Saturday, December 3, 2016

யாரிடம் 60% இந்தியாவின் வளங்கள் இருக்கிறது? அதிர்ச்சி தகவல்

சுவிட்சார்லாண்டில் உள்ள நிதி நிறுவனம், Credit Suisse Group AG.
அந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக உலக நாடுகளின் நிதி நிலைமை பற்றி ஆய்வு அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை அளித்தது.

இந்தியாவின் 1% பணக்காரர்கள் நாட்டின் எவ்வளவு வளங்களை வைத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.
2014 ஆம் ஆண்டில் 49 சதவீதம், 2015 ஆம் ஆண்டில் இது 53 சதவீதமாய் இருந்திருக்கிறது.
இந்த ஆண்டு இது 58 சதவீதமாய் உயர்ந்து இருக்கிறது.
பட்டியலில் இந்தியா இரண்டாம் ஆண்டில் இருக்கிறது. முதலிடத்தில் ரஷ்யா இருக்கிறது.
அங்கு 1% பணக்காரர்கள் 74.5 சதவீத வளங்களை வைத்துள்ளார்கள்.
இதை ஆராயும் போது சிலவற்றை நான் கண்டறிந்தேன்.

1) 1% பணக்காரர்கள் 58 சதவீத வளங்களை வைத்திருக்கும் போது, கறுப்பு பணத்தை மக்களிடம் மீட்க வந்திருக்கிறார் மோடி.
அம்பானி, அதானி உள்ளடங்கிய 1% பணக்காரரகள் வங்கியிலோ, ஏடிஏம் இல்லோ கால் கடுக்க நிற்பதை நீங்க பாத்தீங்களா?
சட்டத்துக்கு புறம்பாக சேர்த்த சொத்துகளை யாரிடம் இருந்து மீட்க வேண்டும் என்பது மோடிக்கு தெரியாதா.
இந்த 1% ஆட்கள் யார் யார் என்பதை கண்டு பிடிப்பது தான் கடினமா?
அவர்களிடம் மீட்காமல், ஏழை மக்கள் மீது வீரமாய் பாய்கிறார். இது தான் உங்களின் துல்லிய தாக்குதலா?
1%மக்களை தாக்காமல், மீதம் உள்ள 99% மக்களை தாக்குவது தான் துல்லிய தாகுதலா?

2) 2010 இல் இருந்து 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது 4 வருடங்களில் 8.7% சதவீதம்
உயர்வு இருந்தது. 2014 முதல் 2016 பிஜேபி ஆட்சியில் இரண்டே வருடங்களில் 9.4 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
பணக்காரர்களின் வளர்ச்சி யார் ஆட்சியில் அதிகம் இருக்கிறது என்று தெரிகிறது.
பணக்காரர்கள் ஏழைகளை சுரண்டுவது யார் ஆட்சியில் அதிகம் இருக்கிறது என்று தெரிகிறது.
உடனே என்னை காங்கிரஸ்காரன்னு கமெண்ட் எழுதப் போறீங்க.
பல வீடியோக்களில் காங்கிரஸை விமர்சித்து இருக்கிறேன். கவனிக்கவும். காங்கிரஸ், பிஜேபி இருவருமே ஊழல் பெருச்சாலிகள் தான்.

3) 2000ஆம் ஆண்டில் வெறும் 36.8 சதவீதமாய் இருந்தது, 16 ஆண்டுகளில் 58 சதவீதத்தை தொட்டு இருக்கிறது.
அந்த அளவுக்கு வேகமாய் பணக்காரர்கள் நாட்டை சுரண்டி கொண்டிருக்கிறார்கள்.
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி கொண்டு இருக்கிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகி கொண்டு இருக்கிறார்கள்.
இந்த அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுகளை பணக்காரர்கள் தான் செய்கிறார்கள். அதற்கு கைமாறாக
அரசியல்வாதிகள் நாட்டையே அவர்களுக்கு எழுதி கொடுக்கிறார்கள். மக்களை பற்றி எல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்கு கவலையில்லை.
என்னிடம் ஒருவர் மன்மோகன்சிங்கிற்கும் மோடிக்கும் என்ன வித்தியாசம் என்றார்?
அ) மன்மோகனுக்கு பேச தெரியாது. மோடிக்கு பேச மட்டுமே தெரியும்.
ஆ) மன்மோகன் சோனியாவின் தயவு இன்றி ஒரு துரும்பையும் அசைக்க முடியாது.
   மோடியோ தனிக்காட்டு ராஜா. எல்லாருமே அவர் அடிமைகள் தான். அவர் சொல்வது தான் வேதவாக்கு.
   இருவருமே நாட்டுக்கு ஆபத்தானாவர்கள் தான்.

ஊழலில் குளித்த காங்கிரஸ் கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு இவரை பிரதமர் ஆக்குனாங்க.
அப்புறம் தான் தெரிஞ்சுது இவர் தொழிலதிபர்களின் புரோக்கர் என்று.
பேய் கிட்ட இருந்து தப்பிச்சி பிசாசு கிட்ட மாட்டிக்கிட்ட கதை.
உங்களை சொல்லி குற்றமில்லை.  எல்லாம் நம்ம செஞ்ச பாவம்.

ஜோக்கர் படத்தின் பாடல் தான் நியாபகம் வருகிறது, “என்னங்க சார் உங்க சட்டம். என்னங்க சார் உங்க திட்டம்”

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot