Sunday, December 4, 2016

ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு. இறுதிக்கட்டத்திலா? முழு விவரம்

முதலமைச்சர் 72 நாட்களாய் அப்பல்லோவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.
ஞாயிறு மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது.
ஏற்கனவே நியுஸ் சானல்களில் நிறைய செய்திகள் பார்த்திருப்பீர்கள். முக்கிய செய்திகளை மட்டும் நான் இங்கே சொல்கிறேன்.

லண்டன் டாக்டரின் ஆலோசனைப்படி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆக்டோபர் 21க்கு பிறகு இப்போது தான் அப்பல்லோவில் இருந்து எழுத்துப்பூர்வமான அறிக்கை வந்துள்ளது.

மோடி, ராகுல் காந்தி, கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முதலமைச்சர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று
கூறியுள்ளார்கள்.

அப்போலோவில் 7 அடுக்குப்பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

தமிழக டி.ஜி.பி. யுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
அனைத்து அமைச்சர்களும் , மூத்த அதிகாரிகளும் அப்பல்லோவுக்கு வந்தனர்.

காலை 7 மணிக்கு அனைத்து காவலர்களும் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று
காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், கூட்ட நெரிசலை சமாளிக்க ராணுவத்தின் உதவி தேவைப்படும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம்
உதவி கேட்டுள்ளார்கள்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஏற்கனவே பல முறை அப்பல்லோ வந்து
தன் அத்தையை சந்திக்க முயற்சித்தார். அனுமதிக்கப்படவில்லை.
இப்போதும் வந்திருந்தார். ஆனால் இப்போதும் என்னை அனுமதிக்க வில்லை என்று வருத்தப்பட்டார்.

கர்நாட்கா- தமிழக எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கர்நாடக
முதல்வர் சித்தராமையா அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.

தமிழகத்தின் பொறுப்பு  கவர்னர் வித்தியாசாகர் ராவ் மும்பையில் இருந்து அப்பல்லோ வந்து முதலமைச்சரின் உடல்நலம்
குறித்து விசாரித்து விட்டு சென்றார். 10 நமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார்.
இதுவரை இரண்டு முறை அவர் அப்பல்லோ வந்து முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றிருக்கிறார்.
அப்போதெல்லாம் உடனே அவரிடம் இருந்து அறிக்கை வந்தது. இம்முறை அறிக்கை வரவில்லை.
அவர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போனில் பேசி விவரத்தை கூறியிருக்கிறார்.

தந்தி டிவியின் பாண்டே தெரிவித்த செய்தி.
முதல்வருக்கு 3 விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
நான்கு மணி நேரம் மருத்துவர்களின் தீவிர கண்கானிப்பில் இருப்பார்.
அதன் பின் தான் மருத்துவமனையிடம் இருந்து அடுத்த செய்தி வரும்.
அதாவது காலை 4 மணிக்கு தான் அடுத்த செய்தி வரும்.

நிலைமை சீரியஸ் போல தான் தெரிகிறது.
அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருங்கள்.
தமிழக அரசியலில் 27 வருடங்களாய் அசைக்க முடியாத ஒரு சக்தியாய் திகழ்கிறார் முதல்வர்.
ஒரு கோடி கட்சி உறுப்பினர்களின் தலைவர்.
ஏழு கோடி மக்களின் முதல்வர்.

ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பாதீர்கள்.
வேலைக்கு செல்லாதீர்கள்.
வீட்டில் பாதுகாப்பாய் இருங்கள்.

அதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அரசாங்கம் தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
பொதுமக்களுக்கு பெரும் உதவியாய் இருக்கும்.

முதலமைச்சருக்கு எது உகந்ததோ அதை கடவுள் செய்யட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot