Sunday, November 20, 2016

500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா?

வங்கி ஊழியர்கள் சிலரிடம் பேசியதில் இருந்து கிடைத்த தகவல்கள் இங்கே...

‘‘2,100 கோடி எண்ணிக்கையிலான 1,000, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகங்களால் ஒரு மாதத்துக்கு 300 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சடிக்க முடியும்.
அப்படி என்றால் தடை செய்யப்பட்ட 2,100 கோடி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க குறைந்தபட்சம் ஏழு மாதங்கள் ஆகும்.
ஆனால், மத்திய அரசு டிசம்பர் 30-க்குள் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. தற்போது வங்கிகளில் சுத்தமாக பணமே இல்லை.
ஒரு வங்கி, நான்கு மடங்கு பணம் கேட்டால்... ரிசர்வ் பேங்க், ஒரு மடங்கு பணம் மட்டுமே அனுப்புகிறது.

500 ரூபாய் நோட்டுகள்  - 1650 கோடி , மதிப்பு 8,25,000 crore rupees
1000 ரூபாய் நோட்டுகள் -  660 கோடி , மதிப்பு 6,60,000 crore rupees
----------------------
மொத்தம் 14,85,000 கோடி ரூபாய் - கள்ள பணம் - 400 கோடி- ஆக கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி
-------------------
மொத்த நோட்டுகள் - 2310 கோடி
ஒரு மாதத்திற்கு 300 கோடி நோட்டுகள் (2000 ரூபாய்களாய் அச்சிட்டால்) - 600000 கோடி ரூபாய்
இரண்டு மாதத்திற்கு 600 கோடி நோட்டுகள்( )                          - 12 லட்சம் கோடி

செப்டம்பரில் தொடங்கி இருந்தால், இம்மாதம் முடிவடையும். ஆனால் 500 ரூபாய் இல்லாமல் பெரும் சில்லறை தட்டுப்பாடு
ஏற்படும். ஏற்கனவே 100 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே பாதி 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க வேண்டும்.
------------
ஒரு மாதத்திற்கு 150 கோடி 500 ரூபாய் நோட்டுகள், 150 கோடி 2000 ரூபாய் நோட்டுகள்.

150 கோடி * 500  = 75000 கோடி
150 கோடி * 2000 = 300000 கோடி
------------------------
1 மாதத்திற்கு - 3.75 லட்சம் கோடி
------------------------
4 மாதங்கள் ஆகும். செப்டம்பரில் தொடங்கி இருந்தால், பிரதமர் சொன்னது போல் டிசம்பரில் முடியும்.

ஆனால், 100 ரூபாய் நோட்டுகளும் தட்டுபாட்டில் இருக்கிறது. அதையும் சேர்த்து அடிக்கும் போது, வேலை பிப்ரவரி, மார்ச் இல் தான் முடியும்.

ஏற்கனவே வங்கிகள் 25 லட்சத்தை ஆர்.பி.ஐ யிடம் கேட்டால் வெறும் 5 லட்சம் தான் தருகின்றார்கள்.
19ம் தேதி பண தட்டுப்பாட்டால், வங்கியில் முதியோர்கள் மட்டும் தான் பணம் பெற முடியும் என்று சொல்லி விட்டார்கள்.
20ந் தேதி வங்கியை மூட போகிறார்கள்.
பண தட்டுபாடு இருப்பது தெளிவாய் தெரிகிறது.

இப்படி சரியாக திட்டமிடாமல், மக்களை சிரமத்திற்கு ஆளாக்குகிறார்களே.
surgical strike ஓ, ஏதோ பண்ணுங்கள். ஆனால், தேவையான புது நோட்டுகளை அச்சடித்த பின்னர்
செய்திருக்கலாமே. இவ்வளவு ரிஸ்க் எடுத்து அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன?
அதன் பின்னால் இருக்கும் சதி என்ன.
இணைந்திருங்கள். அடுத்தடுத்த வீடியோக்களில் வெளியிடுகிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot