Friday, March 31, 2017

அன்னா ஹாசாரே பிஜேபியின் கைக்கூலியா

லோக்பாலையும் காணும், அண்ணா ஹாசரே தாத்தாவையும் காணும்.

லோக்பால் சட்டம் தவறு செய்யும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் லோக்பால் என்ற அமைப்பு மூலம் விசாரித்து தண்டனை வகுக்கும். லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும், 8 உறுப்பினர்களும் இருப்பார்கள்.

லோக்பால் அமைப்பு அரசு தலையிடின்று சுதந்திரமாக செயல்படும். ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வழக்கை விரைவாக விசாரித்து அதிகப்பட்சமாய் இரண்டு ஆண்டுக்குள் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். பிரதமர் மீது ஊழல் புகார் வந்தாலும், இந்த அமைப்பால் பிரதமரை விசாரிக்க இயலும்

லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அண்ணா ஹாசாரே 5 ஏப்ரல் 2011 இல்
டில்லியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் இந்தியா முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

லோக்பால் மசோதாவை உருவாக்க அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய குழு உருவாக்கப்படும் என்று கேசட்டில் ஆணை பிறப்பித்த பிறகு, 9 ஏப்ரல் அன்று ஹாசாரே தன் போராடத்தை முடித்தார். இந்த குழு லோக்பால் மசோதாவை உருவாக்கியது. மசோதா ராஜ்ய சபாவில் 17 டிசம்பர் 2013 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்றது. லோக் சபாவில் 18 டிசம்பர் 2013 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்றது. 16 ஜனவரி 2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி கையெழுத்திட்டவுடன் அது சட்டமாகிறது.

மார்ச் 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிப்பு வந்தது. மே மாதம் மோடி பிரதமர் ஆனார். லோக்பால் சட்டத்தை கிடப்பில் போட்டார்.
ஊழலை ஒழிப்பேன் என்று கூறிய மோடி, லோக்பால் அமைப்பை அமல்படுத்தாமல் இருப்பது அவரின் உண்மையான முகத்தை வெளி காட்டியது. மோடியும் பிஜேபியும் நேர்மையானவர்களாய் இருந்தால், ஏன் லோக்பாலை பார்த்து அவர்கள் பயப்பட வேண்டும்.

லோக்பால் சட்டம் நிறைவேற வேண்டும் என்று தீவிரமாக போராடிய அண்ணா ஹாசாரே,  மூன்று வருடங்களாய் இந்த சட்டத்தை கிடப்பில் போட்டிருக்கும் பிஜேபி அரசுக்கு எதிராக போராடவே இல்லை.

அவர் பிஜேபியின் பணியாளர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மூன்று வருடமாய் அண்ணா ஹாசாரே மவுனமாய் இருப்பது அந்த குற்றச்சாட்டு உண்மையோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இதற்கு மேலும் மவுனமாய் இருந்தால் தன்னை பிஜேபிகாரன் என்று மக்கள் நம்பிவிடுவார்கள் என்று உணர்ந்த  ஹாசாரே, நேற்று மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

“நீங்கள் லோக்பால் அமைப்பை உருவாக்குவீர்கள் என்று மூன்று வருடங்களாய் நான் நம்பிக்கையோடு காத்திருந்தேன். ஆனால் என் நம்பிக்கை பொய்யானது. லோக்பாலை அமைக்க வேண்டும்
என்ற கோரிக்கையோடு விரைவில் போராட்டத்தை தொடங்குவேன்” என்று அண்ணா ஹாசாரே கூறியுள்ளார்.

அண்ணா ஹாசாரே போராடுவாரா, மோடி அரசு லோக்பாலை அமைக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்

லோக்பால், அண்ணா ஹாசாரே, மோடி அரசு பற்றி உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள். இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot