Sunday, November 20, 2016

ஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா?


பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வின், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் வாங்கி யிருந்த,
1,200 கோடி ரூபாய் உட்பட, 63 பெரும் பணக்காரர்களின், 7,016 கோடி ரூபாய் கடனை, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' தள்ளு படி செய்த தகவல்
வெளியாகியுள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இந்த செயல், 'செல்லாத நோட்டு களை மாற்றவும், புதிய ரூபாய் நோட்டுக்காகவும்,
மக்கள் அலையும் நிலையில், வாங்கிய கடனை வேண்டுமென்றே செலுத்தாத தொழிலதிபர்களை காப்பாற்றும்
நடவடிக்கை' என, எதிர்க்கட்சிகள்
விமர்சித்துள்ளன. '

அருண் ஜெட்லி கூறியதாவது:

'கிங் பிஷர்' நிறுவன அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்ட பலரின், கோடிக்கணக்கான ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, சிலர் தவறாக புரிந்துள்ளனர்.
நிதி துறையில் கையாளப்படும் ஆங்கில வார்த்தைகளை அப்படியே அர்த்தம் செய்து கொள்வதால், இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

எஸ்.பி.ஐ., வங்கியின் கணக்குப் புத்தகத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவே, கடன் என்ற பகுதியில் இடம் பெற்றுள்ள தொகை, வாராக் கடன் என்ற பகுதியில்
பதிவு செய்யப்பட்டுள் ளது. வாராக்கடனில் இடம் பெற்றுள்ளதால், அந்த கடன் தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அர்த்தமாகிவிடாது.
காங்., தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான், விஜய் மல் லையாவுக்கு கடன் வழங்கியது என்பதை யும், நினைவில் கொள்ள வேண்டும்.
எனினும், நிலு வையில் உள்ள அனைத்து தொகையையும் வசூலிப்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள் ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

நிதி அமைச்சரே - இதை தானே நீங்களும் காங்கிரசும் தொடர்ந்து செய்றீங்க.
முதலில் கடன், வாராக் கடனாய் மாறும், பின்னர் வாரா கடன் தள்ளுபடி ஆகும். அது தானே கடந்த சில ஆண்டுகளாக நடக்கிறது.
https://www.youtube.com/watch?v=z46XXwDv_G4&feature=youtu.be
தொழிலதிபர்கள் கடன் வாங்கி திரும்ப தராத, அதாவது வரா கடனாய் இருந்த 1,75,000 கோடி ரூபாயை பிஜேபி தள்ளுபடி செய்தார்கள்.
சுப்ரீம் கோர்ட் யார் யாருக்கு நீங்கள் தள்ளுபடி செய்தீர்கள் என்று கூறுங்கள் என்ற பட்டியலை கேட்கிறது.
அதை பிஜேபி தரவில்லை. வாழ்க கார்ப்பரேட் கம்பெனிகளிடம் உள்ள விசுவாசம்.

மேலும், ரீலையன்ஸ் சகோதரர்கள் - 3 லட்சம் கோடி, அதானின் - 96 ஆயிரம் கோடி, வீடியோகான் - 46 ஆயிரம் கோடி , டாட்டாஆ - 70 ஆயிரம் கோடி.
எல்லாமே வராகடன்கள். இவர்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் அல்ல.
நல்ல லாபத்தில் இயங்குகிறது(check stock paper). இவர்களிடம் இருந்து இந்த 3 லட்சம் கோடியை மீட்க ஏன நடவடிக்கை எடுக்கவில்லை.
இவர்களின் கடன்களும் வாராகடனாய் மாறி, தள்ளுபடி ஆக போகிறது என்று அர்த்தமா?
மோடி அவர்களே, உங்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு அவர்கள் தான் காசு கொடுக்கிறார்கள் என்பது தெரியும். அதற்கு விசுவாசமாய்
இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்வீர்களா.

பாமரன் ஒருத்தன் லோன் வாங்கிட்டு ஒரே மாசம் கட்டலனா, பேப்பர்ல போட்டு அசிங்கப்படுத்திறுங்க, அடியாட்களை அனுப்பறீங்க.
மிரட்டறீங்க. எவ்வளவோ பேர் தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்காங்க.
எப்பவுமே, பாதிப்பு பாமரனுக்கு தானா?
என்னங்க சார் உங்க சட்டம்.

இந்த பணம் மக்கள் நல திட்டங்களுக்கு போக வேண்டிய பணம்.
திறமையான இளைஞர்கள் தொழில் தொடங்க லோல் கேட்டா தர மாட்டறீங்க.
அவன் வெளிநாட்டுல எவனுக்கோ வேலை பார்க்கறான்.
திறமையானவர்களை பாதுகாக்காமல் வெளிநாட்டுக்கு அனுப்படறீங்க.
அப்புறம் வெளிநாட்டு நிறுவனங்களை தொழில் தொடங்க வாங்க வாங்கனு காலை பிடிச்சி கெஞ்சறீங்க.
நல்லா இருக்குது மோடி ஐயா உங்களின் தேச பக்தி?

உங்களுக்கு வாக்கு அளித்து பிரதமர் ஆக்கிய மக்களுக்கு எவ்வளவோ தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தீர்கள்.
ஒன்றை கூட உறுபடியாய் செய்யவில்லை. வாக்கு அளிச்ச பாவத்துக்கு இப்ப ரோட்டுல வங்கி முன்னாடி தவிக்க வைக்கறீங்க>
என்னங்க சார் உங்க நியாயம்?

பாமரனை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருந்தால், நிச்சயம் புரட்சி வெடிக்கும் என்பது வரலாற்று பதிவுகள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot