Saturday, March 25, 2017

ரஜினிகாந்தின் அந்தர்பல்டிகள் அம்பலம் | U-turns of actor Rajinikanth

சமீபத்தில் ரஜினி இரண்டு அந்தர்பல்டிகளை அடித்து இருக்கிறார்.
இரண்டிலுமே பிஜேபிக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து, பின் எதிர்ப்பு கிளம்பியவுடன் பின் வாங்கியிருக்கிறார்.

1) ஆர்.கே.நகரில் பிஜேபி வேட்பாளர் கங்கை அமரனுக்கு ஆதரவு என்று ரஜினி பிஜேபியிடம் கூறியிருக்கிறார்.
  அவர்களும் மீடியாக்களில் வெளிப்படையாக அறிவித்தார்கள்.
  அதுக்கு அப்புறம் ரஜினி ஏன் பயந்தார்னு தெரியலை?
  எதுக்கு பின்வாங்கினார்னு தெரியலை?
  ஆர்.கே.நகர் தொகுதியில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
  அப்படி என்றால் ஏன் பிஜேபியினர் நீங்கள் ஆதரவு அளித்ததாக சொன்னார்கள்?
  அவர்கள் பொய் சொன்னார்களா என்பதற்கு வழக்கம் போல் ரஜினியிடம் எந்த பதிலும் இல்லை.

2)ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், போர குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்துவதற்கு இலங்கைக்கு
மேலும் 2 ஆண்டு கால அவகாசம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு உலகெங்கும் உள்ள தமிழர்களும்
கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் எந்திரன் 2.0 படத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் போரால் பாதிக்கப்பட்ட
இலங்கை தமிழர்களுக்கு 150 வீடுகளை கட்டியிருக்கிறார் என்றும் அதை மக்களிடம் ஒப்படைக்கும்
நிகழ்ச்சியில் ரஜினி தலைமை தாங்குவார் என்றும் செய்திகள் வெளியானது.

இதற்கு அரசியல்வாதிகள் திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த முன்னாள் இலங்கை
அதிபர் ராஜபக்‌ஷேவிற்கு நெருக்கமானவர். இலங்கையில் தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
அவர்கள் சுதந்திரம் இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு தமிழர்களுக்கு சகஜமான
நிலை தான் இருக்கிறது என்பதை உலகிற்கு காட்ட தான் ரஜினியை அழைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
அதனால் இதை ரஜினி தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

இவர்கள் சொல்லும் கருத்தை முழுமையாக ஏற்கவில்லை என்றாலும், அவர்களின் அன்பு வேண்டுகொளை
ஏற்று இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக ரஜினி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இலங்கைக்கு சென்று தமிழர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், தயவு செய்து
அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை நாம் இப்போது பார்க்கலாம்.

1) நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை என்று சொல்லியிருக்கிறார்.
  என் கேள்வி என்னவென்றால் சினிமா கலைஞன் ஏன் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கனும், பின்னர் ஏன் பின்வாங்கனும்?
  நான் அரசியல்வாதி அல்ல. நான் கடவுளும் அல்ல. என் கட் அவுட்க்கு ஏன் பாலாபிஷேகம் ஊத்தறீங்க?
  ஏழை மக்களுக்கு அந்த பாலை குடுங்க என்று என்னிக்காவது ரஜினி சொல்லியிருக்கிறாரா?
 
2) நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை.
1) 1996 இல் அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தது ஏன்?
2) 2004 இல் பாரதீய ஜனதாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தது ஏன்?
3) ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உங்களை வந்து சந்தித்து போட்டோ
எடுப்பதும் ஏன்?
4) ஆர்.கே. நகரில் கங்கை அமரனுக்கு ஆதரவு என்று கூறி விட்டு பின்னர் யாருக்கும் ஆதரவு இல்லை என்று சொன்னதும் ஏன்?
5) நான் அரசியலுக்கு என்றைக்கும் வர மாட்டேன் என்று இதுவரை நீங்கள் திட்டவட்டமாக சொல்லி இருக்கீங்களா?
  சொல்ல மாட்டீங்க. ஏனென்றால் நீங்க அரசியலுக்கு வருவீங்க், நாட்டுக்கு நல்லது செய்வீங்கணு இன்னும்
  சில ஏமாளிகள் கனவு மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் படத்துக்கு கட் அவுட் வைப்பதும்,
  பால் அபிசேகம் செய்வதும் அவர்கள் தான்.

அரசியல் நிலைப்பாடுகளை பல முறை ரஜினி எடுத்துள்ளார். ஆனால் நான் ஒரு கலைஞன் மட்டுமே என்று
சொல்வது ஊரை ஏமாற்றும் வார்த்தைகள் என்பது ரஜினி அவர்களுக்கு தெரியலையா?

2) அந்த அறிக்கையில் இருக்கும் இன்னொரு முக்கிய அம்சம்:
காலம் காலமாய் வாழ்ந்த தங்களின் பூமிக்காக, தங்களின் இனத்துக்காக, தங்களது உரிமைக்காக,
தங்களது சுய கவுரவதிற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி, மடிந்து தங்களை தாங்களே சுய சாமாதியாக்கிக்கொண்டு
பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் வாழ்ந்த, நடமாடிய இடங்களைப்
பார்த்து அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டுமென்ற ஆசை வெகு நாட்களாய்
என்னுள் இருந்தது.

மேலும், இலங்கை அதிபரை சந்தித்து மீனவர் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டுகொள் வைக்கலாம்
என்று எண்ணியிருந்தேன் என்று சொல்கிறார்.

ரஜினி அவர்களே, உங்களின் நோக்கம் நல்ல நோக்கம் என்றால் ஏன் உங்கள் பயணத்தை ரத்து செய்தீர்கல்.
வைகோ, திருமாவளவன், வேல்முருகன், ராமதாஸ் உங்கள் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால்,
உங்கள் பயணத்து ரத்து செஞ்சிடுவீங்களா?

நோக்கம் நல்ல நோக்கமாக இருந்தாலும் யாராவது எதிர்த்தால் அதை செய்யாதீர்கள்
என்று உங்களின் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்தாக அமைந்து விடாதா?

அல்லது திருமாவளவன் உள்ளிட்டோர் சொன்னது உண்மையா.
பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்து இலங்கை அரசு தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது
என்ற பொய்யை உலகிற்கு காட்ட தான் நீங்கள் இலங்கை செல்வதாய் இருந்தீர்களா?
அது தான் உண்மை என்று தான் நானும் நினைக்கிறேன். இல்லை என்றால் நீங்கள் ஏன் பின்வாங்கனும்.
குற்றம் உள்ள நெஞ்சு தான குறுகுறுக்கும். குற்ற உணர்வில் இருந்து தப்பிக்கவே, நல்லவன் வேடம் போடுவது போல
ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கீங்க. நல்ல நோக்கம் கொண்டவன் உலகமே எதிர்த்தாலும்,
தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ள மாட்டான்.

எந்திரன் 2.0 படத்தை இலங்கையில் விளம்பரம் செய்வதும் தான் உங்களின் நோக்கமாக இருந்திருக்கும்.
படம் ரீலிசுக்கு தயார் ஆயிடுச்சே. உங்கள் ஒவ்வொரு படத்தின் போதும், “நீங்கள் அரசியலுக்கு
வர போகிறீர்கள்” என்ற வதந்தியை பரப்பி விடுவதே படத்தின் விளம்பரத்திற்காக தான்
என்பதை ஏமாந்த ரசிகர்கள் நம்ப மாட்டார்கள். ஆனால் அது தானே உண்மை.

அறிக்கையில் இருக்கும் இன்னொரு முக்கிய அம்சம் “இனிவரும் காலங்களில் இலங்கை சென்று
அங்கே வாழும் தமிழர்களை சந்தித்து, அவர்களை மகிழ்வித்து, அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை
காணும் பாக்யம் கிடைத்தால், தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போக விடாமல்
செய்து விடாதீர்கள் என்று அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று சொல்லியிருக்கிறார்.

ரஜினி அவர்களே, நீங்க ஒரு அரசியல்வாதினு உங்களுக்கு தெரியாதா. அதான் உங்க கிட்ட
அரசியல் பண்றாங்க. உங்களை பெரிய சூப்பர் ஸ்டார்னு சொல்றாங்க, ஆனா பிலீஸ் நான் போறதை தடுக்காதீங்க
என்று சின்ன குழந்தை போல அவர்களிடம் கெஞ்சுவது உங்களின் தைரியத்தை உலகத்திற்கு வெளிச்சம்
போட்டு காட்டி விட்டது.

ரஜினியின் ரசிகர்களே, உங்கள் தலைவரை பெரிய ஹீரோனு சொல்றீங்க. அது வெறும் படத்தில் தான்
என்று மீண்டும் ஒரு முறை அவர் நிருபீத்து இருக்கிறார்.வீரம் பொங்கும் வசனங்களை என்னமா பேசுவார்.
பாக்கற நமக்கே வீரம் வரும். ஆனா நிஜ வாழ்வில் மூன்று கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன்,
பின் வாங்கிவிடுவார். தயவு செய்து இன்னொரு முறை ரஜினியை யாரும் தலைவர்னு கூப்பிடாதீங்க.
இப்படிப்பட்ட தலைவர் யாருக்கும் தேவையில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot