தன் மாணவர்களுக்கு சொல்லும் கருத்து தான் என்ன?
இந்த பாட்டில் போல இருப்பது தான் நம்முடைய பிரச்சனைகள், கவலைகள் மற்றும் நிலையற்ற வாழ்க்கை பற்றிய பயம்.
இதை எல்லாம் எவ்வளவு காலம் நாம் பிடித்துக் கொண்டிருக்கிறோமா, அந்த அளவிற்கு வலி அதிகமாகி கொண்டே தான் போகும்.

இரண்டு விதமான பிரச்சனைகள் இருக்கிறது. ஒன்று நம்மால் தீர்க்க கூடிய பிரச்சனை.
இன்னொன்று நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனை.
தீர்க்க கூடிய பிரச்சனனை என்றால் அதை பற்றி நாம் ஏன் கவலைப்படனும்? கவலைப்பட தேவையில்லலை?
தீர்க்க முடியாத பிரச்சனையா இருந்தா, அதை தான் தீர்க்க முடியாதே, ஏன் தேவையில்லாம நாம அதை பற்றி கவலைப்படனும்?

நாம் அசையாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த நொடியில் உலகம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு தான்
இருக்கிறது. ஒரு மணி நேரத்தில் 1,600 கிலோ மீட்டர் நம்முடைய உலகம் பயணம் செய்கிறது.
ஒரு நொடி கூட நம் உலகம் நிற்கவில்லை.
இப்படி நிலையில்லாத உலகில் நம்மிடம் இருக்கும் மகிழ்ச்சி மற்றும் இன்பம்
என்றுமே நம்மிடம் நிலையாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

இன்பமோ துன்பமோ எதுவுமே நிலையில்லை.
அது நம்மை விட்டு விலகி கொண்டே தான் இருக்கும்.
தண்ணீர் பாட்டிலை போல் அதை பிடித்துக் கொண்டு இருக்க நினைத்தால் பிரச்சனை அதிகமாகுமே தவிர குறையாது..

கடமையை செய்வோம்.
என்ன பலன் கிடைக்கும் எனபதை பற்றி கவலையில்லாமல், இங்கு எதுவுமே நிலையில்லை என்பதை
மறக்காமல் மன அமைதியுடன் வாழ்வோம்.

இதை கேட்ட அனைவருக்கும், நன்றி வணக்கம்.

இங்கு எதுவுமே நிலையில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot