Monday, October 16, 2017

தீபாவளி ஸ்பேஷல் - சுவையான பிரட் ரசமலாய் செய்வது எப்படி?

தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் ஸ்விட் பண்ணலாம்னு யோசிச்சேன்.
நிறைய ஸ்விட்கள் என் மனதில் வந்தது. அதில் பிரட் ரசமலாய் எனக்கு மிகவும் பிடித்தத ஸ்விட். எனவே அதை தீபாவளி ஸ்பெஷலாக சமைத்தேன். தீபாவளிக்கும், நோன்பிற்கும் நீங்கள்
செய்ய வேண்டிய இனிப்பு, காரங்கள் நிறைய இருக்கும். பிரட் ரசமலாயின் சிறப்பு என்னவென்றால் முன் நாளன்றே ரசமலாயை செய்து பிரிட்ஜில் வைத்து விடலாம். சாப்பிடும் போது பிரட்டை தயார் செய்து ரசமலாயில் போட்டு விட்டால் பிரட் ரசமலாய் ரெடி. அதுவும் இந்த வீடியோவில் பிரட்டை செய்வதற்கு இரண்டு செய்முறைகள் கொடுத்திருக்கிறோம். உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, அதை செய்து பாருங்கள்.

பிரட் ரசமலாய் செய்து பாருங்கள். தீபாவளிக்கு கூடுதல் சுவை சேருங்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!


தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்
பிரட் - 2 துண்டு
கும்குமப்பூ - சிறிதளவு
ஏலக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்/நெய் - தேவைக்கேற்ப
சர்க்கரை- 2-3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
1) கனமான கடாயில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து அடிக்கடி கலறவும்.
2) 2 டேபிள் ஸ்பூன் சூடு பாலை எடுத்து ஒரு சின்ன கின்னத்தில் போட்டு, சிறிதளவு கும்குமப்பூவை போட்டு சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
3) பால் நன்றாக கொதித்தவுடன், கும்குமப்பூ பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலறவும்.
4) பால் கொதிக்கும் போது, அதன் ஏடுகளை பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டி விடவும்.
5) பால் அளவு பாதியாகி, நன்றாக கெட்டியாகும் வரை அதன் ஏடுகளை பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கவும். சுமார் 4-5 முறை இவ்வாறு செய்யவும்.
6) பால் நன்றாக கெட்டியான பிறகு, ஓரத்தில் ஒட்டி வைத்த
ஏடுகளை சுரண்டி எடுத்து நன்றாக பாலுடன் கலக்கவும்.
7) ஒரு 5 நிமிடம் சிறு தீயில் வைக்கவும். பிறகு தீயை அணைத்து விடவும்.
8) சூடு ஆறியதும் பால் கலவையை சுமார் 2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும். ருசியான ரசமலாய் ரெடி!!

முதல் முறை:
1) பிரட்டின் ஓர பகுதிகளை வெட்டிவிடவும். பிறகு பிரட்டை உங்களுக்கு விருப்பமுள்ள வடிவத்தில் பல துண்டுகளாக வெட்டவும்.
2) பிரட் துண்டுகளை மெதுவாக ரசமலாயில் போடவும்.
3) கூடுதல் சுவைக்கு நறுக்கிய முந்திரி அல்லது பிஸ்தாவை தூவி விடவும்.  சுவையான பிரட் ரசமலாய் ரெடி!!

இரண்டாவது முறை:
1) பிரட்டின் ஓர பகுதிகளை வெட்டிவிடவும். பிறகு பிரட்டை உங்களுக்கு விருப்பமுள்ள வடிவத்தில் பல துண்டுகளாக வெட்டவும்.
2) பிரட் துண்டுகளில் வெண்ணெய் அல்லது நெய் தடவி, தவாவில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
3) வறுத்த பிரட் துண்டுகளை மெதுவாக ரசமலாயில் போடவும். அல்லது வறுத்த பிரட் துண்டுகளை தட்டில் வைத்து, அதன்
மேல் ரசமலாயை ஊற்றவும்.
4) கூடுதல் சுவைக்கு நறுக்கிய முந்திரி அல்லது பிஸ்தாவை தூவி விடவும்.  சுவையான பிரட் ரசமலாய் ரெடி!!

முன்னாடி நாளே செஞ்சி பிரிட்ஜில் வைச்சிட்டா, தீபாவளி அன்றைக்கு ஜாலியா சாப்பிடலாம்.

3 comments:

Post Top Ad

Your Ad Spot