Monday, December 5, 2016

அடுத்த பொதுச்செயலாளர் சசிகலா?

ஜெயலலிதா இறப்பிற்கு பின் சுப்ரமணியசுவாமி அளித்த பேட்டியில் என்ன சொன்னார் என்பதை முதலில் பார்ப்போம்.

சசிகலா கட்சியை தன் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து விடுவார்.
பன்னீர்செல்வத்தை சுதந்திரமாக செயல்பட விடமாட்டார்.
அவர் தற்காலிக முதல்வர் தான். சசிகலா தன் குடும்பத்தில் ஒருவரை
முதல்வராக்குவார். 

பன்னீர்செல்வத்திற்கு கட்சியிலும் ஆதரவில்லை, அடிமட்ட தொண்டர்களிடமும் ஆதரவு இல்லை.
அதே போல் சசிகலாவிற்கு அரசியல் ஞானமும் இல்லை.
சசிகலாவும், பன்னீர்செல்வமும் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
கட்சியில் வெறும் 30% சதவீத எம்.எல்.ஏக்கள் தான் தேவர் சமுதாயத்த்தை சேர்ந்தவர்கள்.
மீதமுள்ள 70% எம்.எல்.ஏக்கள் இவர்கள் தலைமையை ஆதரிக்க மாட்டார்கள்.
அதன் காரணமாக அதிமுக உடையும் என்று பிஜேபியின் சுப்ரமணியசுவாமி கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறியதாவது.
அவர் மிகவும் புத்திசாலி.
ஜெலலிதாவின் சினிமா அனுபங்கள் மிகவும் கொடுமையாக இருந்தது. அதன் காரணமாக
பின்னாளில் அவர் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி சோகமையாகவே இருந்தது.
மேலும், ஜெயலலிதா சசிகலாவின் முழு கட்டுப்பாடில் இருந்தார்.
அதுவும் அவர் வாழ்கையில் மகிழ்ச்சியை பறித்தது என்று அவர் கூறினார்.

தன் தலைவரை அடிமையாகவும், வீட்டுக் கைதியாகவும் வைத்து, அவரை நாட்டு மக்களுக்காக
பணியாற்ற விடாமல் தடுத்த சசிகலாவை அதிமுக தொண்டர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டால்
இதை விட பெரிய கேவலம், வெக்கக்கேடு எதுவும் இருக்க முடியாது என்று எனக்கு தோன்றுகிறது.

சசிகலாவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவரின் புகழை பாட தொடங்கி விட்டார்கள்
விலை போகும் ஊடகங்கள். ஏன் சசிகலா தலைவராக கூடாது என்ற விஷ எண்ணத்தை மக்கள் மனதில்
இவர்கள் விதைப்பார்கள்.

மக்கள் கவனமாய் இருக்க வேண்டும்.
குடும்ப ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டு தான் அதிமுகவை தேர்ந்தெடுத்தார்கள்.
இங்கும் ஒரு குடும்ப ஆட்சி ஏற்படுவதை மக்களும், அதிமுக தொண்டர்களும் அனுமதிக்கவே கூடாது.

சுப்ரமணியசுவாமியை நாம் காமெடி பீசாக தான் பார்க்கிறோம்.
ஆனால், அவர் சொல்வதை தான் மோடியே கேட்கிறார். அந்த காரணத்தினால், அவர் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
அதிமுகவை உடைத்து சில எம்.எல்.ஏக்களையும், திமுகவை உடைத்து சில் எம்.எல்.ஏக்களையும் பெற்று ஆட்சி அமைக்க பி.ஜே.பி
முயற்சி செய்யலாம். அவர்களுக்கு அது புதிதும் அல்ல. ஏற்கனவே பல முறை செய்திருக்கிறார்கள்.
அருணாசல பிரதேசத்தில் மொத்தம் இருந்த 44 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் முதலமைச்சர் உட்பட் 43 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கினார்கள்.

ஆட்சி அமைக்க திமுகவிற்கோ வெறும் 20 எம்.எல்.ஏக்கள் தான் வேண்டும்.
அவர்களும் தீவிரமாக முயற்சி செய்வார்கள்.

ஒரு பக்கம் சசிகலா, கட்சியை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தன் குடும்பத்தினர் ஒருவரை முதல்வராக்குவார்.
மறு பக்கம், பிஜேபி மறைமுகவோ அல்லது நேரடியாக ஆட்சி நடத்த முயற்சிகள் செய்வார்கள்.
கருணாநிதியை கடைசியாக ஒரு முறை முதலமைச்சர் ஆக்கிட வேண்டும் என்று திமுக தீவிர முயற்சி செய்யும்.

தமிகத்தின் எதிர்காலம் கேள்விகுறியாக இருக்கிறது.
உங்களின் கணிப்பு என்ன என்ற கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot