Sunday, November 20, 2016

500,1000 நோட்டு பிரச்சனை பாதிக்காத ஒரே கிராமம்

குஜராத்தில் அகோடரா என்ற கிராமத்தை ஐசிஐசிஐ வங்கி தத்து எடுத்தது.
கிராமத்தை முழுவதுமாய் டிஜிட்டல் மயமாக்குவதும், cashless economy ஆக செய்வதும் தான் குறிக்கோள்.
அதாவது இண்டர்னெட், வங்கி, ஏடிஎம் அமைத்தார்கள். கார்ட் மற்றும் போன் மூலம் பண பரிவர்த்தனைகள்.
பள்ளிகளில் கணினி, டெப்ளட் போன்றவைகளை அமைக்கவும் திட்டமிட்டார்கள்.

அந்த கிராமத்தில் 220 குடும்பங்கள் இருக்கிறது. 1200 மக்கள் இருக்கிறார்கள்.
அனைவருக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அனைத்தும் திட்டமிட்டப்படி டிஜிட்டலானது.
மக்கள் பணத்தை பயன்படுத்துவதே இல்லை. முழுவதும் கார்ட் மற்றும் மொபைல் payments thaan.
ஜனவரி 2, 2015ஆம் ஆண்டில் பிரதமர் அவர்கள் இந்த கிராமத்தை நாட்டுக்கு அற்பணித்தார்.
இன்று 500,1000 ரூபாய் பிரச்சனை அந்த கிராமத்தை பாதிக்கவில்லை.

கறுப்பு பணம், கள்ள பணம் ஒழிப்புடன், இந்த திட்டத்தின் மூலம் cashless economy என்பதும் நோக்கம் என்றும் பிரதமர் சொல்கிறார்.
40% மக்கள் படிப்பற்வில்லாத ஒரு நாட்டில், 6 லட்சம் கிராமங்கள் இருக்கிற ஒரு நாட்டில், பயிற்சிகள் அளிக்க படாமல்
cashless economy எப்படி சாத்தியப்படும்? சொல்லிக் கொடுத்தால் மக்கள் கற்றுக் கொள்வார்கள். அதனால் தான்,
இன்று அகோடரா கிராம மக்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். ஆனால், சொல்லியே கொடுக்காமல் திடிரென்று 500, 1000 செல்லாது,
நீங்கள் டெபிட் கார்ட் பயன்படுத்துங்கள் என்று சொல்வதெல்லாம் நியாயம் அல்ல.
பத்திரிக்கையாளர் மாலன் அவர்கள் எல்லா விவாதங்களிலும் பிஜேபியின் குரலை நன்கு வெளிப்படுத்துகிறார்.
சர்வ சாதாரணமாய், இது அரசின் திட்டமிட்ட செயல் தான். திட்டமிட்டு தான் பண புழக்கத்தை தடுத்து இருக்கிறார்.
வேறு வழி இல்லை என்றால் தான் மக்கள் கற்று கொள்வார்கள். அப்போது தான் cashless economy சாத்தியம் என்கிறார் மனிதாபிமானமே
இல்லாமல்.

அதே போல் தான் இண்டர்நெட்டில் கருத்து தெரிவிப்பவர்களும் சொல்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சில கேள்விகளை கேட்கிறேன்.

1)engineering முடித்து விட்டு, ஐடி கம்பெனியில் நீங்கள் வேலைக்கு சேர்கிறீர்கள்.
  முதல் நாள் உங்களிடம் ஒரு வேலையை கொடுத்து விட்டு செய்ய சொல்கிறார்கள். யாரும் உங்களுக்கு உதவ மாட்டார்கள்.
  யாரிடமும் நீங்கள் சந்தேகமும் கேட்க முடியாது. நீங்களே தான் அது என்ன வேலை என்று தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்.
  மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம். உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று?

2) ஒருவர் வங்கியில் வேலை பார்க்கிறார். அனைத்து கணக்குகள்மே புத்தகத்தில் கையில் தான் எழுதுகிறார்கள்.
  திடிரென்று ஒரு இரவு, நாளை முதல் அனைவரும் கணியில் தான் முழு கணக்கையும் எழுதி பராமரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
  உங்களுக்கு எந்த பயிற்சியும் அளிக்கவில்லை. ஆனால், மறுநாள் உங்கள் வேலையை கணினியில் செய்ய வேண்டும்.
  உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

கண்னை கட்டி காட்டில் விட்டது போல தான இருக்கும்?
அப்படி தானே, இப்பொழுது பாமரன் முழிக்கிறான்.
அவனிடம் நீ டெபிட் கார்ட் பயன்படுத்து என்று சொல்கிறீர்கள், சிறு வியாபாரியிடம் கார்ட் ரீடர் பயன்படுத்து என்று சொல்கிறீர்கள்.
அவனுக்கு என்ன புரியும்.
அவனுக்கு சொல்லிக் கொடுங்கள். அவனுக்கு புரிய வையுங்கள்.

பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார். இன்றைக்கு மை வைக்கிறார்கள், நாளை சுடு வைப்பார்கள். அடுத்த நாள் விரலையே வெட்டுவார்கள்.
கேட்டால் நாட்டு நலனுக்காக என்று சொல்வார்கள். இப்படி ஒரு மனிதாபிமானமற்ற பிரதமரை சுதந்திர இந்தியா கண்டதில்லை என்றார்.
இதுவரை 100 பேர் இருந்ததாக சொல்கிறார்கள். உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறார்கள்.

மோடியை நம்பினால் வீண் தான்.
மாநில அரசாவது, மக்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விரைவாய் மீட்டு வர வேண்டும்.
நான் மாற மாட்டேன் என்று எந்த பாமரனும் சொல்லவில்லை.
காலத்திற்கு ஏற்றார் போல் மாற அவன் தயாராக இருக்கிறான்.
அவனுக்கு புரியும் விதமாய் சொல்லிக் கொடுங்கள்.
அப்போது தான் cashless economy சாத்தியப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot