Monday, November 21, 2016

மோடியின் திருமங்கலம் பார்முலா


நண்பர் ஒருவர் கூறினார்:
மோடி தேசத்துக்காக தான் இந்த திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்ய இயலாத ஒன்றை துணிச்சலாய் மோடி செய்திருக்கிறார்.
பிப்ரவரி மாதம் நான்கு மாத தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்த தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பு
உருவாகக் கூடும் என்பது மோடிக்கு தெரியும். எனினும் தேசத்தின் நலனுக்காக இதை அவர் செய்திருக்கிறார்
என்றார்.

எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
“மோடி அவர்கள் தேர்தலை பற்றி கவலைப்படாமல் தேசத்தின் நலன் பற்றி மட்டும் சிந்திப்பவரா”
அது தொடர்பான இரண்டு சம்பவங்களை பகிர விரும்புகிறேன்.

1) ஆக்டோபர் மாதம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
முதலில் ஒப்புக் கொண்ட மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு பிறகு ஆக்டோபர் 3ம் தேதி காவிரி மேலாணமை
வாரியம் அமைக்க முடியாது என்று அந்தர் பல்டி அடித்தது.

சூப்ரீம் கோர்டின் தீர்பை நான்கு முறை அமல்படுத்தாமல் சூப்ரிம் கோர்ட்டை அவமதித்த
கர்நாடகா மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் பிஜேபி அரசு?

ஏன்? 2018 கர்நாட்கத்தில் தேர்தல்.
தேர்தல் வெற்றியை பாதிக்க கூடாது என்ற காரணத்தால் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தார்களே?
பல லட்சம் விவசாயிகளின் வயிற்றில் அடித்தார்களே?
தேர்தலை பற்றி கவலைப்படாமல் தேசத்தின் நலம் பற்றி மட்டும் சிந்திப்பவரா மோடி?


2)
ஏப்ரம் மாதம் 2014ம் ஆண்டு மோடி பிரதமர் ஆவதற்கு முன் பீகாரில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பீகார் வளர்ச்சிக்காக ஒரு பெரிய தொகையை கொடுப்போம் என்றார்.

நவம்பர் 2015 மாதம் பிகாரில் சட்டசபை தேர்தல் நடந்தது.
செப்டம்பர் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 
தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்பதால்
ஒரு மாதத்திற்கு முன், ஆதாவது ஆகஸ்ட் மாதம் 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக பீகார் செல்கிறார்.
பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் முதல் முறையாக பீகார் செல்கிறார்.

பீகார் நலதிட்டங்களுக்காக மத்திய அரசு 1லட்சத்து 25 கோடி கொடுக்கும் என்கிறார்.
வரப்போகும் தேர்தலுக்காக தான் இதை அறிவித்தார் என்பது குழந்தைக்கும் தெரியும்.
தேர்தலை பற்றி கவலைப்படாமல் தேசத்தின் நலம் பற்றி மட்டும் சிந்திப்பவரா மோடி?

இது போல் பல சான்றுகளை என்னால் தர முடியும்.
தேசநலன் என்ற வார்த்தையில் மக்களை ஏமாற்றுகிறார் மோடி.
அவருக்கு மூன்று மட்டுமே முக்கியம் தொழிலதிபர்கள், கட்சி, ஆட்சி.
எந்த ஒரு நடவடிக்கையிலும் இந்த மூன்றிற்கும் பிரச்சனை வராது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்.
மக்கள் நலன் அவர் மனதில் நான்காம் இடம் தான்.

பிப்ரவரி மாதம் நான்கு மாநில தேர்தல்களில், அவர்கள் திமுக அதிமுகவின் உக்தியை தான் கையாளப் போகிறார்கள்.
தேர்தலில் இவர்கள் எல்லாம் மறைந்து மறைந்து மக்களுக்கு காசு கொடுத்தார்கள்.
பிஜேபி அரசு ஏழை மக்களுக்கு 10000 ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்ய போகிறார்.
தினமலர் மற்றும் ஹிந்து பத்திரிக்கையில் இந்த செய்தி வந்திருக்கிறது.
இது என்னுடைய கற்பனை அல்ல.

இது ஒன்னு போதாதா? தேர்தல் வெற்றிக்கு.
என்னமா மூளையா மோடிக்கு?
கறுப்பு பணத்தை ஒழிக்க பிறந்தவர் மோடி என்ற தோற்றத்தையும் உருவாக்கியாச்சு.
தேர்தல் வெற்றியும் உறுதியாச்சு.

தேர்தல் வெற்றியை பற்றி மோடி கவலைப்படவில்லை என்று சொல்வதற்கு முன்
கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot