Friday, December 30, 2016

2016ல் விடை தெரியாத கேள்விகளும் மர்மங்களும்

2016ல் விடை தெரியாத கேள்விகளும் மர்மங்களும் பல இருக்கிறது.
அதில் சிலவற்றை நாம் இங்கு காணலாம்.

1) மே மாத தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தார்கள்.
 ஆனால் அதிமுக ஆட்சியை மீண்டும் பிடித்தது. எப்படி என்று தெரியவில்லை?

2) ஜுன் 24 அன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசில் நிறுவன ஊழியர் சுவாதி என்ற பெண்
  வெட்டிக் கொள்ளப்பட்டார். சென்னையை மட்டுமல்லாமல் தமிழகத்தையே இந்த சம்பவம் உலுக்கியது.
 விசாரனை தொடங்குவதற்கு முன்னரே, சுவாதியை ஒரு முஸ்லிம் இளைஞர் தான் கொன்றார் என்று
 செய்தியை பரப்பி விட்டார்கள். மத கலவரம் வெடிக்க வேண்டும் என்று சிலர் கனவு கண்டார்கள்.
 கடவுள் அருளால், தமிழகத்தில் அப்படி ஒரு அசாம்பாவிதம் நடக்கவில்லை.

 பின்னர் சிசிடிவி புகைப்பட்ம் ஒன்றை வெளியிட்டார்கள். அதன் பிறகு இன்னொரு புகைப்படத்தை வெளியிட்டார்கள்.
 இரண்டாவது புகைப்படத்தில் இருந்தவர் தான் ராம்குமார். ரயில் நிலையத்தில் ஒரு கொலையை செய்து விட்டு, அதற்கு
 மிக அருகில் ஒருவன் இவ்வளவு சாதாரணாக நடந்து செல்வானா என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை

  அவர் தான் கொலைக்காரன் என்று அவருடைய கிராமத்தில் கைது செய்தார்கள்.
 கைது செய்யும் போது ராம்குமார் ஒரு பிளேட்டால் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்தார் என்றும் கூறினார்கள்.
 இதெல்லாம் உண்மையா? ராம்குமார் தான் உண்மையான கொலைக்காரனா என்றும் தெரியவில்லை?
 விசாரனை தொடங்குவதற்கு முன்னரே, போலீஸ் கமிசனர் ராம்குமார் மட்டும் தான் இந்த கொலையை செய்தார்.
 வேறு யாரும் இந்த வழக்கில் குற்றவாளிகள் இல்லை என்று அறிவித்தார். ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை?

3) 21 ஜூலை அன்று கபாலி படம் ரீலிசானது.
  பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையே ரீலிசான இந்த படம் படம் மக்களுக்கு புடிச்சுதா இல்லையா என்று தெரியவில்லை?
  வெறும் மூன்றே தியேட்டர்களில் 50 நாள் ஓடிய இந்த படம் வெற்றிப்படமா அல்லது தோல்விப்படமா என்றும் தெரியவில்லை?

4) செப்டம்பரில் காவிரி பிரச்சனை தீவிரம் ஆனது.
  கர்நாடகாவில் தமிழர்களை தாக்கினார்கள், தமிழர்களின் உடைமைகளை சேதப்படுத்தினார்கள்.
  தமிழருக்கு சொந்தமான 45 பேரூந்துகளை தீயிட்டு கொளுத்தினார்கள்.

 தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பல முறை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் அதை கர்நாடகா மதிக்கவில்லை.
 சுப்ரீம் கோர்ட்டை அவமதித்த கர்நாடகா அரசை மோடி அரசு ஏன் டிஸ்மிஸ் செய்யவில்லை?
 டிஸ்மிஸ் பண்ணலனாலும் பரவாயில்லை, ஒரு கண்டனம் கூட தெரிவிக்கலையே. ஏன்?

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறார்கள்.
 சரி என்று சொல்லி விட்டு, பத்து நாள் கழித்து அமைக்க முடியாது, எங்களுக்கு உத்தரவிட உங்களுக்கு அதிகாரம் கிடையாது
 என்று சுப்ரீம் கோர்ட்டில் சொல்கிறார்கள். இப்படி சொல்லும் மோடி அரசு, சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் போது,
 ஒரு மாநிலத்தின் பராம்பரிய விழாக்களை தடை செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது என்று ஏன் சொல்லவில்லை?

5) சுவாதியை ராம்குமார் தான் கொன்றார் என்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, அவரை விசாரனை கைதியாக
  சிறையில் அடைத்தார்கள். 18 செப்டம்பர் 2016இல் ராம்குமார் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று சிறை நிர்வாக அறிவிக்கிறது.
  எந்நேரமும் ராம்குமாரை கண்கானிக்க ஒரு காவலர் அவர் கூடவே இருந்தார். அப்படி இருக்கும் போது, இவர் எப்படி switch box ஐ உடைத்து, மின் கம்பியை கடித்து
  தற்கொலை செய்தார் என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை?

  ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
  அலட்சியமாக செயல்பட்ட சிறை அதிகாரிகள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவில்லை?

6) ராம்குமாரின் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவர் ஒருவரும் பங்கேற்க வேண்டும், அப்போது தான் நேர்மையாக நடக்கும் என்று ராம்குமாரின்
  தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அங்கு தள்ளுபடி ஆனது. சூப்ரீம் கோர்ட் சென்றார். தனியார் மருத்துவரை அனுமதிக்க முடியாது.
  எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் பிரேத பரிசோதனையில் கலந்து கொள்வார் என்றார்கள்.
  ஆக்டோபர் 1ம் தேதி பிரேத பரிசோதனை நடந்தது. 15 நாட்களில் அதன் அறிக்கை வெளியாகும் என்று சொன்னார்கள்.
  ஆனால் அதை மக்கள் மன்றத்தில் வெளியிடவில்லை. கோர்ட்டில் சமர்பித்தார்களா என்றும் தெரியவில்லை.
  அந்த வழக்கு என்ன ஆனது? முடிந்து போனதா என்றும் தெரியவில்லை.
  ராம்குமார் தான் குற்றவாளி என்று உறுதியாகாத சமயத்தில் அவர் இறந்து விட்டார். சுவாதியை கொன்றது யார் என்ற கேள்விக்கும் பதில் இல்லை?

7) ஜெயலலிதாவை எப்படி கொன்றார்கள்? எப்போது கொன்றார்கள்?
  காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடால் செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
  75 நாட்கள் என்ன என்னமோ கதை சொல்லி கொண்டிருந்தார்கள். இறுதியாக டிசம்பர் 5ஆம் தேதி இறந்து விட்டதாக கூறினார்கள்.
  ஜெயலலிதாவை சசிகலா தான் திட்டமிட்டு கொன்று இருக்கிறார் என்பது தான் பெரும்பாலான மக்களின் இதயக் குரலாய் இருக்கிறது.
  எப்படி கொன்றார்கள்? ஜெயலலிதா உண்மையில் இறந்த தேதி எப்போது என்றும் தெரியவில்லை?

8) ஜெயலலிதா இறந்து விட்டார் என்று அறிவித்த மூன்று நாளைக்குள் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் ஒரு மனதாக சசிகலாவை
  சின்னம்மா என்றும், அவர் தான் அடுத்த தலைவர் என்றும் முழங்க ஆரம்பித்து விட்டார்கள்.
  ஊடகங்களும் சசிகலாவிற்கு ஜால்ரா அடிக்க தொடங்கி விட்டார்கள்.
  ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லாமல் மூன்று நாளைக்குள் எப்படி இவர்கள் எல்லாரும் ஒருமித்த முடிவுக்கு வந்தார்கள் என்று தெரியவில்லை?


9) மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற திட்டம் கறுப்பு பணம், கள்ள பணம், ஊழல், தீவிரவாதத்தை ஒழிக்குமா என்ற
  கேள்விக்கு பதில் இல்லை. அதை எல்லாம் மறந்து விட்டு, ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை பற்றி மட்டும் தான்
  மோடி அரசு இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். குலுக்கல் முறையில் பரிசு தருகிறோம் என்று கிரேடிட் கம்பெனி போல கூவி கொண்டிருக்கிறார்கள்.

உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்க.
உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி.
facebook, twitter இல் எங்களை follow பண்ணுங்க.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அனைவரும் மன அமைதியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot