Tuesday, February 28, 2017

சசிகலாவை காப்பாற்ற, எடப்பாடி மக்களுக்கு செய்த துரோகம்

கடந்த சில மாதங்களாக கர்நாடகா காவிரி தண்ணீரை திறந்து விடலை.
கடந்த வருடம் பல முறை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போதும், அதை கர்நாடகா மதிக்கலை.
காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கனும்னு போட்ட உத்தரவை மத்திய அரசு மதிக்கலை.

ஆண்டுதோறும், மேட்டூர் அணைக்கு, 193 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
இதில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் கொடுக்கனும்னு காவிரி நடுவர் மன்றம் கூறியுள்ளது.

அதன்படி, 2016 ஜூன் முதல், இந்தாண்டு, பிப்., 23 வரை, 183.8 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா குடுத்திருக்கனும்.
ஆனால் வெறும் 67.4 டி.எம்.சி., மட்டுமே வழங்கி உள்ளது.

மேட்டூர் அணைக்கு போதிய நீர்வரத்து கிடைக்காமல், டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி பாதிச்சிருக்கும்.
அணையில், 8 டி.எம்.சி., நீர் மட்டுமே இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக,அணையில் இருந்து தண்ணீர் எடுக்கறாங்க.
இதனால், அடுத்த ஒரு மாதத்திற்குள், அணை வறண்டு விடும் அபாயம் உள்ளது.

1) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், கர்நாட்கா அரசு தண்ணீர் கொடுக்கலை.
தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தால், சாதகமான தீர்ப்பு கிடைத்திருக்கும்.
கர்நாடகா அரசுக்கு ஒரு அழுத்தம் எற்பட்டிருக்கும்.

2) ஏற்கனவே காவிரி தண்ணீர் வராத காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால்
விவசாயம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதை காரணமாக சொல்லி, தமிழக அரசு ஹட்ரோகார்பன் திட்டத்தை
கைவிட சொல்லி தமிழக அரசு மத்திய அரசிடம் திட்டவட்டமாக சொல்லியிருக்க முடியும்.

ஆனா இந்த இரண்டையுமே தமிழக அரசு செய்யலை.
ஏன் என்றால் தமிழக அரசு கர்நாடகா அரசையும், மத்திய அரசையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

சசிகலா பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து கர்நாடகா சிறையில் இருக்காங்க.
அவங்களை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான வேலைகளை சசிகலா தரப்பினர் செஞ்சிக்கிட்டு இருக்காங்க.
கர்நாடகா அரசின் ஒத்துழைப்பு இருந்தால் தான் சசிகலாவின் திட்டம் நிறைவேறும்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று வாக்குறுதியை கொடுத்தால் தான்
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற ஒத்துழைப்பு தருவோம் என்று கர்நாடகா அரசு சொல்லியிருப்பாங்க.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து சசிகலா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வார்கள்.
அதை விசாரனைக்கு ஏற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை சுப்ரீம் கோர்ட் தான் முடிவு செய்யும்.
சிபிஐயை போல், சுப்ரீம் கோர்ட் விவகாரங்களிலும் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்று இந்திய அரசியலை உற்று கவனிப்பவகளுக்கு ஒன்று நன்றாக தெரியும்.
அதனால் தான் ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழக அரசு மத்திய அரசின் மீது மென்மையான
போக்கை கையாள்கிறது.

எடப்பாடி, சசிகலா ஆட்சியில் மட்டும் தான் இந்த பிரச்சனையா?
பன்னீர் முதல்வராய் இருந்த போதும், இப்படி தானே இருந்தது?
ஜெயலலிதா ஒப்புதல் கொள்ளாத பல திட்டங்களுக்கு பன்னீர் ஒப்புதல் கொடுத்தாரே?

சரி, திமுக ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசுக்கு அடிபணியாமல் சுதந்திரமாய் செயல்படுவாங்களா?
மாட்டாங்க. ஏன்?
2 ஜி வழக்கை வைத்து மோடி அரசு திமுகவை மிரட்டும்.

திமுக, அதிமுக யார் ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசிடம் அடிபணிந்து தான் போவார்கள்.
இந்த இரண்டு கட்சிகளுமே வேண்டாம்.
மாற்றம் வேண்டும் வேண்டும் என்று சொன்னால் மாற்றம் வந்து விடுமா?
அதற்கான காரியங்களை செய்யனும்.
வர போகும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்.
50 ஆண்டுகள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாறி மாறி வாய்ப்பு கொடுத்து வீணாய் போனாமே?
ஒரு 5 வருடம் இளைஞர்களுக்க்கு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே.

இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot