Sunday, November 20, 2016

மோடிக்கு எதிராக துணிச்சலாக சீறும் விஜய்

மூத்த நடிகர்கள் மக்களின் துன்பத்தை பற்றி கவலையில்லாமல், மோடியின் திட்டத்தை
வாய் கூசாமல் பாராட்டினார்கள். கள நிலவரம் வேறு, அவர்கள் பேசுவது வேறு என்று மக்கள் வருத்தப்பட்டார்கள்.

இந்நிலையில் விஜய் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் என்ன சொன்னார் என்பதை பகிர்வதற்கு முன் சில தகவல்களை சொல்ல விரும்புகிறேன்.

எல்லா நடிகர்களும் ஆதரவு தெரிக்கிறாங்க. ஒருவர் இந்த திட்டத்திற்கு எதிரான கருத்து சொல்லும் போது பிஜேபி மூலம்
இவருக்கு நிறைய பிரச்சனைகள் வரும் என்பதையும் விஜய் அறிவார்.
கறுப்பு பணம் இருக்கு, அதனால் தான் கதறுகிறார் என்று சொல்லுவாங்க.
தேசபக்தி இல்லாதவன் என்று பிஜேபி சொல்வாங்க.
மத்திய அரசு வருமான வரி சோதனை நடத்துவாங்க.
இதை பற்றி எல்லாம் கவலை இல்லாம துணிச்சலாய் பேசியது வரவேற்கத்தக்கது.
மூத்த நடிகர்களுக்கு இல்லாத தைரியம்
விஜய்க்கு இருப்பதை மக்கள் வரவேற்கிறார்கள்.

அவர் என்ன சொன்னார் அப்படினா:

வரவேற்கத்தக்க முயற்சி தான்.
நோக்கம் பெரிதாக இருக்கும் போது, பாதிப்பு நிச்சயமாக இருக்கும்.
ஆனால் நோக்கத்தை விட பாதிப்பு பெரிதாகி விட கூடாது.
சில விஷயங்களை மத்திய அரசு தவிர்த்து இருக்கலாம்.

மக்கள் பசிக்கு சாப்பிட முடியாம, மருந்து மாத்திரை வாங்க முடியாம,
வெளியுரில் இருந்து ஊர் திரும்ப முடியாம, அந்ந்னிக்கு கிடைக்கிற 500,1000 த்தை வச்சிக்கிட்டு
சின்ன சின்ன வியாபாரம் பண்றவங்க ஆகியோர் தேவையில்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு பேத்தியோட கல்யாணத்துக்காக, ஒரு பாட்டி நிலத்தை விற்று பணத்தை கொண்டு
வராங்க. அந்த பணம் செல்லாது என்றவுடன் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு போயிருக்காங்க.
ஒரு மருத்துவமனையில் கைக்குழந்தை ஒன்று சிகிச்சைக்கு காசு இல்லாமல் இறந்து
போயிடுச்சு. இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காமல் தவிர்த்து இருக்க வேண்டும்.

நாட்டில் 20% பணக்காரங்க இருப்பாங்க. அதில் ஒரு சில பேர் தவறு பண்ணுவாங்க.
அதுக்காக மீதி இருக்கிற 80% மக்கள் என்ன தப்பு செஞ்சாங்க?
இவ்வளவு பெரிய திட்டம் நடைமுறைபடுத்தும் போது, என்னென்ன பிரச்சனைகள்
வரும் என்றதை  முன் கூட்டியே தெரிஞ்சிக்கிட்டு, அதற்கு தகுந்த நடவடிக்கைகள்
முன்னாடியே எடுத்திருக்கனும் என்பது தான் தாழ்மையான கருத்து.

முதியோர்கள், கிராம மக்கள் இன்னும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
அவங்களின் சிரமங்களை சீக்கிரம் மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என்றார்.
பத்திரிக்கையாளர் கேள்விகள் கேட்பதற்கு முன்னர் கிளம்பி விட்டார்.

விஜய் கறுப்பாக நிறைய பணம் சம்பளமாக வாங்குகிறார் என்பதை நான் அறிவேன்.
எனினும், அதில் இருந்து தப்பிக்க மற்ற நடிகர்களை போல் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்காமல்,
மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த விஜய் அவர்களை நான் நிச்சயம் பாராட்டுகிறேன்.

விஜயின் கருத்துக்கு உடனடியாக பிஜேபியின் மாநில பொதுசெயலாலர், “மக்கள் அவ்வளவு கஷ்டப்படறாங்க
அப்படின்னா, விஜயே ரோட்டில் நின்று உதவ வேண்டியது தானே” என்று அவர் சொல்றார்.

பிஜேபி தலைவர்களே, உங்களின் கட்சி தொண்டர்களை மக்களுக்கு உதவி செய்ய அனுப்பி இருக்கலாமே.
தேர்தல் சமயத்தில் மட்டும் தான் உங்களின் தொண்டர்கள் வேலை செய்வார்களா?

இவர் மட்டுமல்ல, பிஜேபியின் நிர்மலா சித்தாராமன், ராகவன், எச்.ராஜா போன்றவர்கள்
மக்களின் துன்பத்தை பற்றி கவலைப்படாமல் ஒரு திமிராக தான் பேசி கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கிடைக்கும் 1% வாக்குகள் கூட இனிமேல் இவர்களுக்கு கிடைக்க கூடாது என்பதே என் விருப்பம்.

இதை கேட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot