Friday, March 10, 2017

யார் சாதனை பெண்கள்? திடுக்கிடும் தகவல்கள்

மகளிர் தின நல்வாழ்த்துகள். என்னடா இவன் இரண்டு நாள் தாமதமா வாழ்த்து சொல்றானு யோசிக்கிறீங்களா?
பெண்ணின் பெருமைகளை பேச ஒரே ஒரு நாள் ஒதுக்குவது எவ்வளவு கஞ்ச தனம்?

ஒரு நாள் மட்டும் பெண்ணின் பெருமை பற்றி பேசி விட்டு, மீதி நாள் வாய் மூடி இருப்பது எவ்வளவு பெரிய தவறு?
அதனால தான் இன்னிக்கு பேசறேன்.

என்னுடைய அண்ணன் சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதில் சொல்லப்பட்டிருந்த பல கருத்துகள் என்னை யோசிக்க வச்சிது.
இதை பற்றி யாருமே பேசலையேனு தோனுச்சு.
அதில் ஒரு பகுதியை தான் நான் இன்னிக்கு சொல்ல போறேன்.
அவருக்கு என்னுடைய நன்றி.

ஜக்கிய நாடுகள் சபையின் மகளிர் தின வாழ்த்து செய்தியில் என்ன சொல்கிறார்கள் என்று முதலில் பார்க்கலாம்:
பெண்கள் அதிக நேரம் வீட்டு வேலை செய்கிறார்கள்.
ஆண்களை விட இரண்டு மடங்கு அதிக நேரம் பெண்கள் வீட்டு வேலை செய்கிறார்கள்.

பெண்களுக்குனு ஒரு புது உலகத்தை கட்டமைக்க விரும்புகிறோம்.
அவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில், அவர்களுக்கு முன் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்க வேண்டும்.
அதில் இருந்து அவர்கள் விரும்பியதை தேர்ந்தேடுக்கும் ஊக்கத்தை அவர்களுக்கு தர வேண்டும்.

வீடுகளிலும், பள்ளிகளிலும் ஒரு மாற்றம் வர வேண்டும்.
ஆண்களை விட பெண்கள் குறைந்தவர்கள் அல்ல, ஆண்களுக்கு நிகராக கனவுகளையும் லட்சியங்களையும்
பெண்கள் வைத்து கொள்ளலாம் என்ற எண்ணம் பெண் குழந்தைகளுக்கு வரும் அளவுக்கு ஒரு சூழலை வீடுகளிலும் பள்ளிகளிலும் உருவாக்க வேண்டும்.

அதிக பெண்கள் வேலை செய்து சாதனை புரிய முன வர வேண்டும்.
2030க்குள் 50% சதவீத வேலைகளில் பெண்கள் தான் இருக்க வேண்டும் என்று அந்த கட்டுரையில் சொல்கிறார்கள்.

அவர்கள் சொல்வது நியாயமான கருத்து தான்.
பெண்கள் வேலைக்கு சென்றால் தான் பொருளாதார தேவைக்காக யாரிடமும் கையேந்தும் நிலை வராது.
பெண்கள் வேலைக்கு போனால் தான் தன்னம்பிக்கை வளரும்.

ஆனால் சில முக்கியமான அம்சங்களை பற்றி அவர்கள் பேசாதது வருத்தம் அளிக்கிறது.
மாதாமாதம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு தேவைப்பட்டால்
விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமையை நிறுவனங்கள் அவங்களுக்கு தந்திருககா?

ஒரு குழந்தையை பெற்றேடுத்த பிறகு எத்தனை மாதங்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது?
அதிகப்பட்சம் 3 மாதங்கள். ஆனால் அது போதுமானதா என்று குழந்தையை பெற்றேடுத்த தாயை கேளுங்கள்?
குழந்தைக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்கிறார்கள்.
தாய்ப்பால் தான் ஒரு குழந்தைக்கு சகல ஊட்டச்சத்துகளையும் கொடுக்கும் மருந்து.

ஆனால் மூன்று மாதத்தில் வேறு வழி இல்லாமல் தாய்ப்பாலை நிறுத்தி விட்டு எவ்வளவு வேதனையுடன்
அலுவலகத்துக்கு வருகிறார் என்பதை குழந்தையை பெற்றேடுத்த தாயை கேளுங்கள்.
இந்த நிலை எல்லாம் மாற்ற வேண்டும் என்று நிறுவனங்களிடம் சொல்ல வேண்டாமா?
எதையுமே மாற்றாமல் வேலைக்கு வாங்க வேலைக்கு வாங்கனு பெண்களை அழைப்பது நியாயமா
என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

பெண்கள் வேலைக்கு போக கூடாது என்று நான் சொல்லவில்லை.
பெண்கள் நிம்மதியாக வேலை பார்க்கும் சூழலை முதலில் உருவாக்குங்கள் என்று தான் சொல்கிறேன்.

மகளிர் தினத்தின் அன்று பெண்கள் வேலைக்கு போகனும், வெற்றி அடையனும் என்பதே பிரதானமாய் சொல்றாங்க.
கணவர் கட்டாயப்படுத்தாமல், மாமியார் கட்டாயப்படுத்தாமல் சில பெண்கள் தங்களின் முழு விருப்பத்துடன்
இல்லத்தரசிகளாய் இருக்க விரும்புகிறாங்க. தன்னுடைய குழந்தைகளை நல்லபடியாக வளர்கக் வேண்டும்
என்று முடிவு எடுத்து வேலையை விட்டுட்டு இல்லத்தரசிகளாய் இருக்க சில பெண்கள் விரும்புறாங்க. நீங்களும் பார்த்திருப்பிங்க.

”வேலைக்கு சென்று, சாதனை செய்தால் தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள்” என்று சமீபக காலமாய்
சொல்லப்படும் கருத்துகள் அவர்கள் மனதை பாதிக்காதா என்பதையும் யோசிக்க வேண்டும்.

எது சாதனை என்பதை யார் தீர்மானித்து கொண்டிருக்கிறார்கள், இதற்கு பின்னால் இருக்கும் வியாபார தந்திரம் என்ன என்பதை
இன்னொரு வீடியோவில் பார்க்கலாம்.

எனக்கு எது சாதனைனு நான் தானே தீர்மானிக்கனும்.
உங்களுக்கு எது சாதனைனு என்பதை நீங்க தானே தீர்மானிக்கனும்.
அதே போல் ஒரு பெண்ணுக்கு எது சாதனைனு அந்த பெண் தான தீர்மானிக்கனும்.

ஒரு உதாரணம் பார்ப்போம்.
ஒருத்தன் தினமும் காரில் வேலைக்கு போறான். சுற்றுச்சுழல் மாசுப்படுவதை குறைக்க தன்னால் இயன்றதை செய்ய
வேண்டும் என்ற நோக்கத்துடன் வாரம் ஒரு நாள் தன்னுடைய cycle இல் செல்கிறான்.
இது மிகப்பெரிய சாதனை என்று அவன் மகிழ்ச்சி அடைகிறான்.

இன்னொருவன் தினமும் cycle இல் தான் அலுவலகம் செல்கிறான்.
கார் வாங்குறான். அலுவலகத்துக்கு காரில் போறான். உழைப்பால் உயர்ந்து கார் வாங்கி அலுவலகத்திற்கு காரில் செல்வது மிக பெரிய சாதனை என்று
அவன் மகிழ்ச்சி அடையறான்.

என்னடா இது? ஒருத்தன் காரில் போறதை சாதனை என்று சொல்றான். இன்னொருத்தம் cycle இல் போறதை
சாதனை என்று சொல்றான். சாதனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது என்பது சரி தான?

இன்னொரு உதாரணம்.
ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கும் போது நான் எங்கே போகிறேன் என்பது எனக்கு தெரியாது.
என்னோட உடல் படுக்கையில் படுத்துக்கிட்டு இருக்கு. ஆனா நான் எங்கே? எனக்கு தெரியாது. ஒரு வகையில் பார்த்தால்
நான் செத்து போயிட்டேன். மறு நாள் காலையில் நான் மீண்டும் பிறக்கிறேன்.
இரவில் செத்து, மறு நாள் காலையில் பிறப்பதை நான் மிக பெரிய சாதனை என்று மகிழ்ச்சி அடைவேன்.
ஏனென்றால் எத்தனையோ பேர் இரவில் தூங்க போறாங்க. காலையில் எழுந்திருப்பதே இல்லையே.
காலையில் எழுந்திருக்கும் போதே சாதனை செய்யும் எனக்கு, எதையும் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.
என் கடமையை செய்வேன், பலனை எதிர்ப்பார்க்க மாட்டேன்.

இதை போய் மத்தவங்ககிட்ட சொன்னா, இவனுக்கு என்னடா ஆச்சி, இப்படி உளரானேனு கேப்பாங்க.
“காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருப்பதே சாதனை தான்.
அதனால் கடமையை முழு மனதுடன் செய்யுங்க. கிடைக்கும் பலன் சாதனையாகுமா இல்லையா என்ற கவலையை விடுங்க” என்று என்னுடைய கருத்தை
எல்லாரும் ஒப்புக் கொள்வார்களா?

நம் வீட்டில் இல்லத்தரசிகளாய் இருக்கும் அம்மா, மனைவி, பாட்டியை பற்றி யோசிச்சு பாருங்க.
எவ்வளவு வேலை செய்றாங்க. எவ்வளவு திட்டமிடல் செய்றாங்க.
எவ்வளவு சிறப்பாக அதை நடைமுறைப்படுத்தறாங்க.
இதெல்லாம் சாதனை இல்லையா? time management, stress management
ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இல்லத்தரசிகள் சாதனையாளர்கள் இல்லையா?
நிச்சயம் சாதனையாளர்கள் தான்.

”வேலைக்கு சென்று, சாதனை செய்தால் தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள்” என்று சமீபக காலமாய்
சொல்லப்படும் கருத்துகள் அவர்கள் மனதை கண்டிப்பாக பாதிக்கும்.

அனைவருக்கு ஒரு வேண்டுகோள்.
இல்லத்தரசிகளை ஏளனமாக பார்க்காதீர்கள்.
அவர்கள் சாதனையாளர்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வேலைக்கு போக விரும்பும் பெண்கள் வேலைக்கு போகட்டும்.
இல்லத்தரசிகளாய் இருக்க விரும்புவர்கள் இல்லத்தரசிகளாய் இருக்கட்டும்.
இருவருமே சாதனை பெண்கள் தான்.

மகளிர் தனத்தின் அன்று பெண்களை போற்றும் நிறைய குறும்படங்கள், பாடல்களை பார்த்தேன்.
அதை பார்த்து விட்டு அன்று மட்டும் மனைவிக்கோ அம்மாக்கோ வீட்டு வேலைகளில் உதவி செய்து விட்டு,
அதுக்கு அப்புறம் அதை பெரும்பாலான ஆன்கள் மறந்து போறாங்க.

அதனால், வருடம் முழுக்க அவ்வப்போது பெண்களின் பெருமைகளை சொல்லும் குறும்படங்களும்,
பாடல்களும் வெளியிடுங்கள். நிச்சயம் அது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot