Sunday, November 27, 2016

மோடியின் நாடகம் அம்பலம்

மோடி அவர்களின் 500,1000 ரூபாய் செல்லாது என்ற திட்டம், அரசியல்வாதிகளுக்கும், செல்வந்தர்களுக்கும்
முன்னாடியே தெரியும் என்று வெளிப்படுத்தும் ஆதாரங்களை ஏற்கனவே சில வீடியோக்களில் வெளியிட்டு இருந்தோம்.

இதோ வருகிறது இன்னொரு ஆதாரம்.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு பணம் வழி அனுப்பும் முறை தான் liberalised Remittance Scheme(LRS).
இதன் மூலம் பணம் அனுப்புவதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவையில்லை.
வெளிநாடுகளில் படிப்பு செலவு, சிகிச்சை செலவு, சுற்றுலா செலவு அல்லது சொத்துகள் வாங்குவது போன்றவைக்கு இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒரு வருடத்திற்கு அதிகபட்சம் இவ்வளவு பணம் தான் அனுப்ப முடியும் என்று வரையரை வைத்து இருக்கிறார்கள். அது USD இல் சொல்லுகிறார்கள்.
நமக்கு புரிவதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால், இன்றைய நிகரான ரூபாய் மதிப்பில் நான் கூறுகிறேன்.

26 மே 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்.
ஜுன் மாதம் 3 ஆம் தேதி, 52 லட்சமாய் இருந்த உச்சவரம்பை, 86 லட்சமாய் உயர்த்துகிறார்.
பிரதமர் நாற்காலியில் அமர்ந்த ஒரு வாரத்திற்குள் அவசர அவசரமாய மோடி இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
இவருக்காக தேர்தல் செலவு செய்தவர்களுக்கு இவர் நன்றிக்கடன் செலுத்தினாரா?
என்ன காரணம் என்பதை ரிசர்வ் வங்கி சொல்லவில்ல்லை.

26 மே 2015 அதாவது ஒரு வருடம் கழித்து, 86 லட்சம் என்ற உச்சவரம்பை 1 கோடியே 75 லட்சமாக உயர்த்துகிறார்.
அப்போதும் என்ன காரணம் என்பதை ரிசர்வ் வங்கி சொல்லவில்லை.

ஜூன் மாதம் 2015 முதல் மே மாதம் 2016 ஆம் ஆண்டு வரை 30 ஆயிரம் கோடி ரூபாய் இந்த திட்டத்தின் மூலம்
வெளிநாட்டிற்கு அனுப்பபட்டு இருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம் ஆகிறது.
மே மாதத்திற்கு பிறகு நிலைமை என்ன என்றும் தெரியவில்லை. எவ்வளவு தொகை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

வெளிநாட்டில் இருந்து கறுப்பு பணத்தை மீட்டு வருவேன் என்று சொல்லி தான் ஆட்சியை பிடித்தார் மோடி.
ஆனால், ஆட்சிக்கு வந்த உடன் இரண்டு முறை வெளிநாட்டிற்கு அனுப்பும் பணத்தின் உச்சவரம்பை உயர்த்தியது ஏன்?
இவர் ஆட்சிக்கு வந்த போது, 52 லட்சமாய் இருந்த தொகை இன்று 1 கோடியே 72 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.
மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. 30 ஆயிரம் கோடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.
ஒரு பக்கம் கறுப்பு பணத்தை ஒழிப்பேன், வெளிநாட்டில் இருந்து கறுப்பு பணத்தை மிட்டு வருவேன் என்று மேடை பேச்சு
பேசுகிரார். ஆனால், மறு பக்கம் நம் நாட்டில் இருந்து இவ்வளவு பணம் வெளியேற அனுமதிக்கிறார்.

500,1000 செல்லாது என்ற திட்டம் 2014 ஆம் ஆண்டில் இருந்தே விவாதிக்கப்பட்டது என்று சுப்ரமணியசாமி கூறியிருக்கிறார்.
ஆனால் , அருன் ஜெட்லி சரியாக திட்டமிடாத காரணத்தினால் இரண்டு வருடங்கள் தாமதம் ஆகி விட்டது என்று சொல்கிறார்.
ஏன் சுப்ரமணியசாமி பழியை அருண் ஜெட்லி மீது மட்டும் போடுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்?
கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் அருண் ஜெட்லியை அவர் விமர்சிப்பது தொடர் கதை ஆகி விட்டது. அவர் நிதி அமைச்சர் ஆகும் வரை, அருண்
ஜெட்லியை விடப்போவதில்லை.
ஆனால், மோடியின் விருப்பம் இல்லாமல் ஒரு அமைச்சர் அவர் போக்கில் செயல்பட முடியுமா?
மோடியும் தான் இதற்கு உடந்தை.
இரண்டு வருடங்களில் பிஜேபி காரர்கள் அனைத்து கறுப்பு பணத்தையும் பல்வேறு வழிகளில் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள்.
அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சொல்லியிருக்கிறார்கள். தொழிலதிபர்கள், செல்வந்தர்களுக்கும் சொல்லி இருக்கிறார்கள்.
கட்சிகள் வெளியில் தான் சண்டை போடுவார்கள். அவர்களுக்குள் நல்ல நட்பில் தான் இருக்கிறார்கள்.

ஊழலையும், கறுப்பு பணத்தையும் ஒழிக்கும் முக்கிய சட்டமான லோக்பாலை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் மோடி.
ஊழலை அழிக்க எந்த முயற்சியுமே எடுக்கவில்லை.
வெளிநாட்டில் இருக்கும் 80 லட்சம் கோடி பணத்தையும் கொண்டு வரவில்லை.
நம்மிடம் இருக்கும் பணத்துக்கு கணக்கு கேட்கும் மோடி, ஏன் அரசியல் கட்சிகளை தகவல் அறியும் சட்டத்தின்
கீழ் கொண்டு வரவில்லை? ஏன் அரசியல் கட்சிகள் தங்களுக்கு யார் யார் நன்கொடை கொடுக்கிறார்கள்
என்ற விவரங்களை வெளிப்படுத்துவதில்லை.

இதை எதுவுமே செய்ய மனம் இல்லை.
ஆனால், 500 1000 ரூபாய் மருந்து செல்லாது என்றால், நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனையும் தீர்ந்து விடும்
என்று மக்களை ஏமாற்றுகிறார்.

பிஜேபி கட்சியின் மொபைல் ஆப்பில் கருத்து கேட்கிறார்.
92 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்று சொல்கிறார்.
எல்லாரும் ஜாதி அரசியல் செய்கிறார்கள் என்று சொல்கிறார். அதாவது caste based politics.
ஆனால் இவர் செய்வதோ app based politics.
மோடியின் நாடகம் எப்படி நகர்கிறது என்று பார்ப்போம்.
நம்மிடம் இருக்கும் முக்கல்வாசி ஊடகங்கள் காசுக்காக தங்களையே விற்பவர்கள்.

ஊடகங்கள் உங்கள் மீது திணிக்கும் செய்தியை நம்பி நம்பி ஏமாற போகிறீர்களா?
இல்லை ஊடகங்கள் உண்மையை தான் சொல்கிறதா என்று ஆராய போகிறீர்களா?
ஏதாவது ஒரு கிராமத்திற்கு செல்லுங்கள்.
ரூபாய் நோட்டு பிரச்சனையால் அவர்கள் படும் திண்டாட்டம் என்ன என்பதை நீங்களே நேரில் பாருங்கள்.
உண்மையை நீங்களே அறிவீர்கள்.

இந்த வருடத்தில் மிக சிறந்த நகைச்சுவை ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.
“பிஜேபி கட்சி ஊழலற்ற கட்சி. இதுவரை ஒரு பைசா கூட திருடாத உத்தமர்கள்.
மக்களுக்காக சேவை செய்வதை மட்டுமே இவர்களின் ஒரே கொள்கையாக வைத்து உள்ளார்கள்”

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot