Monday, November 21, 2016

”கங்கையை சுத்தம் செய்யவே வேண்டாம்” கோர்ட் அதிரடி

நவம்பர் 17 அன்று times of india வில் வந்த செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அக்டோபர் 18ம் தேதி 2010 இல் அமைக்கப்பட்டது.
இந்த தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை, "விரைவு கோர்ட்' முறையில் விசாரிக்கிறது.
இதன் தலைமையிடம் டில்லியில் உள்ளது.

சுற்றுச்சூழல், காடுகள், அனைத்து விதமான இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றை பேணிக் காப்பது,
இதன் கடமை. இயற்கை வளங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பது, சேதப்படுத்துவது போன்ற பிரச்னைகளின் போது,
ஆராய்ந்து முடிவு எடுக்கும் உரிமை இதற்கு உள்ளது.

சுற்றுச்சுழல் ஆர்வலரும், வக்கீலுமான MC Mehta என்பவர் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம் பற்றி இந்த தீர்ப்பாயத்தில் ஒரு மனு கொடுக்கிறார்.
“இந்த திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள் 764 தொழிற்சாலைகளின் கழிவுகள் கங்கையில் கலக்கிறது என்று கூறுகிறார்கள்.
உண்மையில் 1.5 லட்சம் தொழிற்சாலைகள் அதன் கழிவுகளை கங்கையில் கலக்கிறது.
அதன் பட்டியலையும் நான் சமர்ப்பித்துள்ளேன்.”

எந்தெந்த வடிகால்களில் இருந்து கங்கை நதிக்கு கழிவுகள் வருகிறது என்ற விவரங்களை சமர்பிக்க
வேண்டும் என்று அதிகாரிகளிடம் நீங்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளீர்க்ள்.
ஆனால் அதிகாரிகள் அதை சமர்பிக்கவில்லை.


இந்த பெஞ்சிற்கு தலைமை தாங்கிய Justice Swatanter Kumar:

நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சகம் நீங்கள் இருவருமே
கங்கயை சுத்தப்படுத்தும் வேலையில் ஏற்படும் தவறுகளில் பொறுப்பேற்க வேண்டும்.
ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு கடமையை செய்யாமல் இருக்க முடியாது.
நாங்கள் போடும் உத்தரவில் ஒரு சதவீதம் கூட நீங்கள் செய்வதில்லை”

“நீங்கள் கங்கையை சுத்தப்படுத்தும் வேலையை நிறுத்துங்கள்.
எங்களிடம் இருந்து உத்தரவு வரும் வரை ஒரு ரூபாய் கூட இந்த திட்டத்தில்
நீங்கள் செலவழிக்க கூடாது” என்று கடும் கண்டனத்துடன் உத்தரவிட்டார்.

நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சகம் இந்த திட்டத்தில்
ஆர்வம் காட்டாத காரணத்தினாலும், அதிகாரிகளை பொறுப்பாக செயல்படாத
காரணத்தினாலும் தான் இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்காக 20 ஆயிரம் கோடி அதுக்கப்பட்டது.
இதுவரை 3000 கோடி செலவழித்துள்ளார்கள்.
ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதையும் செய்யவில்லை
என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறுகிறது.

மோடி அவர்கள் வெற்றி பெற்ற வாராணாசியில் தான் கங்கை நதி இருக்கிறது.
கங்கையை சுத்தப்படுத்துவோம் என்று மோடி தன்னுடைய பிரச்சார மேடைகளில்
அடிக்கடி கூறினார். உத்தர பிரதேசத்தில் அவர்கள் மாபெரும் வெற்றி அடைந்ததற்கு
இதுவும் ஒரு காரணம்.

பிரதமர் ஆன பிறகு நீர்வளத்துறையின் முக்கியமான வேலை இது தான் என்று மோடி கூறினார்.
2019க்குள் சுத்தம் செய்யபடும் என்று உறுதி அளித்த மோடி அரசுக்கு இந்த உத்தரவு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot