Wednesday, December 21, 2016

Paytm app பாதுகாப்பானதா? உஷார்

நவம்பர் 8ம் தேதி இரவு பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும்
அதற்கு பதில் புது நோட்டுகளை டிசம்பர் 31க்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதை செய்தால் கறுப்பு பணம், கள்ள பணம், ஊழல் மற்றும் தீவிவாதம் ஒழிந்து விடும் என்றார்.
மறு நாள் வங்கி விடுமுறை என்றும் அதற்கு அடுத்த நாள் முதல் வங்கிக்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்ளலாம்
என்று கூறியிருந்தார்.

அதே போல் 9,10 தேதிகளில் ஏடிஎம் வேலை செய்யாது எனவும், 11ந் தேதியில் இருந்து அனைவரும்
ஏடிம்ல் புது நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மோடி கூறியிருந்தார்.

மக்களுக்கு இதில் சிரமம் ஏற்பட கூடும். ஆனால் 50 நாட்களுக்குள் எல்லாம் சரி ஆகி விடும்.
தேச நலனுக்காக நாம் இந்த தியாகத்தை செய்ய வேண்டும் என்று மோடி கூறியிருந்தார்.

ஆரம்ப கட்டத்தில், நகரத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் இந்த திட்டத்தை வரவேற்றார்கள்.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல் பணம் மாற்றும் வேலை அவ்வளவு எளிதாக முடியவில்லை.
மணிக்கணக்கில் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் காத்திருந்தார்கள்.
வேலைக்கு செல்ல முடியாமல், பல நாள் சம்பளத்தை இழந்து காத்திருக்க வேண்டியதிருந்தது.
பொறுமையை இழந்த மக்கள், இப்போது  முனுமுனுக்க தொடங்கி விட்டார்கள்.

நமது நாட்டில் 93 கோடி மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். பெரும்பாலான கிராமங்களில்
கூட்டுறவு வங்கிகள் மட்டும் தான் இருக்கிறது. அந்த வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாது
என்ற அதிர்ச்சி தரும் செய்தியை மோடி கூறியிருந்தார். அதனால், கிராம மக்கள் முதல் நாளில் இருந்தே
இந்த திட்டத்தின் மூலம் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்தியாவின் 80 சதவீத மக்கள் முறைசாராத தொழில்களில்(informal sector) வேலை செய்கிறார்கள்.
அவர்களுக்கு சம்பளம் பணமாக தான் கொடுக்கப்படும். அந்த தொழில்களில் பண தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால்,
அவர்கள் வேலையை இழந்து வருகிறார்கள்.

இன்னமும் பண தட்டுப்பாடு குறைந்த பாடில்லை.
முதலில் கறுப்பு பணம், கள்ள பணம், ஊழல் தீவிரவாத ஒழிப்பு என்று சொன்னார்கள்.
பின்னர் cashless economy என்று புதிதாய் சொன்னார்கள். அதன் பின்னர் less cash economy என்று சொன்னார்கள்.

26% மக்கள் படிப்பறிவில்லாதவர்கள். மீதமுள்ள 74% மக்களில் எத்தனை பேருக்கு
ஆங்கிலம் எழுத படிக்க தெரியும் என்று தெரியவில்லை. அவர்கள் எப்படி இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள போகிறார்கள் என்று தெரியவில்லை.

வேறு வழியின்று படித்தவர்களும், நகரத்தில் வாழ்பவர்களும் internet banking, mobile banking போன்றவற்றை
பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

wallet என்பது மொபைல் ஆப் மூலம் பண பரிமாற்றம் செய்யும் முறை.
நிறைய ஆப்புகள் இருக்கிறது. அதில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது paytm.
உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த paytm wallet க்கு நீங்கள் பணத்தை அனுப்ப வேண்டும்.
பின்னர் அங்கு இருந்து நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்த பணத்தை அனுப்பலாம்.
யாருக்கு நீங்கள் அனுப்ப போகிறீர்களோ, அவர்களும் இந்த paytm ஆப் வைத்திருக்க வேண்டும்.
பார் கோட் மூலமாகவோ, இல்லது மொபைல் நம்பர் மூலமாகவா நீங்கள் பணம் அனுப்பலாம்.

ஒவ்வொரு முறை அதை நாம் பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட சதவீதத்தை கமிசனாக paytm எடுத்துக் கொள்வார்கள்.
நிறைய பேர் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தமிழில் சொல்லி தந்திருக்கிறார்கள்.
அந்த லிங்க்கை டிஸ்கிரிப்ஸ்னில் போடுகிறேன்.

நீங்க paytm பயன்படுத்துறீங்களா?
உங்களோட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் இதை கவனித்தீர்களா?
அவர்கள் வெப்சைட்டில் இதை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
100% assurance என்று சொல்லியிருக்கிறார்கள்.
PayTm trust - Your money is yours. All refunds come with no question asked.
ஏதாவது பிரச்சனை என்றால், உங்களின் பணம் உடனடியாக திருப்பி கொடுப்போம்
என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் வெப்சைட்டில் சொன்னதற்கு நேர்மாறான கருத்தை  "Terms & Conditions" இல் கூறியிருக்கிறார்கள்.
இந்த பகுதியில் இருப்பது தான் அதிகார பூர்வமானது. பெரும்பாலும் யாருமே இந்த பகுதியை படிப்பதில்லை.
இந்த ஆப் மூலம் உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு நிறுவனம் பொறுப்பேற்ககாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

நாம் மொபைல் நம்பர் மூலம் பணம் அனுப்பும் போது, தவறான நம்பர் கொடுத்து விட்டோம் என்றால், தவறான நபருக்கு
பணம் சென்று விடும். பணம் செல்வதற்கு முன், நாம் மொபைல் நம்பர் கொடுத்த பிறகு, இந்த நம்பருக்கு இந்த நபர் தான் உரிமையாளர் என்று காட்டினால்
பிரச்சனை இல்லை. ஆனால் அந்த ஆப் அப்படி செய்வதில்லை.

ஒரு வேளை தவறான நம்பருக்கு அனுப்பினால், யாருக்கு அனுப்பி இருந்தோமோ அவர் ஒப்புதல் அளித்த பிறகு தான், அந்த பணத்தை paytm நமக்கு திருப்பி தருவார்கள்.

ஒரு வேளை paytm server hack செய்யப்பட்டு, அதில் நம் பணத்தை நாம் இழக்க நேர்ந்தால்,
அதற்கு paytm எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள். நம் பணத்தையும் திருப்பி தர மாட்டார்கள்.

paytm ஐ பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வதற்காக இந்த வீடியோவை செய்யவில்லை.
மேல் சொன்னதை எல்லாம் அவர்கள் மாற்றி அமைத்தால் மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை தான் சொல்ல விரும்புகிறேன்.

மேலும், எந்த ஒரு ஆப் பயன்படுத்தினாலும், அதனுடைய Terms and conditions ஐ சரியாக படிக்க வேண்டும்.
அதை நாம் டிக் செய்வதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
அதை படித்து விட்டு, அந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்து இடுகிறோம் என்று அர்த்தம்.
எப்போதும் எல்லாமே சரியாக நடந்து விடாது.
தவறாக நடக்கும் போது, அதை எப்படி எதிர்கொள்வது, நாம் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தில் அதற்கு
என்ன தீர்வு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து அவர்களிடம் பகிருங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot