Monday, December 5, 2016

பாண்டேவிற்கு இரங்கல் அஞ்சலி. பின்னணி என்ன?

பாண்டேவிற்கு இரங்கல் அஞ்சலி. பின்னணி என்ன?

நேற்று இரவு 11:30 மணிக்கு முதலமைச்சர் மரணமடைந்தார்.
அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
இந்த ஒரு துயர நேரத்திலும், இந்த செய்தியை பகிர வேண்டிய அவசியம் இருக்கிறது.

தந்தி டிவி பாண்டே மீண்டும் அனைவரின் கோபத்திற்கு ஆளானார்.
இதுவரை பாண்டே முதல்வர் உடல்நிலை பற்றி பல வதந்திகளை பரப்பி இருக்கிறார்.
நேற்று இன்னும் ஒன்று. மன்னிக்கவே முடியாத ஒரே வதந்தி.

ஞாயிறு மாலை முதலமைச்சருக்கு மாரடைப்பு என்று அறிக்கை விட்டார்கள் அப்பல்லோ.
நேற்று மாலை 5:30 மணிக்கு ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார் என்று பாண்டே
தான் முதலில் செய்தி வெளியிட்டார். அதை பார்த்து பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டார்கள்.
அனைவரும் உடனுக்குடன் செய்திகளை facebook, twitter, whatsapp மூலம் செய்திகளை பரப்பினார்கள்.
முதல்வர் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று தகவல்கள் குவிந்தது, அப்பல்லோ வெளியில் தொண்டர்கள்
கண்ணீர் விட்டு அழுதார்கள். தொண்டர்களுக்கும், காவல்துறைக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு பரப்பரப்பு ஏற்பட்டது.
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
அதிர்ச்சியில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும் செய்தி வந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு அப்பல்லோ டிவிட்டரில் ஒரு டிவிட் செய்தார்கள்.”மருத்துவர்கள் குழுவும், எய்ம்ஸ் மருத்துவர்களும்
முதல்வருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்” என்று சொல்லி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

ஒரு சில நிமிடங்களில் அப்பல்லோவிடம் இருந்து எழுத்துபூர்வமான அறிக்கையும் வெளியானது.
முதல்வருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில செய்தி தொலைக்காட்சிகள் முதல்வர்
மரணம் அடைந்ததாக தவறாக செய்தியை வெளியிடுகிறார்கள். இது முற்றிலும் தவறான செய்தி.
அவர்கள் தவறை உடனே திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

Take பாண்டே புகைப்படங்கள்.

தொண்டர்கள் தந்தி டிவி மீது கொலைவெறியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த பாண்டே,
ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகரை வரவழைத்து, அவரை அழவைத்து
செண்டிமெண்ட் காட்சிகளால் தொண்டர்களின் கோபத்தை தணிக்க முயற்சி செய்தது.
முதலமைச்சர் செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

1) ஞாயிறு இரவு தந்தி டிவியின் பாண்டேவும், புதிய தலைமுறையின் கார்த்திகைசெல்வனும்
அப்பல்லோவிற்கு வரவழைப்பட்டனர். அவர்களிடம் முதலமைச்சரின் உடல்நிலை பற்றியும், கொடுக்கப்படும் சிகிச்சை பற்றியும்
விரிவாக விளக்க்ப்பட்டது. அதன் பின்னர் தான் ஒரு செய்தியை வெளியிட்டார். முதல்வருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது
என்றும், 24 மணி நேரத்திற்கு முதலமைச்சர் தீவிர கண்கானிப்பில் இருப்பார் என்றும், அடுத்த செய்தி 24 மணி நேரத்திற்கு
பின்னரே வெளியாகும் என்று செய்தி வெளியிட்டார்.

நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால், அப்பல்லோவில் இருந்து அழைப்பு வரும் அளவிற்கு
ஆளும்கட்சியுடன் நெருக்கத்தில் இருக்கிறார் பாண்டே. அவர்கள் தகவல் சொல்லாமல், பாண்டே முதல்வரின் இறப்பு செய்தியை
கூறியிருக்க முடியாது. அவரிடம் கூறுங்கள் என்று சொல்லி விட்டு, சில நிமிடங்களில் அப்பல்லோ அதை மறுக்க வேண்டிய
அவசியம் என்ன? இதன் பின்னர் என்ன அரசியல் இருக்கிறது.

ஏற்கனவே அப்பல்லோ ரெட்டிக்கும், சசிகலாவிற்கும் பிரச்சனைகள் இருந்தது என்று செய்திகள் வந்தது.
“முதலமைச்சரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று சொன்ன பிறகும் அவர் வீட்டிற்கு போகாதது” ரெட்டிக்கு மிகவும்
வருத்தத்தையும் நெருக்கடியையும் பொருளாதார இழப்பையும் கொடுத்தது.

இந்த சம்பவத்திற்கும் அந்த பனிப்போர் கூட ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கலாம்.

ஊடகங்கள் மீது நம்பிக்கை இழக்க வைக்கும் இன்னொரு சம்பவம் தான் இது.
முதலமைச்சரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot