Monday, December 5, 2016

ஜெ மரணம். பன்னீர்செல்வத்தின் கல் நெஞ்சம்.

நேற்று இரவு 11:30 மணிக்கு முதலமைச்சர் மரணமடைந்தார்.
அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
இந்த ஒரு துயர நேரத்திலும், இந்த செய்தியை பகிர வேண்டிய அவசியம் இருக்கிறது.

2014 ஆம் ஆண்டில் முதலமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றார்.
அப்போது பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் பதவியேற்றார்கள்.
பதவியேற்கும் போது அனைவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
தங்கள் தலைவரின் மீது இவர்களுக்கு தான் எவ்வளவு பாசம் என்று ஆச்சரியப்பட்டவர்களும் உண்டு.
இவர் ஓவரா நடிக்கராங்கபா என்று கிண்டல் அடித்தவர்களும் உண்டு.

முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின், ஆளுனர் மாளிகையில் பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார்.
அமைச்சர்களும் பதவியேற்றார்கள். ஆனால் இம்முறை யாரும் ஆழவில்லை.
போன முறை அவர் உயிருடன் தான் இருந்தார். அப்போதே பதவியேற்கும் போது கண்ணீர் விட்டு அழுதார்கள்.
ஆனால், இம்முறை ஜெயலலிதா உயிருடன் இல்லை.
ஆனால் இவர்கள் அழவில்லையே என்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

ஏனென்றால், கொள்கை அளவில் வேறுப்பட்டு இருந்தாலும், கடுமையாக விமர்சித்து இருந்தாலும்,
பெரும்பாலானோர் ஜெயலலிதா இறப்பு செய்தி கேட்டு கண்ணீர் விட்டார்கள். ஏனென்றால் தமிழக அரசியலில்
35 வருடங்கள் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர்.
நாளிதழல்கள், டிவிக்களில் இவரை மக்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அதன் மூலம் மனதளவில் ஒரு பந்தம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதா தயவால் உயர்வு பெற்றவர்கள்.
ஜெயலலிதாவால் இன்றைக்கு கோடிக்கணக்கான சொத்திற்கு அதிபதியானவர்கள்.
அவர்கள் நெஞ்சம் கல் ஆனது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.

இத்தனை நாட்களும், வெறும் பதவிக்காகவும், பணத்துக்காவும் தான் நடித்துக் கொண்டிருந்தார்கள்
என்பது தெள்ள தெளிவாய் தெரிகிறது.

அரசியலில் இது சகஜமப்பா என்று சொல்வதா?
அல்லது
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot