Sunday, March 5, 2017

சுசித்ராவால் சினிமா பிரபலங்களின் உண்மை முகம் அம்பலம்

சுசித்ராவால் திரையூலகத்தினரின் உண்மை முகம் அம்பலம்| Suchileaks shown the real face of tamil actors

டிசம்பர் 2015 ஆன்று சென்னையில் பெருமழை பெய்தது.
அரசாங்கத்தின் அலட்சியத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விட்டு,
சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிச்சாங்க. ஜெயலலிதா அரசு மீது மக்கள் கடும் கோபம் அடைந்தார்கள்.

அந்த நேரத்தில் தான் சிம்புவின் பீப் சாங் வெளியாகி பெரும் சர்ச்சையானது.
மீடியாக்கள் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு அந்த பாடலின் சர்ச்சையை முன்னிலைப்படுத்தினார்கள்.
ஜெயலலிதா அரசு மீது மக்களுக்கு இருந்த கோபத்தை மீடியாக்கள் திசை திருப்பினார்கள்.

அந்த மாதிரி ஒரு திசைதிருப்பும் சம்பவம் தான் இப்போது நடக்குதா என்ற கேள்வி எழுந்தது.
16 நாட்களாக நெடுவாசல் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட மறுக்கிறார்கள்.
இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு ஆபத்து இல்லை என்று தொடர்ந்து கூச்சமே இல்லாமல் பொய்யை தான்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னாடி டிவிட்டரில் பாடகி சுசித்ரா பதிவு செய்த டிவிட்டுகள்
அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சினிமா ஹீரோக்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் ஆகியோர் திரையுலக பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள்.
அந்த மாதிரியான adjustments க்கு ஒப்புக் கொண்டால் தான் சினிமாவில் பெண்கள் நீடிக்க முடியும்
என்ற நிலை இருப்பது கசப்பான உண்மை என்றும் சொல்லியிருந்தார்.

சில நடிகர், நடிகைகளின் ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டார்.
தொடர்ந்து வெளியிடுவேன் என்றும் சொன்னார்.
பின்னர் அவருடைய கணக்கு deactivate செய்யப்பட்டு விட்டது.

தன்னுடைய டிவிட்டர் கணக்கு இரண்டு வாரம் முன்னாடியே ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று சுசித்ரா தொலைக்காட்சி பேட்டி மூலமா சொல்லியிருந்தாங்க.
சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார், அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கணவர் கார்த்திக் சொன்னார்.

இதில் யார் சொன்னது உண்மை, சுசித்ரா தான் டிவிட் போட்டாரா அல்லது உண்மையில் ஹாக் செய்யப்பட்டதா என்ற ஆராய்ச்சிக்குள் நாம் செல்ல வேண்டாம்.
பாகவதர் மற்றும் என்.எஸ். கிருஷ்ணன் காலத்தில் இருந்தே சினிமா துறையின் மறுபக்கம் இப்படி தான் இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும்.

இந்த பிரச்சனை சினிமா துறையில் மட்டும் இல்லை. பல துறைகளில் இருக்கிறது.
பிரோமாசன் வேண்டும் என்றால் நான் சொல்வதை கேட்க வேண்டும்
என்று சொல்லும் அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள் நம் சமுதாயத்தில் இருக்கிறார்கல். பெரும்பாலான பெண்கள் அதற்கு ஒப்புக்
கொளவதில்லை. ஆனால் சில பெண்கள் அந்த வலையில் விழுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.

இந்த பிரச்சனையின் அடிப்படை என்ன?
சிறு குழந்தையாய் இருக்கும் போதே பெற்றோரும், பள்ளியும், சமுதாயமும் ஒரு கருத்தை திணிக்கிறது.
“வெற்றி வெற்றி வெற்றி. வெற்றி பெற்றால் தான் நம்முடைய வாழ்க்கை சிறப்பாய் இருக்கிறது
என்று அர்த்தம். கை நிறைய காசும், சொந்த வீடும் இருந்தால் தான் ஒருவனின் வாழ்க்கையே
முழுமை அடையும்” என்ற ஒரு கருத்து திணிக்கப்படுகிறது.

ஒரு உதாரணம் பார்க்கலாம்.
ஒரு பெண் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கிறார்.
முதலில் சில படங்கள் நன்றாக ஓடுகிறது. பெயர், புகழ், பணம் நிறைய கிடைக்கிறது.
வாழ்க்கைத்தரம் உயர்கிறது. வசதியான வாழ்க்கைக்கு மனம் அடிமையாகிறது.

அதன் பின்னர் இறங்குமுகம் தொடங்குகிறது.
படங்கள் தோல்வி அடையுது. மார்கெட் குறையுது.
சம்பளமும் குறைகிறது. அடிமையாகிய வசதி வாழ்க்கைக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
வசதியான வாழ்க்கை நம் கையை விட்டு போய்விடுமோ என்று மனம் பதபதைக்குது.
மீண்டும் நமக்கு வெற்றியே கிடைகாதா என்று மனம் ஏங்குகிறது.
வெற்றி கிடைக்கலனா சமுதாயத்தில் யாரும் மதிக்க மாட்டாங்களே என்ற கவலை தலைத்தூக்குகிறது.

இருக்கும் போதையிலேயே பெரிய போதை எது தெரியுமா?
புகழ் என்ற போதை தான். திரையரங்குகளில் லட்சக்கணக்கான மக்கள் அவர்களை பார்த்து கை தட்டுகிறார்கள்.
விசில் அடிக்கிறார்கல், புகழ்ந்து பேசுகிறார்கள். இது தவிர பேஸ்புக், டிவிட்டரிலும் புகழ்கிறார்கள்.
இந்த புகழ் போதைக்கு அவர்கள் அடிமையாகி விடுகிறார்கள்.
அந்த புகழ்ச்சி குறைய தொடங்கினாலோ அல்லது முழுவதுமாக நின்று விட்டாலோ அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நேரத்தில் தான் சினிமாவில் செல்வாக்கில் இருக்கும் ஹீரோக்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள்
அந்த பெண்களை தங்கள் வலையில் சிக்க வைக்கிறார்கள்.
நாங்கள் சொல்வதை கேட்டால் ஒரு பட வாய்ப்பு தருகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டுகிறார்கள்.
சூதாட்டத்தில் ஈடுபடும் ஒருவனின் மனநிலை எப்படி இருக்குமோ அதே மனநிலையில் தான்
அந்த பெண்கள் இருப்பார்கள். ஓரே ஒரு படம் கிடைச்சா போதும். இழந்த செல்வாக்கை மீட்டு எடுத்து விடலாம்.
ஓரே ஒரு தடவை தப்பு பண்றது தப்பு இல்லை என்று தோன்றும் அந்த எண்ணத்தை உதாசினப்படுத்தாமல்
அந்த எண்ணம் சொல்வதை கேட்பது தான் மிக பெரிய தவறான முடிவாய் அமைந்து விடுகிறது.

அதன் பிறகு என்ன நடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் முறை ஒரு தவறை செய்வதற்கு தான்
ஒருவன் யோசிப்பான். பின்னர் காலப்போக்கில் அந்த தவறு தவறாகவே தெரியாது. அந்த அளவிற்கு மனதளவில் மாற்றம் ஏற்பட்டு விடும்.
ஏன் இப்படி தப்பு பண்றனு மனசாட்சி கேள்வி கேட்குமே. அந்த எண்ணத்தில் இருந்து தப்பிக்க மதுவிற்கு அடிமையாகவும் செய்வார்கள்.
வாழ்க்கையே சின்னாபின்னமாகி ஆகி விடும்.

சினிமாவில் எந்த அளவுக்கு பணமும், வசதியும் கிடைக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் இருக்க தான் செய்கிறது.
மனதளவில் வலிமையற்ற ஒருவன் சினிமாவில் வரும் போது அவன் சீரழிந்து போகிறான்.

நான் சொன்னது போல், “வெற்றி பெறுவது தான் ஒரு மனிதனுடைய ஒரே கடமை” என்ற தவறான கருத்தை சிறுவயதில் இருந்து
திணிப்பது தான் இந்த ஆபத்தான செயல்களுக்கு வழிவகுக்கிறது.

பட வாய்ப்பே கிடைக்கலையா, பரவாயில்லை.
சம்பாதித்த பணத்தை முதலீடாய் வைத்து மனதிற்கு பிடித்த வேறு ஏதாவது ஒழுக்கமான வேலையை செய்து பிழைக்கலாமே.
வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு பிரமோசனே கிடைக்கலையா, திறமையின் மூலம் வேறு கம்பெனியில்
வேலைக்கு சேரலாமே.
எக்காரணத்தைக் கொண்டும் சுய மரியாதையை இழந்து, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தவறான பாதையை தேர்ந்தெடுக்க கூடாது.
வீழ்ந்தாலும் சுய மரியாதை மற்றும் ஒழுக்கத்தை முதலீடாய் வைத்து மீதி வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழலாம்.

பெற்றோர்கள் மனநிலை முதலில் மாற வேண்டும்.
வெற்றி என்பது வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. ஒழுக்கம் மற்றும் மன அமைதி தான்
வாழ்க்கையின் சொத்துகள் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

”பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்ற தலைப்பில் ஒரு காணொளியை கடந்த வாரம் upload செய்திருந்தேன்.
நம் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாய் வளர்ப்பது என்பது பற்றி சில கருத்துகளை சொல்லியிருக்கிறேன்.
நேரமிருந்தால் பாருங்கள். உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

இன்றைய பெற்றோர்கள் சரியான முறையில் குழந்தைகளை வளர்த்தால் தான்
நாளைய சமுதாயம் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
அதற்கு முதலில் பெற்றோர்கள் வாழ்க்கை பற்றிய தங்களின் புரிதலை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

சினிமா ஹீரோக்களின் ரசிகர்களுக்கு ஒன்னை சொல்லிக்கிறேன்.
நீங்க அடுத்த தடவை உங்க தலைவருக்கு கட் அவுட் வைக்கும் போதும், பால் அபிஷேகம் பண்ணும் போதும்,
உங்களோட நேரத்தை செலவழிச்சி டிவிட்டர் பேஸ்புக்கில் அவரின் புகழை பரப்பும் போதும்,
வருங்கால தமிழக முதலமைச்சரே என்று கோஷம் போடும் போதும் ஒரே ஒரு விசயத்தை யோசிங்க.
99 சதவீத சினிமா ஹீரோக்களின் மறு பக்கம் ஒழுக்கமற்றதாய் தான் இருக்கிறது.
திரையில் வாய் கிழிய சமுதாயத்திற்கு கருத்துகளை கூறும் ஹீரோக்கள், திரை மறைவில் தான் சொல்லிய எதையும்
பின்பற்றாமல், ஒழுக்கமற்ற வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிக்கிறார்கள்.
இவர்களையா நீங்கள் கடவுள் போல போற்றுகிறீர்கள் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

கடந்த வாரம் பிரபல சினிமா distributor ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
“பெரிய நடிகர்களின் படங்கள் distributor களுக்கு நஷ்டத்தை தான் தருகிறது.
கபாலி, காஷ்மாரா, கொடி, தொடரி, போகன், பைரவா, சிங்கம் 3 இந்த அனைத்து படங்களுமே distributor களுக்கு நஷ்டத்தை தான்
தந்தது. ஆனால் தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் படம் ஹீமாலய வெற்றி என்று விளம்பரம்
தருகிறார்கள். படம் ரீலிசான் இரண்டு நாள்களில் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். 100 கோடி வசூல், 200 கோடி வசூல்
என்று கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார்கள். இனி பெரிய ஹிரோக்களின் படங்களை நாங்கள் வெளியிட மாட்டோம்.
அந்த ஹிரோக்களே நேரடியாக திரையரங்குகளில் ரீலிஸ் செய்து கொள்ளட்டும் என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார்.

ரசிகர்களே, இது தான் உங்கள் ஹீரோக்களின் உண்மையான முகம்.
ஊரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது தான் அவர்களின் உண்மையான முகம்.

30 கோடி, 40 கோடி என்று தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்று, பல தயாரிப்பாளர்களை
நடு தெருவில் விட்ட பெருமை உங்கள் ஹீரோக்களுக்கு இருக்கிறது.

அதிக பணம் வந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் மதுவிற்கும், மாதுவிற்கு அடிமையாவது
தான் உங்கள் ஹீரோக்களின் மறுபக்க வாழ்க்கை. பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்ய்வது
உங்கள் ஹீரோக்களுக்கு கை வந்த கலை.

சினிமா ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் தான் ஹீரோக்கள்.
நிஜ வாழ்க்கையில் நிறைய ஹீரோக்கள் இருக்கிறார்கள்.
யாரையாவது பின்பற்றியே ஆக வேண்டும் என்றால் அவர்களை பின்பற்றுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot