Thursday, November 24, 2016

சுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கிய மோடி

லோக்பால் சட்டம் தவறு செய்யும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் லோக்பால் என்ற அமைப்பு மூலம் விசாரித்து தண்டனை
வழஙக வழி வகுக்கும். லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும், 8 உறுப்பினர்களும் இருப்பார்கள்.

சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போல் லோக்பால் அமைப்பும் அரசு தலையிடின்று சுதந்திரமாக செயல்படும்.
ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வழக்கை விரைவாக விசாரித்து அதிகப்பட்சமாய் இரண்டு ஆண்டுக்குள்
அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். பிரதமர் மீது ஊழல் புகார் வந்தாலும், இந்த அமைப்பால் பிரதமரை விசாரிக்க இயலும்

ராஜ்ய சபாவில் 17 டிசம்பர் 2013 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்றது.
லோக் சபாவில் 18 டிசம்பர் 2013 ஆம் ஆண்டு ஒப்புதல் பெற்றது.
16 ஜனவரி 2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி கையெழுத்திட்டவுடன்
அது சட்டமாகிறது.

மார்ச் 2014 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிப்பு வந்தது.
மே மாதம் மோடி பிரதமர் ஆனார். லோக்பால் சட்டத்தை கிடப்பில் போட்டார்.
சும்மா போட முடியுமா? ஏதாவது நொண்டி சாக்கு சொல்லனும்.
அவர்கள் சொன்ன நொண்டி சாக்கு என்ன என்று சுருக்கமாய பார்க்கலாம்.

பிரதமர், லோக்சபா சபாநாயகர், லோக்சபாவின் எதிர்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோர்
அடங்கிய குழு தான் லோக்பால் தலைவரையும், உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும்.

இங்கு தான் பிரச்சனை இருக்கிறது.
குறைந்தபட்சம் பத்து சதவீத எம்.பிக்களை பெற்ற கட்சி தான் லோக்சபாவின் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற முடியும்.
லோக்சபாவில் மொத்தம் 545 எம்.பி.க்கள். குறைந்தபட்சம் 55 எம்பிக்களை பெறும் கட்சிக்கு தான் எதிர் கட்சிதலைவர் பதவி கிடைக்கும்.
காங்கிரஸ் வெறும் 45 எம்.பிக்களை தான் பெற்றார்கள்.
பிஜேபி நினைத்து இருந்தால் காங்கிரஸ்க்கு எதிர் கட்சி தலைவர் கொடுத்திருக்க முடியும். சட்டத்தில் அதற்கு வழி உண்டு.
ஆனால் பிஜேபி செய்யவில்லை. அதுக்கு காங்கிரஸும் உடந்தை.
எதிர்கட்சி தலைவர் இல்லையே, அப்புறம் எப்படி லோக்பாலை அமல்படுத்த முடியும்.
லோக்பால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம் என்றார்கள். எதிர்கட்சி தலைவர் என்ற வரியை நீக்கி விட்டு, லோக்சபாவின் பெரிய எதிர் கட்சியின்
தலைவர் என்று சேர்க்க வேண்டும். அதை செய்ய மோடி அரசுக்க்கு நேரம் இல்லை.
2.5 வருட மோடி ஆட்சி முடிந்தது. இன்னும் சட்டதிருத்தம் கொண்டு வரவில்லை.
1968 இல் இருந்து இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள் நமது அரசியல்வாதிகள்.

இது தொடர்பாக ஒரு பொதுநல வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரனைக்கு வந்தது.

லோக்பால் சட்டப்படி லோக்பால் அமைப்பின் உறுப்பினர் களையும்,
தலைவரையும் நியமிக்க வலியுறுத்தி,
'காமன் காஸ்' என்ற அரசு சாரா அமைப்பு, பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.

common cause சார்பில், ஆஜரான, மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷண் வாதிட்டதாவது:
2014ஆம் ஆண்டு சட்டம் ஆன பிறகும், லோக்பால் அமைப்பதில், மத்திய அரசு அளவு கடந்த தாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது;
அது, அரசியல் சட்டத்துக்கு முரணானது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் வாதிட்ட ஆட்டார்னி ஜெனரல் mukul rohatgi என்ன சொன்னார்
“தற்போது லோக்சபாவில் எதிர்கட்சி தலைவர் இல்லை. அதனால், லோக்பால் சட்டத்தில் திருத்தம் கொண்டு
வர வேண்டும். அதற்கு சிறிது காலம் ஆகும் என்றார். அதன் பிறகு லோக்பால் குழு அமைக்கப்படும் என்றார்”

”இது அரசின் தந்திரம். சுப்ரீம் கோர்ட் தலையிடா விட்டால் இவர்கள் லோக்பாலை அமைக்க மாட்டார்கள்” என்றார்
சாந்தி பூஷன்.

நீதிபதிகள் என்ன சொன்னார்கள்.

”பார்லி.,யில் சட்டம் இயற்றிய பின்னும், மத்திய அரசு, லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாதது, ஏமாற்றம் அளிக்கிறது.
ஊழலை ஒழிப்பது உங்கள் நோக்கம் என்கிறீர்கள். ஆனால் ஏன் இதில் காலம் கடத்துகிறீர்கள்.
மக்களுக்கு அரசு மீது அவ நம்பிக்கையை உண்டாக்காதீர்கள்.

2.5 வருடங்களாக எதிர்கட்சி தலைவர் இல்லை. அடுத்த 2.5 ஆண்டுகளுக்கும் இதே நிலைமை தான்.
இதை காரணமாய் கூறி லோக்பாலை அமைப்பை அமைக்காமல் இருப்பது சரி இல்லை.
உடனடியாக அமைக்க முயற்சிகள் செய்ய வேண்டிய வேண்டும்.”
என்று கூறி விசாரனையை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

500,1000 ரூபாய் ஒழிப்பின் மூலம் கறுப்பு பணம், கள்ள பணம், ஊழல், தீவிரவாதம் ஒழியும் என்கிறார் மோடி.
ஆனால் ஊழலை ஒழிக்கும் முக்கிய ஆயுதமான லோக் பாலை ஏன் 2.5 வருடங்களாக மோடி கிடப்பில் போட்டு இருக்கிறார்.
அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் காப்பாற்றுகிறார் என்பது தெள்ள தெளிவாய் தெரிகிறது.
என்னிக்குமே இவங்களோட நடவடிக்கை மக்கள் மேல் தான். அவங்க ஒரு பக்கம் சலிக்காம மக்கள் பணத்தை திருடிட்டு இருப்பாங்க.

லோக்பால் சட்டத்தை அமல்படுத்தி எளிதான முறையில் ஊழலையும், கறுப்பு பணத்தையும் ஒழிக்கும் வழி இருக்கும் போது,
ஏன் 125 கோடி மக்களை வாட்டி எடுக்கும் ரூபாய் நோட்டு திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார்?
சிந்தித்து பாருங்கள்.
காங்கிரஸும் பிஜேபியும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு என்பது தான் இந்த செய்திக்கு நன்றாக பொருந்தும்.

கண்மூடித்தனமா அரசியல்வாதிகளை நம்பாதீங்க.
நடுநிலையாய் இருந்து பார்க்கும் போது தான் தெளிவான உண்மை நமக்கு தெரியும்.

மோடியின் பக்தர்களே, உஙகளின் கருத்துகளை அறிய ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot