Sunday, November 20, 2016

ஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை?

அமெரிக்கா ஜனாதியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள டொனால்ட் டிரம்பு, ஜனவரி மாதம் பதவியேற்கிறார்.
அமெரிக்கா ஜனாதிபதியின் சம்பளம் வருடத்திற்கு 400,000 $
(இன்றைய நிலவரப்படி 2 கோடியே 71 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்)

அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போதே, நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால்
சம்பளம் வாங்காமல் நாட்டுக்கு உழைப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், முதன்முறையாக அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ட்ரம்ப் தனது குடும்பத்தாரோடு சேர்ந்து நேர்காணல் வழங்கினார்

சட்டப்படி ஜனாதிபதி சம்பளம் வாங்க வேண்டும் என்பதால் ஆண்டுக்கு 1 டாலர் மட்டுமே
சம்பளமாய் பெறுவேன் என்றார்.

செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. மக்களுக்காக அனைத்தையும் செய்து
முடிப்பேன் என்றார். நிறைய வேலைகள் இருப்பதால், விடுமுறையும் குறைவாகவே எடுப்பேன் என்றார்.

தான் பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 30 லட்சம் பேரை வெளியேற்ற
திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தான் சொன்னதுபோல், மெக்ஸிகோவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சுவர் எழுப்பப்படும் என்றும்
இன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அதிரடியாகக் கூறியுள்ளார்.
இதனால் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் அரண்டு கிடக்கிறார்கள்.

1991 முதல்முறையாக பதவியேற்ற ஜெயலலிதா அவர்கள் சம்பளமாக மாதம் ஒரு ரூபாய் மட்டும் தான் பெற்றார்.
இன்று வரை அவர் பெறும் சம்பளம் ஒரு ரூபாய் தான்.
மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நம்ம கஷ்டம் எல்லாம் தீரும்.
குடும்பமே இல்லாத முதலமைச்சர். மக்களுக்காக உழைப்பார். மக்கள் நலனையே முக்கியம் என்று கருதுகிறார்.
அதனால் தான் ஒரு ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்று மக்கள் ஆனந்தம் அடைந்தார்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சம்பளத்தை லஞ்சப்பணம் பல மடங்கு அதிகம் என்பதால்,
இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்று தமிழக மக்கள் 1996 இல் உணர்ந்தார்கள்.
ஜெயலலிதாவிற்கு குடும்பம் இல்லை. ஆனால் சசிகலாவின் குடும்பத்தினர் ஆட்சி ஆதிகாரத்தில் ஆதிக்கம்
செலுத்துவதையும் அப்போது தான் மக்கள் உணர்ந்தார்கள்.

இன்னும் டிரம்ப் ஜனாதிபதியாவே பதவியேற்கவில்லை.
செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போக போக தான் தெரியும்.
அமெரிக்காவில் யார் ஆட்சியில் இருந்தாலும், பின்னால் இருந்து தொழிலதிபர்கள் தான் ஆட்சி செய்வார்கள் என்று சொல்கிறார்கள்.
இம்முறை முதன்முறையாக அரசியல் வாடை இல்லாத, ஒரு தொழிலதிபரே ஜனாதிபதி ஆக போகிறார்.
அதனால், பின்னால் இருந்து ஆட்சி செய்யும் தொழிலதிபர்களின் மனநிலை இவருடன் நன்றாகவே ஒத்து போகும்.
அது அமெரிக்க மக்களுக்கு நல்லது இல்லையே.

அமெரிக்காவில் 31 கோடி பேர் வாழ்கிறார்கள்.
தன்னை உலகத்தின் பெரிய சக்தியாக காட்டிக் கொள்ளும் அமெரிக்காவில் 4 கோடி மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.
1.5 கோடி பேர் வேலையில்லாமல் கஷ்டபடுகிறார்கள்.
அவர்கள் வாழ்வு மேன்பட டிரம்ப் உழைக்க வேண்டும் என்பது தான் எல்லாருடைய வேண்டுகோளாய் இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot