Saturday, December 3, 2016

காங்கிரஸ் பிஜேபி கூட்டுச்சதி

வெளிநாட்டில் இருந்து இந்தியாவின் தொண்டு அமைப்புகளுக்கோ அல்லது அரசியல் கட்சிகளுக்கோ வரும்
நன்கொடை எந்தெந்த விதிமுறைகளை உட்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லும் சட்டம் தான் Foreign Contribution (Regulation) Act 2010 (FCRA).
2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி இந்த சட்டம் நிறைவேறியது.

2010 இல் இருந்து 2013 வரை காங்கிரஸும் பிஜேபியும் லண்டனை சேர்ந்த வேதாந்தா என்ற நிறுவனத்திடம்
இருந்து முறைகேடாக கோடி கணக்கான பணத்தை நன்கொடை பெற்றார்கள் என்றும் FCRA சட்டத்தை மீறி விட்டார்கள் என்றும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம் காங்கிரஸ், பிஜேபி இருவரும் FCRA சட்டத்தை மீறி
வெளிநாட்டு நிறுவனத்திடம் நிதி பெற்றுள்ளார்கள் என்றும் அவர்கள் மீது அரசாங்கமும், தேர்தல் கமிசனும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேல்முறையீட்டிற்காக இருவரும் சுப்ரீக் கோர்ட்டிற்கு சென்றார்கள்.

இப்போது தான் காங்கிரஸ் பிஜேபியின் மறைமுக நட்பு வெளிப்பட்டது.
வெளியில் வாய் கிழிய சண்டை போடுவார்கள். ஆனால், இருவருக்கும் ஒரு பிரச்சனை என்றால்,
கூடி சதித்திட்டம் தீட்டுவார்கள்.

அப்படி அவர்கள் தீட்டிய சதித்திட்டத்தில் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார்கள்.
எவருமே எதிர்பாராத வகையில் இந்த வழக்கை நகர்த்தினார்கள்.
இவர்களின் தவறை மறைக்க அதிகாரத்தை எப்படி பயன்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

இந்த வருடம் மே மாதம் 2016 ஆம் ஆண்டு, FCRA சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வருகிறார் அருண் ஜெட்லி.
Money bill ஆக இதை லோக் சபாவில் தாக்கல் செய்கிறார்.
ஒரு மசோதாவோ அல்லது சட்ட திருத்த மசோதாவோ, money bill ஆக கொண்டு வரப்பட்டால், அது லோக் சபாவில் விவாதமின்றியே
நிறைவேற்ற முடியும். ராஜ்ய சபாவில் நிறைவேற வேண்டிய அவசியம் இல்லை. லோக் சபாவில் பிஜேபியே தனி மெஜாரிட்டியில் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் வேற ஆதரவு. யாரால தடுக்க முடியும். சட்ட திருத்தம் சட்டமாகியாது.

சரி. என்ன திருத்தம் செய்தார்கள் என்று பார்போம்.
ஒரு அந்நிய நிறுவனத்தில் இந்தியரோ அல்லது இந்திய நிறுவனமோ 50% பங்குகளை வைத்திருந்தால் அது அந்நிய நிறுவனமே அல்ல என்று
ஒரு புதுவித மாற்றத்தை கொண்டு வந்தார்கள். வேதாந்தா நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் இந்தியரிடம் இருந்தது.
அதனால் தான் அதற்கு ஏற்றார் போல் சட்ட திருத்தம்.

மோடியை விமர்சிப்பவர்களை தேச துரோகிகள், இந்தியர்களே இல்லை என்கிறார்கள்.
ஆனால், மோடிக்கு நன்கொடை கொடுத்தால், அன்னிய நாட்டின் நிறுவனங்களையும் இந்திய நிறுவனம் என்று சொல்கிறார்களே.
வாழ்க மோடியின் தேசபக்தி!

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், சட்ட திருத்தம் 2010 ஆம் ஆண்டு முதல் பொருந்தும்
என்றும் சொல்லி விட்டார்கள். 2010 முதல் 2013 வரை தான் இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக நன்கொடை பெற்றார்கள்.
இப்போது இந்த சட்ட திருத்தம் 2010 இல் இருந்தே செல்லும் என்று சொல்லி விட்டதால், அந்த வழக்கே ஒன்றும் இல்லாமல் போய் விட்டது.

நவம்பர் மாதம் காங்கிரஸும், பிஜேபியும் உச்ச நீதி மன்றத்தில் தங்களின் மேல் முறையீட்டு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார்கள்.
“நாங்க சட்ட திருத்தம் கொண்டு வந்துட்டோம். அந்த நிறுவனங்கள் எல்லாம் அந்நிய நிறுவனங்களே அல்ல.
டில்லி கோர்ட்டின் தீர்ப்பும் செல்லாது” என்று சொல்லி விட்டார்கள்.

அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்கள் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி வழக்கை தங்களுக்கு சாதகமாய் நகற்றுவார்கள் என்பது
நமக்கு தெரியும். ஆனால், இங்கோ அரசியல்வாதிகள் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கு தொடர்பான சட்டத்தையே மாற்றியிருக்கிறார்கள்.
திருடர்கள் கையிலேயே அதிகாரம் இருக்கும் போது, அவர்களுக்கு என்ன பிரச்சனை?

மக்கள் தான் பாவம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot