Saturday, January 7, 2017

மோடிக்கு எதிராக பெண் அரை நிர்வாண போராட்டம்

நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் புது நோட்டுகளை டிசம்பர் 30க்குள் பெற்றுக் கொள்ளலாம்
என்றும் மோடி கூறினார். கறுப்பு பணம், கள்ள பணம், ஊழல், தீவிரவாதத்தை ஒழிக்க இது உதவும் என்றார்.

இதன் பிறகு பலவற்றில் மோடி அரசு தன்னுடைய வாக்குறுதிகளை மீறிக் கொண்டே இருக்கிறது.
அதில் ஒரு சிலவற்றை மற்றும் பார்க்கலாம்.

1) 50 நாட்களில் நிலைமை சரி ஆகும். நான் தவறு செய்திருந்தால், என்னை எரித்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க மோடி கூறினார்.
50 நாட்கள் முடிந்து விட்டது. பண தட்டுப்பாடு நீங்க 6 மாதங்கள் ஆகும் என்று இப்போது கூறுகிறார்கள்.
பொய் சொல்லும் அரசியல்வாதிகளை மக்கள் எரிக்க தொடங்கினால் நாட்டில் ஒரு அரசியல்வாதி உயிரோடு இருக்க மாட்டார்கள்.
மக்களுக்கு இன்னமும் இரக்க குணம் இருக்கிறது. அதை தான் இந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திகிறாங்க.
நான் தவறு செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள் என்று சொல்லும் பெருந்தன்மையும் மோடிக்கு கிடையாது.
கீழே விழுந்தாலும், மீசையில் மட்டும் மண் ஒட்டாது.

2) உங்கள் பணம் உங்களுடையது. நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். யாரும்
உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள். 2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை
கேட்பார்கள் என்றார்.

டிசம்பர் 20ம் தேதி இந்த வாக்குறுதியையும் மீறினார்கள்.
5000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி அதிகாரிகள் இரண்டு பேர் நம்மை விசாரிப்பார்கள்.
ஏன் இவ்வளவு தாமதாக பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லனுமாம். பணம் எப்படி வந்தது என்று சொல்ல வேண்டுமாம்.
அதிகாரிகளுக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்றால் அந்த பணத்தை டெபாசிட் செய்ய முடியாது என்றார்கள்.

3) இந்த திட்டத்தின் மூலம் கறுப்பு பணம், கள்ள பணம், ஊழல், தீவிரவாதம் ஓழியும் என்றார் மோடி.
டிசம்பர் 31 அன்று பேசும் போது இவை ஒழிந்ததா அல்லது குறைந்ததா?
15.50 லட்சம் கோடி ரூபாய் செல்லாத 500,1000 ரூபாய் புழக்கத்தில் இருந்தது. இதில் எவ்வளவு பணம் வங்கிகளுக்கு வந்து சேர்ந்தது
என்றும் சொல்லவில்லை. ஒரு வாரம் ஆன பிறகும் அந்த விவரத்தை சொல்லாமல் மறைக்கிறார்கள்.
மாறாக, டிசம்பர் 31 உரையில் பட்ஜெட்டில் பேசும் விஷயங்களை நிதி அமைச்சர் அருண் ஜெட்டிலியிடம் வாங்கி பேசினார் என்பது வெளிப்படையாய்
தெரிந்தது. எவ்வளவு வரி வருவாய் கிடைத்திருக்கிறது என்பதை கண்டறிய சிறிது காலம் ஆகும்.
அப்படி இருக்க, இந்த திட்டஙகளுக்கு எங்கிருந்து பணம் ஒதுக்கினார்கள்.
பணம் செல்லாது என்ற திட்டத்தின் மூலம் தான் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மோடி சொல்லவில்லையே.
அப்படி எனில், அந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு கிடைத்த பலன் தான் என்ன?
ஜனவரி 1 அன்று புது இந்தியா பிறக்கும் என்றாரே.
எங்கே அந்த புது இந்தியா? நீங்கள் புது இந்தியாவை கண்டீர்களா?

அதை பற்றி விரிவாய் இன்னொரு வீடியோவில் பேசுகிறேன்.


4) சில காரணங்களினால் டிசம்பர் 30 வரை பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் போனால், மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கியில்
மாற்றிக் கொள்ளலாம் என்று மோடி கூறினார். ஆனால், அந்த வாக்குறுதியும் மீறப்பட்டது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், இந்த 50 நாட்களில் வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள் மட்டும் தான்
ரிசர்வ் வங்கியில் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் ரிசர்வ் வங்கியின் அலுவலகம் 33 இடங்களில் இருக்கிறது.
அதில் பெரு நகரங்களில் இருக்கும் வெறும் 5 அலுவலகங்களில் தான் மாற்ற முடியும் என்று கூறி விட்டார்கள்.

இதனால் மற்ற பகுதியில் இருந்து நீண்ட பயணம் செய்து பணத்த மாற்றலாம் என்று மக்கள் வந்தார்கள்.
ஆனால், அந்த 50 நாட்களில் வெளிநாட்டில் இருந்தவர்கள் மட்டும் தான் மாற்ற முடியும் என்று
கூறியதால் ரிசர்வ் வங்கி வாசலில் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கைக்குழந்தையுடன் ஒரு பெண் ரிசர்வ் வங்கிக்கு பணம் மாற்ற வந்தார்.
பணத்தை மாற்ற முடியாது என்று காவலர்கள் அந்த பெண்ணை திருப்பி அனுப்பினார்கள்.
மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கியில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று மோடி சொன்னாரே,
நீங்கள் ஏன் என்னை துரத்துகிறீர்கள் என்று அந்த பெண் அங்கேயே உட்கார்ந்து போராட்டம் செய்கிறார்.
காவலர்கள் வலுக்கட்டாயமாய் அந்த பெண்னை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது,
அந்த பெண் விரக்தி அடைந்தார், வேதனை அடைந்தார், தன்னை மோடி ஏமாற்றி விட்டாரே என்று
கண்ணீர் விட்டு கொண்டே, தன்னுடைய ஆடைகளை கழற்றி விட்டு, அரை நிர்வாணமாய் நின்று
போராட்டம் செய்தார். பின்னர், காவல்துறையினர் வந்து அந்த பெண்ணை கைது செய்தார்கள்.

எந்த பெண்ணும் செய்ய துணியாத செயலை இந்த பெண்னை செய்ய தூண்டியது யார்?
அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த அவலுத்துக்கு யார் காரணம்?
யார் அவர்களுக்கு தண்டனை கொடுப்பார்கள். போராட்டம் செய்தால் தண்டனை.
தப்பு மேல் தப்பு செய்யும் அரசியல்வாதிகளுக்கு ராஜ மரியாதை.
என்ன ஒரு மோசமான சர்வாதிகார ஆட்சி நம் நாட்டில் நடக்கிறது.

மோடியை ஆதரிப்பதே வெளிநாட்டில் வாழும் இந்தியார்கள் தான்.
அவங்களையும் நிம்மதியா இருக்க விடலை மோடி.

ஜனவரி ஐந்து அன்று இன்னொரு அறிவிப்பு:
ஒரு வாக்குறுதியை மீறு இன்னொரு மாற்றம். அந்த மாற்றத்திலும் இன்னொரு மாற்றம்.
துக்ளக் ஆட்சியே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது மோடியின் ஆட்சி.

வெளிநாட்டில் இருந்து திரும்பும் இந்தியர்கள், தங்களின் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை விமான நிலையத்தில் customs அதிகாரிகளிடம்
காட்டி, ஒரு declaration form வாங்கனமாம். அதை காட்டினா தான் ரிசர்வ் வங்கியில் பணத்தை மாற்ற முடியுமாம்.
ஊருக்கு போறவன் எல்லா பணத்தையும் கையிலயா தூக்கிட்டு போவான்.
வீட்டில தான் வச்சிட்டு போவான். அந்த பணம் எல்லாம் போச்சு.
இது ஒரு திட்டமிட்ட கொள்ளை. 15.50 லட்சம் கோடியில் எவ்வளவு பணம் வங்கிக்கு வரலையோ, அதை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு
கொடுக்கும். அந்த தொகையை அதிகரிக்க தான் இப்படி மக்கள் விரோத நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபடுகிறது.
பேச வேண்டிய ஊடகங்கள், வாயை மூடிக் கொண்டு மோடிக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்.
கடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.
எங்களை ஏமாற்றலாம். கடவுளிடத்தில் ஒருவரும் தப்பிக்க முடியாது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot