Monday, December 12, 2016

டிஜிட்டல் இந்தியாவா? அலட்சியம் அம்பலம்

மோடி அவர்கள் இந்தியாவை less cash economy ஆக்குவது தான் குறிக்கோள்
என்கிறார். அதாவது குறைந்த அளவே கையில் பணம் இருக்கும் பொருளாதாரம்.
பெரும்பாலான பண பரிமாற்றங்கள் இண்டர்னெட்டிலும், கார்டிலும், போனிலும் நடைபெற
வேண்டும் என்று அவர் சொல்கிறார்.

நிறைய பேர் இந்த முறையில் பண பரிமாற்றங்கள் செய்யும் போது, நிரைய சைபர்
திருட்டுகள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஹாக் செய்து நம்முடைய கணக்கில்
இருந்து பணத்தை திருடுவது, நம்முடைய கார்ட் விவரங்களை திருடி, அதில் விலை உயர்ந்த
பொருட்களை வாங்கி கொள்வது போன்ற குற்றங்கள் அதிகரிக்கும்.

ஒருவர் இந்த சைபர் குற்றத்தில் பாதிப்படைந்தால் யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்?
சைபர் கிரைம் போலீஸ் இதையும் சேர்த்து இன்னும் பல சைபர் குற்றங்களையும் விசாரிப்பதால்,
அங்கு வழக்குகள் குவிந்து கிடக்கிறது. அவர்களின் சுமையை குறைக்க, ஆன்லைனில் நடக்கும்
பண திருட்டுகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு என்றே தனியாக ஒரு வாரியம் 2006 இல் தொடங்கப்பட்டது.
அதன் பெயர் Cyber Appellate Tribunal.

2011 ஜுன் மாதம் இந்த வாரியத்தின் தலைவர் ஒய்வு பெறுகிறார். அதன் பிறகு, இந்த வாரியத்திற்கு புது தலைவர்
நியமிக்கப்படவில்லை. மத்திய அரசு தான் இந்த தலைவர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமனம் செய்ய வேண்டும்.
ஆனால், 5 வருடங்களாக செய்யவில்லை.

தலைவர் இல்லாத காரணத்தினால், வாரியம் எந்த வழக்கையும் விசாரிக்கவும் இல்லை.
அதாவது, மற்ற உறுப்பினர்கள்கு எந்த வேலையும் இல்லை.
ஆனால் , 2011 இல் இருன்து 2015 வரை இவர்களுக்கு சம்பளம் கொடுக்க மத்திய அரசு 28 கோடி செலவு
செய்து இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் எல்லாரும் டிஜிட்டல் இந்தியாவிற்கு வாருங்கள் என்று கட்டளையிடுகிறார் மோடி.
மறு பக்கம் இந்த cyber திருட்டுகளை விசாரிக்கும், வாரியத்தின் தலைவரை பல ஆண்டுகளாய் நியமிக்காமல்
அலட்சியம் காட்டுகிறார். இதில் இருந்தே இவர்கள் எந்த முன் ஏற்பாடும் இல்லாமல் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்
என்பது நன்றாக புரியும்.

ஒரு பக்கம் மானியத்தை நேராக வங்கி கணக்கில் போடுவதால் மத்திய அரசுக்கு பணம் மிச்சமாகும் என்கிறார்கள்.
மறு பக்கம் வாரியத்திற்கு தலைவரை நியமிக்காமல், அந்த வாரியத்தை முடக்கி விட்டு, உறுப்பினர்களுக்கு சம்பளம் மட்டும்
கொடுத்துக் கொண்டு மக்கள் பணத்தை வீணடிக்கிறார்கள்.

யாருமே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்தற என்று ஒரு நகைச்சுவை வசனம் பிரபலம்.
அதே போல் தலைவரே இல்லாத வாரியத்தில், 2015 இல் ஒருவரை உறுப்பினராக வேலையில் அமர்த்தியுள்ளது
மத்திய அரசு. 2016 இல் இன்னொருவரை உறுப்பினராக பணி நியமனம் செய்துள்ளார்கள்.
மத்திய அரசின் நோக்கம் தான் என்ன என்று புரியவில்லை?

நவம்பர் மாதம் ஒரு வழக்கு இந்த வாரியத்தில் விசாரனைக்கு வந்திருக்கிறது.
ஆனால், தலைவர் இல்லாத காரணத்தால், இந்த வழக்கை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்
என்று கூறி விட்டார்கள். டிசம்பரும் 9ம் தேதி மீண்டும் ஒத்தி வைத்து விட்டார்கள்.
அனைத்து வழக்குகளுக்கும் இதே கதி தான்.

எந்த காரணத்திற்காக இந்த வாரியம் அமைக்கப்பட்டதோ, அதை கடந்த ஐந்து வருடங்களாக
செய்யாமல் இருக்கிறார்கள். தலைவரை நியமனம் செய்யாமல், மத்திய அரசு இந்த வாரியத்தை
முடக்கி வைத்துள்ளார்கள்.

இவர்கள் எந்த வேலையையும் செய்யாததால், மக்கள் சைபர் கிரைம் போலீஸ் அல்லது கோர்ட்டில்
புகார் கொடுக்கிறார்கள். ஆனால், அங்கெல்லாம் வழக்குகள் மலை போல் குவிந்துள்ளதால்,
பல வருடங்களாக நியாயம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் தவிக்கிறார்கள்.

ஆகஸ்ட் 8 2016 ஆம் ஆண்டு, ராஜ்ய சபா உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தகவல் தொழில்நுட்ப
அமைச்சரிடம் ஒரு கேள்வி கேட்கிறார். “இந்த வாரியத்தின் தலைரை ஏன் கடந்த ஐந்து
வருடங்களாய் நியமிக்க வில்லை? நியமிப்பதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா,
இன்னும் எவ்வளவு காலத்திற்குள் நியமிப்பீர்கள்” என்று கேட்கிறார்.

தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் என்ன சொன்னார், “2011 இல் இருந்து
புது தலைவரை நியமிக்க முயற்சிகள் செய்து வருக்கிறோம். ஆனால் பல காரணங்களினால்,
இன்னும் நியமக்கப்படவில்லை. எப்போது நியமிப்போம் என்று தெரியாது.
எந்த காலகெடுவும் தர முடியாது” என்று பதில் அளித்தார்.

என்னுடைய கேள்வி:
1) ஒரு தலைவர் பதவியை நியமிக்க ஏன் 5 வருடங்களாய் இவ்வளவு போராடிக்
கொண்டிருக்கிறார்கள்? வாரியத்தை முடக்கி வைத்து பாஜக அரசு என்ன லாபத்தை
அடைந்து கொண்டிருக்கிறார்கள்?
2) 6 லட்சம் கிராமங்கள், 30 சதவீதம் படிப்பறிவில்லாத மக்களுக்கு எந்த ஒரு பயிற்சியும்
கொடுக்காமல், திடிரென ஒரு இரவில், நீங்கள் எல்லாம் வங்கிக்கு வாருங்கள், கார்ட்
பயன்படுத்துங்கள் என்று மனிதாபிமானமே இல்லாமல் மோடி சொல்கிறார்.

இந்த இரண்டின் மூலம் மத்திய அரசு எந்த அளவுக்கு டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் எவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்கள்
என்பது தெளிவாக தெரிகிறது.

பேஸ்புக், டிவிட்டர் அல்லது மின் அஞ்சல் மூலம் பிரதமருக்கு நாம் எல்லாரும்
ஒரு தகவல் அனுப்புவோம், “CAT என்ற வாரியத்தின் தலைவரை நாட்டின் நலன்
கருதி விரைவில் நீங்கள் நியமிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஜெய் ஹிந்த்”

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot