Friday, November 25, 2016

திட்டமிட்டு கிராமங்களை அழிக்கும் மோடி

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்துக்கும்கீழ்தான்.
அவங்க மீது மட்டும் தான் மோடி தாக்குதல் தொடுத்தாரா? இதன்பின்னணியில் பல விஷயங்கள் நடக்க இருக்கின்றன"
என அதிர வைக்கிறார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் .புகழேந்தி மற்றும் மருத்துவர் ரமேஷ்.

இந்தியாவின் மொத்த வளர்ச்சியில் 46 சதவீதம் என்பது முறைசாராத தொழில்களில்(informal sector) இருந்து வருகிறது.
இதன்மூலம் 80 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
மொத்த ஜிடிபியில் 46%.

மோடியின் திட்டத்தால் பண புழக்கம் குறைவாக இருப்பதால் முறைசாராத தொழில்கள் முடங்கும். 80% மக்களின் வேலைவாய்ப்பிற்கு பாதிப்பு உண்டாகும்.

நமது நாட்டில் 10 கோடி வணிக கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் 2 சதவீத கடைகள்தான் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றன.
இவர்கள் எல்லாரும் ஒரே இரவில் கார்ட் முறைக்கு மாறனுமா?
அது நடைமுறை சாத்தியமா? என்னங்க சொல்றீங்க மோடி? நல்லா போடறீங்க திட்டம்?
cashless economy இல் சூவிடன் தான் முதலிடத்தில் இருக்கிறது.
அங்கு ஒரு நாளில் மாற்றம் நிகழவில்லை. 20 ஆண்டுகள் ஆனது. மக்களுக்கு எவ்வித சிரமத்தையும் கொடுக்காமல்,
அருமையான திட்டம் போட்டு செயல்படுத்தியதால் தான் இது சாத்தியமானது.

நமது நாட்டில் 93 கோடி மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். 6 லட்சம் கிராமங்கள் இருக்கிறது.
இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு 5 ஏ.டி.எம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன.
அதுவே, நகரத்தில் 40 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இங்கு ஒரு லட்சம் பேருக்கு 31 ஏ.டி.எம்கள் உள்ளன.

அதிக மக்கள் கிராமங்களில் இருக்காங்க. ஆனால், ஏன் குறைவான் ஏடிஎம் கள் அங்கு இருக்கிறது?
cashless economy என்று சொல்லும் மோடி அவர்கள், கிராமங்களில் ஏடிஎம்மின் அளவை ஏன் உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை?

கிராமங்களில் வாழும் 93 கோடி மக்கள் 98% பண பரிவர்த்தனைகளை பயன்படுத்துகிறார்கள்.
அவர்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று மோடிக்கு தெரியாதா?

இதைவிடக் கொடுமை, இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு அடையாள அட்டையே இல்லை என்பதுதான்.
இவர்கள் எந்த அடையாளத்தைக் காண்பித்து, வங்கிகள் பணம் பெறுவார்கள்.

அதேபோல், புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் அளவு 400 கோடி என்கின்றனர்.
இவற்றை ஒழிப்பதற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய நோட்டுகளை அரசு அச்சடிக்கிறது.
மொத்த கறுப்புப் பணத்தின் அளவு 30 லட்சம் கோடி. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளன.
தவிர, ரியல் எஸ்டேட், நகைகள் எனப் பல வகைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மோடியின் இந்த திட்டடத்தால் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் வந்து சேரப் போவதில்லை.

இப்ப தெரியுதா மோடியின் திட்டம் என்னவென்று?
கிராமங்களை அழிக்க வேண்டும். சுயமாய் தொழில் செய்து சுயமரியாதையாய் வாழும் சிறு வணிகர்களின் தொழில்களை அழிக்க வேண்டும்.
விவசாயிகளை அழிக்க வேண்டும்.

இவர்கள் ஆட்சிக்கு வந்து 2.5 வருடங்கள் ஆகிறது. விவசாயிகளின் பிரச்சனைகள் குறைக்கப்பட்டதா?
விவசாயிகளின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கு.
புல்லட் ரெயில் விட காசு இருக்கு. விவசாயத்தை மேம்படுத்த காசு இல்லையா?
திட்டமிட்டு விவசாயிகளை விவசாயத்தில் இருந்து துரத்தி கொண்டு இருக்கிறார் மோடி.

இதை எல்லாம் அழிச்சிட்டு மோடி என்ன பண்ணப்போறார் என்று யோசிக்கிறீங்களா?
கிராமங்கள் கூறு போட்டு அம்பானிக்கும், ஆதானிக்கும் கொடுக்கப்படும்.
மொத்த விவசாயம், கோழி ஆடு பண்ணை, மளிகை கடைகள் எல்லாமே கார்ப்பரேட் மயமாகும்.
சுயமரியாதையாய் கவுரவமாய் வாழ்ந்த சிறு வணிகர்களும், விவசாயிகளும் அவர்களிடம் கூலி காரர்களாய் அடிமை வாழ்வு வாழனும்.

கிராம மக்களையும் அவர்களின் தொழிலையும் திட்டமிட்டு அழிக்கிறார் மோடி.
நகரத்து ஜென்மங்கள் டிவிட்டர்ல ஜிவி பிரகாஷை யோசிச்சு யோசிச்சு திட்டிக்குட்டு இருக்காங்க.
திருந்தவே மாட்டாங்கபா இவங்க?

இன்னைக்கு அவங்க படற கஷ்டம் என்னிக்குமே உங்களுக்கு வராதுனு சொல்ல முடியுமா.
தனக்கு வந்தால் தான் வலியும் வேதனையும் புரியும்.

கடவுளே, ஏழை கிராம மக்களை காப்பாத்து.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot