Thursday, December 22, 2016

நம்பிக்கையே வாழ்க்கை | கதை

நம்பிக்கையே வாழ்க்கை| கதை 1|

தலைமைச்செயலர் ராம் மோகன ராவ் வீட்டில் சோதனை,
புது தலைமைச்செயலர் நியமிச்சிட்டாங்க, பிஜேபியின் ஆட்டம் சூடு பிடிக்குது,
கருணாநிதி இன்னிக்கு வீட்டுக்கு போறார், சசிகலா செண்டிமெண்ட் நாடகம் தொடருது, சசிகலா புஷ்பா பொதுச்செயலாளர் பதவிக்கு
போட்டி போட போறாங்க, டில்லி கவர்னர் ராஜினாமா.
இதுல ஒவ்வொரு செய்திக்கு பின்னாலும் ஒவ்வொரு அரசியல் இருக்கு.
அதைப்பற்றி அப்புறம் பேசலாம்.

இப்ப நான் ஒரு கதை சொல்லப் போறேன்.
சமீபத்தில் நான் படிச்ச கதை. உங்க எல்லாருக்கும் சொல்லனும்னு தோணுச்சி.
கதை சொல்லி பழக்கம் இல்லை. முயற்சி பண்றேன்.

ஒரு ஏழைக் குடும்பம்.
அந்த குடும்பத்தில கால் இல்லாத இளைஞன் ஒருவனும் அவனோட அம்மாவும் இருக்காங்க.

கால் இல்லாத காரணத்தினால, அவனால அடிக்கடி வெளிய போக முடியாது.
அதனால, அவனுக்கு நண்பர்களும் கிடையாது. அந்த தனிமை அவனை வாட்டி எடுக்கும்.
காலும் இல்லை, நண்பர்களும் இல்லை என்ற கவலை அவனை மனதளவில் ரொம்ப பாதிச்சுது.

ஒரு சமயம், அவனோட அம்மாவோட அவன் பேருந்தில் பயணம் செஞ்சிக்கிட்டு இருக்கான்.
அம்மாவோட போகும் போது அவன் லேடீஸ் சீட்டில் தான் உட்காருவான்.
அவன் லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருக்கிறதை பார்த்துட்டு, ஒரு பெண் அவனை கண்டபடி திட்றாங்க.
உடனே அவன் எழுந்துட்டான்.
கால் இல்லாத பையனையா திட்டிட்டோமேனு அந்த பெண் வருத்தத்தோட அவன் கிட்ட “ஷாரி” கேக்கறாங்க.
இந்த மாதிரி அவனமானப்படும் சம்பவங்கள் அவன் வாழ்கையில் நிறைய நடக்கும்.
அது அவனுக்கு பெரும் துயரத்தை தந்தது.

கால் இல்லாத வாழ்க்கை மிகவும் கஷ்டமா இருக்கு, மன நிம்மதி இல்லாம இருக்கு,
அவமானமா இருக்கு, “நான் இந்த உலகத்தில் வாழவே தகுதி இல்லை. அதனால் நான் தற்கொலை பண்ணிக்க போறேன்
என்று முடிவு பண்றான். வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்துத்து train க்கு காத்திட்டு இருக்கான்.

ரயில் வருகிற நேரம்...

குஷ்ட நோயால் பாதிக்கப்பட்ட ஒரு  பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.

பக்கத்தில் இருக்கும் ஒரு மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான்,
"எனக்கு குஷ்ட நோய் இருக்கு. எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா?எல்லாரும் என்னை அறுவறுப்பா தான் பாப்பாங்க.”
இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன். குழந்தையோட அம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம
என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா நான் இருக்கேன். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது, உனக்கெல்லாம் என்ன இந்த கால்
ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை சொல்லி அந்த பையனோட நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.

அவனுக்கு தற்கொலை எண்ணம் போயுடுச்சு.
வாழ்க்கையில ஒரு புது நம்பிக்கை வருது. ஒரு மனநிறைவோட தூங்கறான்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்து கிடக்கறாங்க.
நம்ம பையான் தான் செத்துட்டானோ அப்படினு பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.

ஆனால், அங்கே அந்த பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்.
நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன பிச்சைக்காரனை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான்,
"அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.

நாம் சொல்ற எந்த வார்த்தையும் இன்னொருவருக்கு நம்பிக்கையை தரவில்லை என்றாலும் பரவாயில்லை,
வாழ்க்கையை பற்றி ஒரு அவநம்பிக்கையை உருவாக்கி விட கூடாது.

பணம் தான் பிரதானம்.
நல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும்னு பெறோர்களும், சமுதாயமும் சொல்றாங்க.
அதையே தான் பள்ளி, கல்லூரிகளும் சொல்றாங்க.

நமக்கு மனசு என்ற ஒன்னு இருக்கு. அப்படினா என்ன? அது ஏன் நிக்காம பேசிட்டே இருக்கு?
மன அமைதினா என்ன? வாழ்க்கையை நிம்மதியா வாழ மன அமைதி எவ்வளவு அவசியம்?
மன அமைதியை பெறுவது எப்படி? இன்ப துன்பத்தை சமமாய் பார்க்கும் மனதை பெறுவது எப்படி?
போன்றவைகளை யாரும் சொல்லித் தருவதில்லை.
அதை பற்றி பேசுவதற்கு யாருக்கும் நேரமில்லை

அந்த புரிதல் இல்லாத காரணத்தினால் தான் நம் சக மனிதர்கள் சில பேர் வாழ்க்கை மீது நம்பிக்கை இழந்து,
தற்கொலை பண்ணிக்கறாங்க.
தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகுது.
தற்கொலை என்பது கோழைகள் எடுக்கும் முடிவு.
மன தைரியம் இருக்கும் யாரும் தற்கொலை செய்ய மாட்டார்கள்.
“ஒரு துளி துணி கூட இல்லாம நிர்வாணமா தான இந்த உலகத்துக்கு வந்தோம்.
இங்க இழக்கறதுக்கு என்ன இருக்கு? ஒன்னும் இல்ல. அப்புறம் எதுக்கு பயப்படனும். யாருக்கு பயப்படனும்?
எதை இழந்தாலும் பரவாயில்லை. தைரியமாக நிப்பேன். தைரியமா வாழ்வேன்” என்ற எண்ணம் நம் பிள்ளைகளின் மனதில் பதிய வேண்டும்.
நம்முடைய நண்பர்கள், ஊற்றார் உறவினர்கள் மனதில் பதிய வேண்டும்.

நம்பிக்கை நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot