குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு என்று சொல்வார்கள்.
அரசியலில் தேர்தலுக்கு முன்னாடி ஒரு பேச்சு, தேர்தலில் ஜெயிச்சு
ஆட்சி அமைத்த பின் வேறு பேச்சு.
இதற்கு சாட்சியாக, இரண்டு சம்பவங்களை பார்ப்போம்.
1) 22 டிசம்பர் 2013:
பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், மோடி டிவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்தார்.
கறுப்பு பணம் சுவிஸ் வங்கியில் இருக்கிறது தான் இருக்கிறது என்று இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும்
அதை நாம் கொண்டு வர வேண்டாமா?
சொன்னதை செய்தாரா மோடி?
இரண்டரை ஆண்டுகள் சுவிஸ் வங்கியில் இருந்தோ, வேறு எந்த
வெளிநாட்டு வங்கியில் இருந்தோ கறுப்பு பணத்தை கொண்டு வர
வேண்டும் என்று எந்த ஆர்வமும் காட்டவில்லை.
நாடு முழுக்க எதிர்ப்பு வருதுனு மோடி உணர்ந்தார்.
தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு பிரச்சனையும் வர கூடாது,
ஆனால் கறுப்பு பணத்தை மீட்க வந்த போர் வீரன் மோடி என்ற பெயரும் வர வேண்டும்.
அந்த யோசனையில் உதித்தது தான் 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திட்டம்.
புழக்கத்தில் இருந்த 15 லட்சம் கோடியில் 3 லட்சம் வரை வங்கிக்கு வராது.
அந்த பணத்தை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு கொடுக்கும்.
அதன் மூலம் கறுப்பு பணத்தை மீட்டு விட்டோம் என்று பெருமை பீத்திக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள்.
ஆனால் ஒரு சில தினங்களுக்கு முன்னரே 14 லட்சம் கோடியும் வங்கிக்கு வந்து விட்டது.
ஒரு லட்சம் கோடியாவது மிஞ்சாதா என்ற கோபத்தில் தான் 5000 ரூபாய்க்கு மேல் டிபாசிட்
செய்தால், இரண்டு அதிகாரிகள் கேள்வி கேட்டு வெறுப்பு ஏத்துவார்கள் என்ற கட்டுப்பாட்டை
கொண்டு வந்தார்கள். எதிர்ப்பு கிளம்பியதால் kyc இல்லாத வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களை மட்டுமே
கேள்வி கேட்போம் என்று கூறி விட்டார்கள்.
2)
2014 தேர்தலுக்கு முன்னர்,
காங்கிரஸ் அரசு மாட்டிறைச்சி ஏற்றுமதியை அதிகரிக்க slaughter house கட்ட மானியமும், வரி சலுகையுக் கொடுக்கிறார்கள்.
slaughter house - இறைச்சிக்காக விலங்குகளை கொள்ளும் இடம்.
மாடுகளை புனிதமாக பார்க்கும் இந்தியாவில், காங்கிரஸ் இப்படி ஒரு அநியாயத்தை செய்கிறது என்று கோபத்தில் முழங்கினார் மோடி.
இவர் ஆட்சிக்கு வந்து 2.5 வருடங்கள் ஆகிறது.
slaughter house க்கு இன்றும் மானியமும், வரி சலுகையும் அரசு கொடுத்து கொண்டு தான் இருக்கிறது.
மாட்டு கறியின் ஏற்றுமதியும் குறைந்தபாடில்லை, ஏறிக் கொண்டே தான் இருக்கிறது.
2011 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 14 சதவீதம் மாட்டு கறி ஏற்றுமதி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அரசியல்வாதிகளின் வீர வசனத்தையும், உணர்ச்சி பொங்கும் பேச்சையும் கண்டு ஏமாந்து போக கூடாது.
1996 இல் கருணாநிதி என்னவெல்லாம் பேசி ஆட்சியை பிடித்தார், பின்னர் அதை எப்படி எல்லாம் மறந்தார் என்பதை நாம் அறிவோம்.
2001 இல் ஜெயலலிதா தான் திருந்தி விட்டதாகவும் இனிமேல் மக்களுக்காகவே வாழ போகிறேன் என்று அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தார்.
பின்னர் என்ன நடந்தது.
2004, 2009 இல் காங்கிரஸ் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி மக்கள் வாக்களித்தார்கள்.
ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் ஏமாற்றம் தான மிஞ்சியது.
இதன் மூலம் தெரியறது என்னனா,
அரசியல்வாதிகள் தேர்ட்தலுக்கு முன் ஒருவராகவும், ஆட்சி அமைச்ச அப்புறம் வேறோருவராகவும் இருக்கிறார்கள்.
நாம இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இவங்க பேச்சை நம்பி ஏமாற போறோம்.
விழிப்புணர்வுடன் 2017 இல் காலடி எடுத்து வைப்போம்.
Thursday, December 29, 2016
மோடியின் இரட்டை வேடம்
Tags
Politics#
அரசியல்#
Share This
About Nambikkai Kannan
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment