Thursday, December 1, 2016

விபச்சார ஊடகங்கள்| திடுக்கிடும் ஆதாரம்

சமீபத்தில் மஹாராஷ்டராவில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்து அதன் முடிவுகள் வெளியானது.
பிஜேபி மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி இல்லாமல் தனித்தனியே போட்டியிட்டன.
யார் யார் எவ்வளவு இடங்களை பெற்றார்கள் என்ற விவரத்தை சொல்லி விட்டு, பின்னர் இதில் என்ன சதி என்று சொல்கிறேன்.

மொத்தம் உள்ள 3705 இடங்களில், பிஜேபி - 893 இடங்களிலும், காங்கிரஸ் - 727 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் - 615 இடங்களிலும், சிவசேனா - 529 இடங்களிலும்
வெற்றி பெற்றுள்ளது. மொத்தல் உள்ள இடங்களில் வெறும் 24% மட்டும் தான் பாரதீய ஜனதா வென்றது.

மொத்தம் உள்ள 147 தலைவர் பதவிகளில், பிஜேபி 51 இடங்களிலும், சிவசேனா 25 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ்  - 18 இடங்களிலும்
வென்றுள்ளது. மொத்தம் உள்ள தலைவர் பதவிகளிலில் 34% மட்டும் தான் பாரதீய ஜனதா வென்றது.

இடங்களில் 24%, தலைவர் பதவிகளில் 34 தான் வென்றிருகிறார்கள்.
குறைந்தபட்சம் 66% இடங்களில் மக்கள் பிஜேபிக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

இதுக்கு இவங்க கட்சிகாரங்க என்ன சொல்றாங்கனு முதலில் பார்ப்போம்.
மஹாராஷ்டரா முதல்வர் பட்நாவிஸ், “இந்த வெற்றி ஒரு அலை அல்ல. இது ஒரு சுனாமி. ஏழை மக்களை பற்றி சிந்திக்கும் ஓரே கட்சி
பிஜேபி தான். அதனால் தான் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்”

மோடி - “பிஜேபி மீது நம்பிக்கை வைத்துள்ள மஹாராஷ்டரா மக்களுக்கு நன்றி. ஏழைகளின் நலன் மற்றும் வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி”


இது ஒரு சுமாரான வெற்றி தான். ஊடகங்களில் இந்த செய்தியின் தலைப்பு என்னவென்று பார்போம்.
http://www.firstpost.com/politics/maharashtra-civic-polls-those-linking-bjps-win-to-demonetisation-are-fools-says-shiv-sena-3132248.html


http://indianexpress.com/article/india/india-news-india/bjp-gains-in-maharashtra-civic-polls-says-mandate-for-demonetisation-4400747/
http://www.ndtv.com/india-news/bjp-sena-take-clear-lead-as-maharashtra-begins-4-phase-civic-body-polls-1631280
http://www.dinamani.com/india/2016/nov/29/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2606767.html
http://www.dinamalar.com/news_detail.asp?id=1659025

http://timesofindia.indiatimes.com/city/mumbai/BJP-wins-big-in-state-municipal-council-polls/articleshow/55675834.cms

தினமலர் - ”உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ., அமோக வெற்றி”
தினமனி - “மகாராஷ்டிர நகராட்சித் தேர்தல்: அதிக இடங்களைக் கைப்பற்றி பாஜக சாதனை”
ndtv - "BJP-Sena Make Big Gains In Maharashtra 'Mini-Elections' Held After Notes Ban"
Indian express - BJP gains in Maharashtra civic polls, says mandate for demonetisation
பிஜேபி சிவசேனாவும் கூட்டணி வைக்கவில்லை. தனித்தனியே போட்டியிட்டார்கள். ஆனால் ndtv இல் இருவரும் கூட்டணியிட்டு போட்டியிட்டதாக
தவறான செய்தியையும் கூறியிருக்கிறார்கள். அப்படி தவறாக சொன்னால் தான், பிஜேபி கூட்டணி 51 சதவீத இடங்களில் வெற்றி பெற்றார்கள் என்று
கவுரமாய் சொல்ல முடியும்

நிறைய பேர் செய்தியின் தலைப்பை மட்டும் தான் பார்ப்பார்கள்.
அப்படி பார்ப்பவர்களின் மனதுக்குள் தவறான செய்தி செல்கிறதே.

மேலும் இவர்கள் 500.1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டத்திற்கு, மக்கள் ஆமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள்
என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று எழுதியிருக்கிறார்கள்.

விலைபோன ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உங்களுக்கு காட்டுவதற்கு தான் இந்த வீடியோவை செய்தேன்.
அலசி ஆராய்ந்து உண்மையை அறிய வேண்டிய காலம் இது.

சுமாரான வெற்றியை வரலாறு காணாத வெற்றியாக இந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகிறார்கள்.
அரசு பரப்ப நினைக்கும் செய்தியை  ஊடகங்கள் இப்படி தான் நமக்குள் புதைக்கப்படுகிறது.
ஊடகங்கள் நடுநிலையாய் இருப்பதில்லை.சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது.

இந்த நூற்றாண்டின் மாபெரும் திட்டமிட்ட கொள்ளை தான் 500,1000 ரூபாய் செல்லாது என்ற திட்டம்.
இந்த திட்டத்தின் மூலம் பல லட்சம் பேர் ஏற்கனவே வேலையிழந்து உள்ளார்கள்.
ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு இது பெரும் துன்பத்தை தருகிறது.
வங்கி, ஏடிஏம்கள் இல்லாத கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்கை நரகமாக இருக்கிறது.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல, இதை எல்லாவற்றையும் மறைத்து
இந்த திட்டம் வெற்றி என காட்ட மோடி என்னவானாலும் செய்வார் என்பதற்கு இது ஒரு சின்ன ஆதாரம்.

பிஜேபியின் மொபைல் ஆப்பில் கருத்து கேட்டு முடிவுகளை வெளியிடுகிறார்.
ஆனால் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்ப நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏன் மோடி பயப்படுகிறார்.

கறுப்பு பணம், ஊழலை ஒழிக்கும் சூப்பர் ஹீரோ மோடி என்று சிலர் கூறுகிறார்கள்.
”ஊழலை ஒழிக்கும் முக்கிய சட்டமான லோக்பாலை ஏன் மோடி அவர்கள் 2.5 வருடங்களாக பாராளுமன்றத்தில் கிடப்பில் போட்டிருகிறார்”
என்ற கேள்வி அவர்கள் மனதில் எழவே இல்லையா?


உண்மை வெளிவந்து விடும் என்ற நடுக்கமா?

இது போல் பல உண்மைகளை தெரிந்து கொள்ள subscribe செய்யுங்கள்.
நன்றி.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot