Sunday, December 25, 2016

1.5 லட்சம் கோடி ரூபாய் இமாலய ஊழல்

நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் புது நோட்டுகளை டிசம்பர் 31க்குள் பெற்றுக் கொள்ளலாம்
என்றும் மோடி கூறினார். கறுப்பு பணம், கள்ள பணம், ஊழல், தீவிரவாதத்தை ஒழிக்க இது உதவும் என்றார்.

பின்னர் எல்லாம் மாறியது.
50 நாட்களில் எல்லாம் சரி ஆகும் என்று சொன்னார்கள்.
ஆனால் இன்னும் 5 நாட்கள் தான் இருக்கிறது. பண தட்டுப்பாடு எப்போது சரி ஆகும் என்று ஆள்பவர்கள்
சொல்லாமல் அமைதியாய் இருக்கிறார்கள்.

புழக்கத்தில் இருந்த 15 லட்சம் கோடிக்கு இணையான புது நோட்டுகள் புழக்கத்திற்கு வராது
என்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இப்படி ஒரு நடவடிக்கை தேவை என்றார் அருண் ஜெட்லி.

நேற்று பிரதமர் ரேடியோவில் பேசும் போதும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு அனைவரும்
செல்ல வேண்டும் என்று கூறினார்.

அது தான் தங்களின் ஒரே நோக்கம் என்பது தெரிந்து விடக் கூடாது என்பதற்காக
பல்வேறு இடங்களில் ரெய்ட் செய்து இதுவரை 3500 கோடி வரை பணம் பறிமுதல் செய்துள்ளார்கள்.
மக்கள் கொடுத்த் தகவலினால் தான் இது சாத்தியமானது என்று மோடி சொல்கிறார். அதுவும் பொய்.
இதெல்லாம் உழவுத்துறை மூலமாக ஏற்கனவே இவர்களுக்கு கிடைத்த தகவல்கள் தான்.
சரியான நேரத்தில் சூழ்நிலைக்கேற்ப அந்த தகவலை பயன்படுத்திக் கொள்வது தான் அரசியலாதிகளின் ராஜதந்திரம்.
இவர்களின் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்காதவர்கள் தான் பெரும்பாலும் இப்போது சிக்கியிருக்கிறார்கள்.
வரும் நாட்களில் அதிமுகவின் பினாமிகள் பலர் மீது வருமான வரி சோதனை பாயும்.

இந்த 3500 கோடியில் எவ்வளவு கணக்கில் வராத பணம், அரசுக்கு எவ்வளவு வரி வரும் என்ற தகவலை வெளியிட வில்லை,
ஏனென்றால், இந்த செய்தியை மக்கள் பார்த்தவுடன், கறுப்பு பணத்துக்கு எதிராக மோடி செயல்படுகிறார் என்ற பிம்பம்
மக்கள் மனதில் பதியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அவர்கள் ஒரளவு வெற்றியும் பெற்றார்கள். படித்தவர்கள் பெரும்பாலானோர் மோடியை கண்மூடித்தனமாய்
நம்புகிறார்கள். கிராமங்களில் மோடியை கடுமையாய் திட்டுகிறார்கள்.
ஆனால் கிராம மக்களின் மனநிலையை ஊடகங்கள் வெளிகொண்டு வர விரும்பவில்லை.

ஊழலில் குளித்த காங்கிரஸ், திமுக, அதிமுக அமைச்சர்கள், சசிகலா, லாலு பிரசாத், முலாயம் சிங், ஜெகன்மோகன் ரெட்டி,
பாஜக அமைச்சர்கள் உட்பட பல ஊழல் அரசியல்வாதிகளின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தவில்லையே.
அவர்கள் உத்தமர்கள் என்று மோடி சான்றிதழ் கொடுக்கிறாரா?
முதலில் மோடி உத்தமரா என்பதே இப்போது விவாத தலைப்பாய் ஆகியிருக்கிறது.
குஜராத் முதலமைச்சராய் இருந்த போது, சகாரா நிறுவனத்திடம் அவர் 25 கோடி லஞ்சமாய வாங்கியுள்ளார்
என்று ஒரு ஆவணம் சிக்கியுள்ளது. வலுவான ஆதாரம் கிடைத்தவுடன், மைகல் குன்கா போன்று
நேர்மையான நீதிபதி விசாரித்தால், மோடிக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எப்போது என்று தான் தெரியவில்லை. ஏனென்றால், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பே 18 வருடங்கள் கழித்து தான்
வந்தது. மேல்முறையீட்டிற்கு சென்று இரு தரப்பு வாதங்களும் 6 மாதங்களுக்கு முன்னரே முடிந்து விட்டது.
ஆனால் அதன் தீர்ப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திட்டத்தின் மூலம் 1.5 லட்சம் கோடி கொள்ளைக்கு
மோடி வழிவகை செய்துள்ளார். அதன் விவரங்களை இப்போது காணலாம்.

டிசம்பர் 31 வரைக்கும் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், paytm போன்றவற்றில்
சேவை கட்டணம் வாங்க மாட்டார்கள். ஆனால் அதன் பிறகு இவர்கள் அதை
வசூலிக்க தொடங்குவார்கள்.

1) டெபிட் கார்ட்: 0.5% முதல் 1% வரை கட்டணம் வாங்குவார்கள்.
2) கிரேடிட் கார்ட்: 1.5% முதல் 2.5%
3)PayTM/Reliance JIO money ஆகியவற்றில் - 2.5% முதல் 3.5%

ஒரு வருடத்திற்கு 75 லட்சம் கோடி ரூபாய் பணம் வங்கியில் இருந்தும், ATM இல்
இருந்தும் எடுக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் சொல்கிறது.

இந்த 75 லட்சம் கோடி ரூபாயும் காசில்லா பொருளாதாரத்திற்கு மாறுகிறது என்று வைத்துக்
கொள்வோம். சராசரியாக 2% சேவை கட்டணம் என்று வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால் 1.5 லட்சம் கோடி ரூபாய் வருகிறது.
ஒரு வருடத்திற்கு இந்த நிறுவனங்கள் மக்களிடம் இருந்து 1.5 லட்சம் கோடியை
சுரண்டுவார்கள். Reliance, PayTM, வங்கிகள், விசா, மாஸ்டர் கார்ட்
போன்ற நிறுவனங்கள் பலன் அடைவார்கள்.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற திட்டம் கறுப்பு பணத்தை ஒழிக்கவா
அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கவா?

எல்லாரையும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு கட்டாயமாக்க அழைக்கும்
அரசு, சேவை கட்டணத்தை அரசே செலுத்தும் என்று சொன்னால் நியாயம்.
ஆனால், அதை நாம தான் கட்டனுமாம்.
என்னங்க சார் உங்க திட்டம்?
மக்களை முட்டளாக்கி உங்களின் நண்பர்களான கார்ப்பரேட் கம்பெனிகளின்
நலனுக்காக திட்டம் போடுவீங்களா?

இந்த சேவை கட்டணத்தை நிரந்திரமாக ரத்து செய்ய வேண்டும்
என்று நான் இமெயில், பேஸ்புக், டிவிட்டரில் பிரதமருக்கு வேண்டுகொள் வைத்துள்ளேன்.
நீங்களும் செய்வீர்கல் என்று நம்புகிறேன்.
நாம் அமைதியாக இருந்தால், செத்து விட்டோம் என்று அடக்கம் செய்து விடுவார்கள்
நம் அரசியல்வாதிகள்.

2ஜி ஊழல் மூலம் அரசுக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.
இப்போது மோடியின் திட்டம் மூலம் மக்களுக்கு ஆண்டிற்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.
இந்த ஊழலை பற்றி ஊடகங்கள் ஏன் பேசுவது இல்லை.

எங்க youtube channel பெயர் வாங்க பேசலாம்.
இந்த வீடியோ பயனுள்ளதாய் இருந்திருந்தால், மறக்காம subscribe பண்ணிடுங்க.
எங்களோட டிவிட்டர் ஐடி @letspesalam.
டிவிட்டர், பேஸ்புக்கில் follow பண்ணுங்க.
டிஸ்கிரிப்ஷ்ன்ல லிங்க் இருக்கு.
விவாதிப்போம், நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot