Friday, March 24, 2017

கருணாநிதி உயிருடன் தான் இருக்கிறாரா?

நேற்று எனக்கு திடிரென்று ஒரு எண்ணம் வந்தது.
ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோவில் இருந்த போது, ஜெயலலிதா மரணம் பற்றியும்,
சசிகலாவின் சதி பற்றியும் நிறைய வீடியோக்களை பதிவு செய்து இருக்கிறேன்.

ஆனால் கடந்த 79 நாட்களாய் கருணாநிதியின் புகைப்படமோ, குரலோ, அறிக்கையோ
வெளிவரவில்லையே. இதைப் பற்றி நான் ஏன் பேச தவறினேன் என்று தோன்றியது.

கருணாநிதி இப்போது முதலமைச்சராய் இல்லைனாலும், 5 முறை முதலமைச்சராய் இருந்தவர்.
அவருக்கு வயதாகிறது, அதனால் நோய்வாய்ப்பட்டிருப்பது இயல்பு தான் என்றாலும்,
5 முறை முதலமைச்சராய் இருந்தவர், திமுக என்ற கட்சியின் தலைவராய் இருப்பவரின்
உடல்நிலை பற்றி மாதம் ஒரு முறையாவது ஒரு தகவலை வெளியிட்டு இருக்கலாமே.
ஆனால் கடந்த 79 நாட்களாய் எந்த தகவலும் வரவில்லை என்பது சந்தேகத்தை தான் கிளப்புகிறது.

முன்பெல்லாம் முரசொலியில் தினமும் கருணாநிதியின் அறிக்கை வந்து விடும்.
பல மாதங்களாக அவரின் அறிக்கை முரசொலியில் வரவில்லை.
கருணாநிதி என்ற வார்த்தையே தமிழக அரசியிலில் கடந்த சில மாதங்களாய் கேட்கவில்லை.
என்ன தான் ஆச்சு கருணாதிக்கு? அவர் சுய நினைவோடு இருக்கிறாரா?
அவர் உயிரோடு தான் இருக்கிறாரா? என்ற பல கேள்விகள் எழுகிறது.

ஜனவரி 4 ஆம் தேதி ஸ்டாலின் செயல்தலைவர் ஆன போது ஒரு போட்டோ வெளியிட்டார்கள்.
அதன் பிறகு, கருணாநிதி பற்றி எந்த தகவலும் இல்லை.
79 நாட்கள் ஆகிறது, ஆனால் ஒரு புகைப்படம் கூட வெளியிடப்பவில்லை.

ஸ்டாலின் கனத்த இதயத்துடன் செயல் தலைவராய் பொறுப்பேற்பதாய் சொன்னார்.
ஆனால் கருணாநிதியின் ஒப்புதல் பெற்றே செயல்தலைவர் ஆனேன் என்று அவர் சொல்லவில்லை.

சசிகலாவிற்கும் ஸ்டாலினுக்கும் உள்ள 2 முக்கியமான ஒற்றுமைகள்:
1) ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கலை.
  கருணாநிதி நோய்வாய் படுவதற்கு முன் ஸ்டாலினை தலைவராகவோ, செயல் தலைவராகவோ ஆக்கவில்லை.
  திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்தப்படியாக இருக்கும் பதவி பொதுச்செயலாளர் பதவி தான்.
  அதை கூட கருணாநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கவில்லை.
2) இருவருமே தங்கள் தலைவருக்கு அடுத்தபடியாக தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று துடித்தவர்கள்.

சசிகலா பதவி வெறியால் பிஜேபியுடன் கைகோர்த்து ஜெயலலிதாவை கொன்றார் என்று நாம் எல்லாம் நம்பினோம்.
ஆனால் அதே பதவி வெறியால் ஸ்டாலின் கருணாநிதியை என்ன செய்தார் என்பதை நாம் ஏனோ கேட்க மறந்தோமே?

பதவிக்காக கருணாநிதியை ஸ்டாலின் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
பதவிக்காக தந்தையை கொன்ற கோர சம்பவங்களும் நம் வரலாற்றில் நடந்திருபப்தை மறக்க முடியாது.

கருணாநிதி ஊழல்வாதி என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் அவருக்கு என்ன ஆனால் நமக்கென்ன
என்று என்னால் இருக்க முடியவில்லை. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த நான்,
டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்து விட்டார் என்ற செய்தியை பார்த்தவுடன்
என்னை அறியாமல் எனக்குள் சோகம் ஊடுறுவியதையும், சில நிமிடங்கள் அமைதியாய்
உட்கார்ந்ததையும் நான் சொல்லியே ஆக வேண்டும். சக மனிதரின் மரணமும், துன்பமும்
நம்மை கவலையில் ஆழ்த்த தான் செய்கிறது. எதிரியாய் இருந்தாலும் கூட அப்படி தான்.

என்ன கருணாநிதி மீது திடிர் கரிசணம் என்ற் கேட்கிறீர்களா?
ஜெயலலிதா அப்பல்லோவில் செப்டம்பர் 22 அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பனும் என்று கவிஞர் சினேகன் ஒரு கவிதை சொன்னார்.
அதே பாணியில் நான் ஒரு கவிதை எழுதினேன்.
ஜெயலலிதாவை விமர்சிக்கு விதத்தில் எழுதினேன்.
எனினும், அந்த கவிதையில்

””
அம்மா என்னம்மா ஆச்சி உங்களுக்கு?
நீங்க வேணும்மா எங்களுக்கு?

நல்லது செய்விங்கணு
இன்னமும் நம்புறாங்க

அந்த அதிசயம் நடக்க
சீக்கிரம் வாங்கம்மா வீட்டுக்கு
“”
என்று எழுதியிருக்கிறேன்.
அந்த வீடியோவோட லீங்கை description இல் போட்டிருக்கேன்.
நேரம் இருந்தால் நிச்சயம் பாருங்கள்.
ஒருவர் ஊழல்வாதி என்பதால் அவர் இறந்து போக வேண்டும் என்று நினைப்பது மனிதனின் இயல்பு அல்ல.

கருணாநிதி தன்னுடைய கடைசி காலத்தில் சுதந்திரமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை ஸ்டாலின்
உறுதி செய்ய வேண்டும்.

தனக்கு தீங்கு செய்திருந்தாலும், தன்னுடைய எதிரி சித்ரவதை பட்டு சாக வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.
அதை போல தான், தமிழக மக்களுக்கு கருணாநிதி துரோகம் இழைத்திருந்தாலும், அவருடைய கடைசி காலத்தில்
அவர் சித்ரவதை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது, நாம் அனைவரும் ஒருமித்த கருத்தாய்
சசிகலா மிது சந்தேகப்பட்டோம். ஆனால் 79 நாட்களாய் கருணாநிதி பற்றி எந்த தகவலும் இல்லை.
ஆனால் நாம் வாய் மூடி அமைதியாய் இருக்கிறோம். ஏன் யாரும் ஸ்டாலின் மிது சந்தேகப்படவில்லை என்பதை
நாம் அனைவரும் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும்.

சசிகலா பதவிக்காக ஜெயலலிதாவை கொன்று இருப்பார் என்பதை நாம் அனைவரும் நம்புகிறோம்.
ஆனால் ஸ்டாலின் பதவிக்காக தன் தந்தையை வீட்டு காவலில் வைத்திருக்கிறாரா என்ற கேள்வியை
நாம் யாருமே எழுப்பவில்லை.

திடிரென்று தோன்றிய சிந்தனையை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot