Monday, December 5, 2016

விரட்டப்பட்ட ஜெ. சாதனை படைத்தது எப்படி?

நேற்று இரவு 11:30 மணிக்கு முதலமைச்சரின் உயிர் பிரிந்தது என்று அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் மக்கள் சோகத்தில் முழுகினார்கள். அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதுக்
கொண்டிருக்கிறார்கள்.

பள்ளி கல்லூரிகளுக்கு முன்று நாட்கள் விடுமுறை என அறிவித்து இருக்கிறார்கள்.
ஏழு நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும்.
பாண்டிச்சேரியில் ஒரு நாள் விடுமுறையும், பீகார் மாநிலத்தில் ஒரு நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சரின் உடல் போயல் கார்டனுக்கு கொண்டு வரப்பட்டது.
சம்பிராதயங்களை முடித்து விட்டு, அதிகாலை 4:30 மணிக்கு அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக
ராஜாஜி அரங்கிற்கு கொண்டு செல்லப்படும்.
இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

அவர் வாழ்கையின் முக்கியமான ஒரு சம்பவத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த ராஜாஜி அரங்கமும், போயல் கார்டனும் அவர் வாழ்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது.

1987 எம்.ஜீ.ஆர் மறைவுக்கு பின்னர், அவரது உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பல மணி நேரங்கள் தண்ணீர் கூட குடிக்காமல் எம்.ஜி.ஆரின் தலைமாட்டில் நின்று கொண்டு இருந்தார்.
கூடவே அவருடைய தோழி சசிகலாவும் இருந்தார்.
அதிமுக முக்கிய பிரமுகர்கள் ஜெயலலிதா அடுத்த அதிமுக தலைவர் ஆகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.

அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த அதிமுக பிரமுகர்கள் தீவிர முயற்சி செய்தார்கள்.
அவரை திட்டினார்கள், அடித்தார்கள், கிள்ளினார்கள். ஆனால் ஜெயலலிதா கலங்காமல் நின்றுக் கொண்டிருந்தார்.
அங்கிருந்து எம்.ஜி.ஆர் உடல் இறுதி ஊர்வல வண்டியில் ஏற்றப்பட்டது.
ஜெயலலிதாவும் ஏறினார். ஆனால் அதிமுக பிரமுகர்கள் அவரை தள்ளி விட்டார்கள்.
தன்னுடைய தலைவர் இறந்துவிட்டார், தன்னுடைய அரசியல் வாழ்க்கையும் முடிந்தது என்று
வருத்தத்துடன் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தார். கண்ணீர் விட்டு அழுதார்.
எதிர்காலம் அழிந்தது என்று வேதனைப்பட்டார்.

ஆனால் அவர் எதிர்பாராத ஒன்று நடந்தது.
எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலம் முடிந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, ஆயிரக்கணக்கான
தொண்டர்கள் போயஸ் கார்டனுக்கு வந்து, கட்சியை நீங்கள் தான் வழிநடுத்த வேண்டும் என்று சொல்லும் போது
தொடங்கியது தான் ஜெயலலிதாவின் சாதனை வரலாறு. போயஸ் கார்டன் அவர் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம்.
அந்த வீட்டை கட்ட தொடங்கிய போது அவரின் அம்மா இருந்தார்.
ஆனால் கிரகபிரவேசத்திற்கு முன்னரே அவர் இறந்து விட்டார்.

75 நாட்கள் அந்த வீட்டை விட்டு பிரிந்து அப்பல்லோவில் இருக்க நேரிட்டது.
மறுபடியும் அந்த வீட்டிற்கு உயிரோடு வர முடியாத சோகம் நிகழ்ந்து விட்டது.
வெறும் உடல் தான் போயஸ் கார்டன் வந்தது.

இதை சொல்வதற்கு முக்கிய காரணம்.
அனைவரின் வாழ்கையிலும் இது போன்ற தருணம் வரும்.
“பெரும் தோல்வி ஏற்படும் போது, எல்லாமே முடிந்து விட்டது, எதிர்காலமே இல்லை என்று தோன்றும்”.
ஆனால், அதன் பிறகும் சாதிக்க முடியும் என்று செய்து காட்டியவர் ஜெயலலிதா.
அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot