Tuesday, December 6, 2016

சசிகலாவின் அடிமையாக வாழ்ந்தார்

நான் நேற்றைய வீடியோவில் ஒரு கருத்தை சொல்லியிருந்தேன்.

சசிகலாவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவரின் புகழை பாட தொடங்கி விட்டார்கள்
விலை போகும் ஊடகங்கள். ஏன் சசிகலா தலைவராக கூடாது என்ற எண்ணத்தை மக்கள் மனதில்
இவர்கள் விதைப்பார்கள்.

அது இப்ப வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விட்டது.

தந்தி டிவியின் பாண்டே:
------------------
"ஜெயலலிதாவின் அரசியல் கனவுகளை இனி சசிகலா முன்னெடுத்து செல்வார் -  பாண்டே"
இறுதி அஞ்சலியின் போதே, “சசிகலா அழாமல் நின்று கொண்டிருந்த போதே, சசிகலாவின் கண்களில்
கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது” என்று சொன்னவர் தான் இந்த பாண்டே.

இவர் ஏன் சசிகலா என்ற ஒரு நபரை மக்களிடம் திணிக்கிறார்?
அதிமுகவில் வேறு யாருமே அதிமுகவின் தலைமை பதவிக்கு தகுதி அற்றவர்கள் என்று
எப்படி பாண்டே முடிவு செய்தார்.

வாய்கிழிய நேர்மைவாதி போல் பேசுவார். ஆனால் நேர்மை சுத்தமாக இல்லை.

Take paandey laughing photos

தந்தி நாளிதழ்:
-----------
தண்ணீர் கூட அருந்தாமல் ஜெயலலிதா உடல் அருகே இருந்தார் சசிகலா-தந்தி
காமராஜர் அரங்கத்தின் இறுதி அஞ்சலி காட்சிகளை நேரலையாக பார்த்திருந்தால்
நீங்கள் இதை கவனித்து இருப்பீர்கள்.
1) பல முறை சசிகலா அங்கு இருந்து விலகி எங்கேயோ சென்றார்.
  அப்போதெல்லாம் சசிகலா தண்ணீர் கூட குடிக்கவில்லை என்பதை பின்னாடியே
  சென்று இந்த தந்தி டிவி நிருபர்கள் பார்தார்களாஅ?

தந்தி நிறுவனம் ஆளும் கட்சியை தலையில் தூக்கி வைத்து ஆடுவது காலம் காலமாய் நடக்கும் ஒன்று தான்.

தினமனி:
-------
Read that image file

இதை ஏன் ஜெயலலிதா இருக்கும் போது நீங்கள் சொல்லவில்லை என்று தான் கேட்க தோன்றுகிறது.
ஏன் ஜெயலலிதா தன் அரசியல் வாரிசாய் சசிகலாவை அறிவிக்கவில்லை?

75 நாட்களாய் ஏன் சசிகலாவை தவிர ஒருவரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
கவர்னருக்கு கூட அந்த அனுமதி தர்ப்படவில்லையே. கவர்னரின் அதிகாரத்தையே மிஞ்சும் அதிகாரம்
சசிகலாவிற்கு எப்படி வந்தது? ஒரு வீடியோ கேசட் கடை நடத்திய சசிகலாவின் குடும்பத்தினர்
இன்று பல லட்சம் கோடிகளுக்கு எப்படி அதிபதி ஆனார்கள். மிடாஸ் மற்றும் ஜாஸ் நிறுவனம் உட்பட
பல நிறுவனங்கள் தொடங்க பணம் எப்படி வந்தது? அதிமுக எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும்
கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத சசிகலாவின் கட்டளைகளை ஏன் ஏற்கிறார்கள்?
ஜெயலலிதா இறப்பதற்கு முன்னரே இருமுறை எம்.எல்.ஏ கூட்டம் ஏன் நடத்தப்பட்டது?
ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் மகள் தீபாவை ஏன் பல வருடங்களாக இந்த சசிகலா ஜெயலலிதாவிடம் இருந்து
பிரித்து வைத்திருக்கிறார்?

அன்ணன் மகன் தீபக்கிற்கு இறுதியாக செய்யப்படும் சடங்குகளில் ஏன் முன்னுரிமை தரப்படவில்லை?

இந்த கேள்விகளை எல்லாம் நியாயமாக இந்த ஊடகங்கள் தான் கேட்க வேண்டும்.
பல மர்மங்கள் இருக்கும் இந்த மரணத்தை பற்றி ஒரு விவாதம் நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால் அதை எதுவும் செய்யாமல், ஜெயலலிதாவின் வாழ்கையை நரகமாக்கி, தமிழ்நாட்டின் வளங்களை சுரண்டிக் கொண்டிருக்கும்
சசிகலாவிற்கு ஏன் ஜால்ரா அடிக்கிறார்கள்?
பணம் தான் முக்கியம் என்றால், ஏன் இவர்கள் ஊடக தொழிலுக்கு வந்தார்கள்?
நிச்சயம் இது ஒரு வெட்க கேடான ஒன்று.

மக்களே, ஜாக்கிரதையாக இருங்கள்.
இவர்கள் வேலையை ஆரம்பித்து விடுவார்கள். இனிமேல் சசிகலாவின் புகழை இன்னும் தீவிரமாய் பாடுவார்கள்.
விரைவில் சின்ன அம்மா என்ற பெயரை இவர்களே பிரபலப்படுத்துவார்கள்.
தலைவரை மக்கள் உருவாக்குவதில்லை. இந்த நேர்மையற்ற, முதுக்கெலும்பில்லாத ஊடகங்கள் தான்
உருவாக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot