Friday, December 30, 2016

புத்தாண்டிற்கு முன் கண்டிப்பாக பார்க்கனும்

ஒரு சின்ன கதை ஒன்னு சொல்லப்போறேன்.

ஒரு 22 வயது மதிக்கத்தக்க இளைஞன், படிப்பை முடித்து விட்டு கைநிறைய சம்பளத்துடன் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான்.
அவனுக்கு ஒரு தங்கை. அவரின் அப்பா டிக்கடை வைத்துள்ளார். இவர்கள் மூவரையும் அன்பால் அரவணைக்கும் அம்மா.
அவனின் தந்தை மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய இரு பிள்ளைகளையும் படிக்க வைத்தார்.
கடனெல்லாம் வாங்கி தன் மகனை கல்லூரியில் படிக்க வைத்தார்.
அவனை கரை சேர்த்து விட்டால், அவனுடைய தங்கையை அவன் கரை சேர்த்து விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அவனும் பொறுப்புடன் நடந்து கொள்ளும் மகனாகவே இருந்தான்.

அந்த குடும்பத்தினருடைய வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.
தோள் கொடுக்க மகன் வந்து விட்டான் என்ற தைரியம் தந்தைக்கு மன ஆறுதலை தந்தது.

டிசம்பர் 30 அன்று அந்த இளைஞனின் அலுவலகத்தில் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
எல்லாரும் ஒருவனின் வீட்டில் கூடி கேக் வேட்டி, மது அருந்தி கொண்டாடலாம் என்றும், 12:00 மணிக்கு தங்களின்
இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு விதி விதியாக வலம் வந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவிக்கலாம் என்றும்
முடிவு செய்தார்கள்.

டிசம்பர் 31 இரவு 9 மணிக்கு ஒரு நண்பனின் வீட்டில் 5 பேரும் கூடினார்கள்.
அளவுக்கு மீறு போட்டி போட்டு மது அருந்தினார்கள்.
போதை தலைக்கு ஏறிடுச்சு.
அங்கேயே படுத்து உறங்கியிருக்கலாம்.

ஆனால் குடிபோதையிலேயே வண்டியை ஓட்டினார்கள்.
எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிக் கொண்டே போனார்கள்.
அப்போது எதிர்பாராத விதமாய், ஒரு வண்டி கீழே விழுந்தது.
அந்த இளைஞன் தான் வண்டியை ஓட்டினான். தலைக்கவசம் போடவில்லை.
தலையில் அடிப்பட்டது. அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரழந்தான்.
அந்த குடும்பத்தின் எதிர்காலமே அந்த நொடியில் சிதைந்து போனது..
மகனை இழந்த அந்த குடும்பம் எப்படி வருத்தப்பட்டு இருப்பர்கள் என்பது வார்த்தைகளில் சொல்ல முடியாதது...

இதெல்லாம் ஒரு கதையானு கேப்பீங்க. வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன். எனக்கு இவ்வளவு தாங்க மூளை.
இந்த கதையில் சில கருத்துகளை நான் சொல்ல விரும்புகிறேன்.
புத்தாண்டை கொண்டாடுவதில் தவறில்லை.
ஆனால் அளவுக்கதிகமாக மது அருந்து விட்டு, என்ன நடக்குது என்று தெரியாமல் புத்தாண்டை கொண்டாடுவது
ஒரு கொண்டாட்டமா என்று தெரியவில்லை.

அனைவரும் செய்வதினால், ஒரு தவறு சரி என்று ஆகி விடாது.
நண்பர்கள் மது அருந்து விட்டு, வண்டியில் ஊர் சுற்றலாம் என்று சொன்னால், வேண்டாம் என்று சொல்வதால்
நட்பு கெட்டு போக போவதில்லை. கெட்டு போனாலும் பரவாயில்லை. ஒரு குடியின் மூலம் தான் நட்பு
தொடர வெண்டும் என்றால், அந்த நட்பே நமக்கு தேவையில்லை.

நாம் செய்யும் தவறினால், மற்றவர்கள் யாரும் பாதிக்க கூடாது.
குறிப்பாக நம்மையே நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்பட கூடாது.
நாம் யாரும் 100 ஆண்டுகள் வாழ போவதில்லை. எப்போது மரணம் நிகழும், எப்படி நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
அப்படி இருந்தாலும், ஒன்று தவறு என்று தெரிந்தே உயிரை பணயம் வைப்பது மிக பெரிய மூட்டாள் தனம்.
எல்லா புத்தாண்டையும் இளைஞர்கள் நண்பர்களுடன் தான் கொண்டாடுகிறீர்கள்.
இம்முறை ஒரு மாற்றமாக, உங்கள் குடும்பத்துடன் உங்கள் வீட்டில் கொண்டாடி பாருங்களேன்.

ஓவரா advise பண்ணி வெறுப்பு ஏத்தாடா. நீ என்ன பண்ண போறனு கேக்கறவங்களுக்கு பதில்.
டிசம்பர் 31 இரவு 11:45 மணிக்கு நான் கண்னை மூடிக் கொண்டு உட்கார்ந்து விடுவேன்.
இந்த வருடத்தின் சம்பவங்கள் நினைவுகளாய் வந்து போகும்.
சில நிமிடத்திற்கு பிறகு எண்ணங்களின் வேகம் குறைந்து ஒரு அமைதி ஏற்படும்.
அந்த மன அமைதியுடன் புதிய ஆண்டில் நான் அடி எடுத்து வைப்பேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அனைவரும் மன அமைதியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot